Homeசெய்திகள்தேர்தல் 20262026 தேர்தல் - திமுக வரலாறு மாற்றி அமைக்கப்படும் - கனிமொழி எம்.பி. உறுதி

2026 தேர்தல் – திமுக வரலாறு மாற்றி அமைக்கப்படும் – கனிமொழி எம்.பி. உறுதி

-

- Advertisement -

திமுக இரண்டாவது முறை ஆட்சியை தொடர்ந்ததில்லை என்ற வரலாறு திரும்பும் என திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. கூறியுள்ளாா்.2026 தேர்தல் - திமுக வரலாறு மாற்றி அமைக்கப்படும் - கனிமொழி எம்.பி. உறுதி

சென்னை டிடிகே சாலையில் உள்ள தனியார் பள்ளியில் திமுக எம்.பி. கனிமொழி தனது வாக்கினை செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அனைவரும் வாக்களிக்க வேண்டும், தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டியது மிக முக்கியமான ஒன்று.

we-r-hiring

மக்கள் மிகுந்த எழுச்சியுடன் உள்ளனர், திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறும். எத்தனை தொகுதிகள் என்ற எண்ணிக்கைக்குள் நான் செல்லவில்லை, சிறப்பான வெற்றியை திராவிட முன்னேற்ற கழகம் பெரும்.

திமுக இரண்டாவது முறையாக ஆட்சியை தொடர்ந்தது இல்லை என்ற கேள்விக்கு,  வரலாறு திரும்பும் எனவும், முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு கூறுவது முதலில் வந்து வாக்களியுங்கள். யார் என்ன செய்துள்ளார் என்று எண்ணி வாக்களியுங்கள்.

வாக்களிக்கும் பொழுது தமிழ்நாட்டின் நலனுக்கும் கலாச்சாரத்திற்கும் பண்பாட்டிற்கும் எது பாதுகாப்பு என்பதை அறிந்து வாக்காளர்கள் வாக்களியுங்கள் என கனிமொழி எம்.பி கூறினார்.

நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்கும் மக்கள் – 85 சதவீதத்தை கடந்தால் எந்த கட்சிக்கு ஆபத்து

MUST READ