Homeசெய்திகள்தேர்தல் 2026உதகையில் கடுப்பான நடிகை குஷ்பு... மஞ்சூரில் தேர்தல் பிரச்சாரத்திற்கு பாஜக வேட்பாளர் வராததால் அதிருப்தி...

உதகையில் கடுப்பான நடிகை குஷ்பு… மஞ்சூரில் தேர்தல் பிரச்சாரத்திற்கு பாஜக வேட்பாளர் வராததால் அதிருப்தி …..

-

- Advertisement -

உதகையில் பிரச்சாரம் முடிந்து பாஜக அலுவலகத்திற்கு செல்லாமல் குஷ்பு அதிமுக அலுவலகத்திற்கு சென்றதால் பாஜக தொண்டர்கள் அப்செட்.உதகையில் கடுப்பான நடிகை குஷ்பு...  மஞ்சூரில் தேர்தல் பிரச்சாரத்திற்கு பாஜக வேட்பாளர் வராததால் அதிருப்தி .....உதகை சட்டமன்ற தொகுதியில் NDA கூட்டணி சார்பாக பாஜக சார்பாக போஜராஜன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவருக்கு ஆதரவாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அண்ணாமலை ஹெலிகாப்டரில் வந்து பிரச்சாரம் செய்துவிட்டு சென்ற நிலையில், இன்று நடிகையும் பாஜக மாநில துணைத்தலைவருமான குஷ்பு உதகைக்கு வந்துள்ளாா். ஹெலிகாப்டர் மூலம் தீட்டுக்கல் பகுதிக்கு வந்திருந்த குஷ்புவை வரவேற்க பாஜக கட்சியினர் யாரும் வராததால் ஏன் பாஜகாவினர் யாரும் வரவில்லை என்று ஹெலிகேப்டர் தளத்தில் இருந்தவர்களிடம் கேட்டு அதிருப்தி அடைந்தார்.

அதனை தொடர்ந்து உதகை அருகே உள்ள மஞ்சூர் பஜார் பகுதிக்கு சென்று பிரச்சாரம் செய்ய வாகனத்தில் ஏறிய போது வேட்பாளர் போஜராஜன் வராததால் ஏன் வேட்பாளர் வரவில்லை என்றும் வேட்பாளர் இன்றி பிரச்சாரம் செய்ய முடியாது என கட்சி நிர்வாகம் கோபத்துடன் தெரிவித்தது. அப்போது கட்சி நிர்வாகிகள் வேட்பாளர் போஜராஜன் சிறியூரில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்றுள்ளதாக கூறி சமாதானம் செய்தனர்.

we-r-hiring

அதனைத் தொடர்ந்து படுகர் இன பெண்களை போன்று தலையில் பட்டு துண்டை கட்டி  அங்கு திரண்டு இருந்த தொண்டர்கள் மத்தியில் வேட்பாளர் போஜராஜன் இன்றி பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தை முடித்துக் கொண்ட நடிகை குஷ்பு மஞ்சூரில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு அழைத்து செல்லும்போது அவரை அதிமுக கட்சி அலுவலகத்திற்கு கட்சி நிர்வாகிகள் அழைத்துச் சென்றதால், பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிருப்தி அடைந்தனர். தங்களது கட்சி வேட்பாளர் இல்லாததால் உதகை காந்தள் பகுதியில் குஷ்பு மேற்கொள்ள இருந்த பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு ஹெலிகாப்டரில் புறப்பட்டுச் சென்றார். பாஜகாவின் நட்சத்திர பேச்சாளரும், நடிகையுமான குஷ்புவின் பிரச்சாரத்திற்கு சொந்த கட்சி வேட்பாளர் மட்டும் இன்றி கூட்டணி கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்காதது குஷ்பு மட்டுமின்றி NDA கூட்டணி கட்சி தொண்டர்களை அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ரஜினி பட விவகாரம்…. ரசிகரின் மீம்ஸ்க்கு குஷ்புவின் சாட்டையடி பதில்!

MUST READ