Homeசெய்திகள்மாவட்டம்விழுப்புரம்: அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து - 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம், ஒருவர்...

விழுப்புரம்: அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து – 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம், ஒருவர் பலி

-

- Advertisement -

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம், ஒருவர் பலி.விழுப்புரம்: அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து - 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம், ஒருவர் பலிசென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஐந்து கிலோ மீட்டருக்கு மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு. நாகர்கோவிலில் இருந்து சென்னை நோக்கி அரசு சொகுசு பேருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு திண்டிவனம் அம்மா டீ டைம் சலவதி அருகே சென்று கொண்டிருந்தது. நான்கு முனை சந்திப்பு அருகே வரும்போது திருவண்ணாமலை மார்க்கத்தில் இருந்து புதுவை மார்க்கமாக சென்ற லாரி, .அரசு பேருந்து மீது மோதியது.

இந்நிலையில், அரசு பேருந்து  நிலைத்தடுமாறி சென்னை மார்க்கமாக சென்றது. அப்பொழுது சென்னையில் இருந்து புதுவை நோக்கி வந்த லாரியானது மீண்டும் அரசு பேருந்து மீது மோதி அரசு பேருந்து கவிழ்ந்து  விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அரசு பேருந்தில் பயணம் செய்த 40-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயங்களுடன் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சென்னையில் இருந்து புதுவை நோக்கி சென்ற லாரி டிரைவர் திண்டிவனம் அடுத்த கிளியனூர்யை சேர்ந்த சக்திவேல் விபத்தில் லாரியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தீயணைப்புத் துறை உதவியுடன் லாரி டிரைவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்க்காக திண்டிவனம் அரசு பொது மருத்துவ மனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

we-r-hiring

இந்த விபத்தால் திண்டிவனம் திருச்சி தேசிய நெடுஞ்சாலை இருபுறமும் சுமார் ஐந்து கிலோ மீட்டருக்கு மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. போக்குவரத்தை திண்டிவனம் மற்றும் ரோசனை போலீசார் போக்குவரத்தை சரி செய்து வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து ரோஷனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த  சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விபத்துக்கு காரணமான ஆந்திரா எண் கொண்ட திருவண்ணாமலை மார்க்கத்தில் இருந்து புதுவை மார்க்கமாக சென்ற லாரி ஓட்டுநர் லாரியை நடுவழியில் நிறுத்திவிட்டு தப்பிச் சென்றுவிட்டார். லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

வாக்களிக்க சென்று திரும்பிய போது நேர்ந்த கோர விபத்து!! 4வயது சிறுவன் பலி!!

MUST READ