திருத்தணியில் திமுக கூட்டணி தேமுதிக வேட்பாளர் தேர்தலில் வெற்றி பெற அதிக ஓட்டுகள் வாங்கித்தரும் நிர்வாகிகளுக்கு ரூ.3.50 லட்சம் ரொக்கப் பரிசு தருவதாக தி.மு.க., எம்.எல்.ஏ., முன்னாள் மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதியில் தி.மு.க., கூட்டணி சார்பில் தே.மு.தி.க., வேட்பாளர் டி.கிருஷ்ணமூர்த்தி போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து திருத்தணி நகராட்சியில் உள்ள, 21 வார்டுகளில் வீதி, வீதியாக திருத்தணி தி.மு.க., எம்.எல்.ஏ.வும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலருமான சந்திரன், தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினரும், முன்னாள் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளருமான பூபதி ஆகியோர் சென்று முரசு சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தனர்.

அப்போது மாவட்ட செயலர் எஸ்.சந்திரன் பேசும்போது , நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் எந்த வார்டு கவுன்சிலர் அல்லது பொறுப்பு நிர்வாகிக்கு என் சார்பில், 2 லட்சம் ரூபாய் ரொக்கமாக பரிசு வழங்குகிறேன் என அறிவித்து பேசினார். அதே போல் முன்னாள் மாவட்ட செயலாளர் எம்.பூபதி, 21 வார்டில் எந்த வார்டில் முரசு சின்னத்திற்கு ஓட்டு வாங்கி தரும் கவுன்சிலர் மற்றும் கட்சி நிர்வாகிக்கு, என் சார்பில், 1.50 லட்சம் ரூபாய் பரிசாக வழங்குகிறேன் என இருவரும் மாறி, மாறி ரொக்கப் பரிசுத் தொகையினை அறிவித்தனர். இதனால் நகராட்சியில், முரசு சின்னத்திற்கு அதிக ஓட்டுகள் பெற்றுத் தரவேண்டும் என கூட்டணி கட்சியான தி.மு.க., நிர்வாகிகள், கவுன்சிலர்கள் ஆர்வத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.
திருத்தணி சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் டி.கிருஷ்ணமூர்த்தி, அதிமுக வேட்பாளர் ஜி.ஹரி போட்டியிடுகின்றனர். இதில் அதிமுக வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக பல்வேறு கருத்துக் கணிப்புகள் வெளியிட்டுள்ளது. தேமுதிக வேட்பாளர் தோல்வி அடைவதாகவும் அந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திமுக தலைமை தற்போதைய எம்.எல்.ஏ சந்திரன் மீதும், மாவட்ட செயலாளர் பூபதி மீதும் கடுமையாக எச்சரிக்கு விடுத்துள்ளது. இதன்காரணமாக தேமுதிக வேட்பாளருக்கு அதிக வோட்டுகளை வாங்கித்தரும் திமுக நிர்வாகிகளுக்கு பரிசு தொகை அறிவித்துள்ளனர்.
தமிழகத் தேர்தல் 2026: அதிமுக-60 தவெக – 43 திமுக – 32 வேட்பாளர்கள் குற்றப் பின்னணி கொண்டவர்கள்
