HomeBreaking News2026 தேர்தல் - தமிழ்நாட்டில் தவெக முன்னிலை

2026 தேர்தல் – தமிழ்நாட்டில் தவெக முன்னிலை

-

- Advertisement -

காலை 9 மணி நிலவரப்படி முதல் முறையாக தேர்தலை சந்தித்த தவெக திமுக, அதிகவை பின்னுக்குத் தள்ளிவிட்டு முதலிடத்தில் முன்னிலையில் உள்ளதால் தவெகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

2026 சட்டமன்றத் தேர்தல் - தமிழ்நாட்டில் தவெக முன்னிலை

we-r-hiring

2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆரம்ப கட்டத்தில் திமுக முன்னிலை வகித்த நிலையில், தற்போதைய நிலவரப்படி தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பிடித்துள்ளது.

காலை 9 மணி நிலவரப்படி, முதன்முறையாக தேர்தலை சந்தித்த தவெக, முக்கிய கட்சிகளை பின்னுக்குத் தள்ளி முன்னிலையில் இருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதையடுத்து, தவெக ஆதரவாளர்கள் பல இடங்களில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தொடர்ந்து நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) பதிவான வாக்குகள் கணக்கிடப்பட்டு வருகின்றன. முழுமையான முடிவுகள் வெளியாகும் வரை முன்னிலை மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், தேர்தல் நிலவரம் மீது அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது.

2026 தேர்தல்: புதுச்சேரி திமுக கூட்டணி பின்னடைவு

MUST READ