Homeசெய்திகள்கட்டுரைகுதிரை பேரம் - வரலாற்று சம்பவம்

குதிரை பேரம் – வரலாற்று சம்பவம்

-

- Advertisement -

“குதிரை பேரம்” (Horse Trading) என்ற சொல் இன்று அரசியல்வாதிகள் கட்சி மாறுவதையும், அரசாங்கத்தை கவிழ்க்கவோ அல்லது அமைக்கவோ எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்களை கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வாங்குவதையும் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது.

குதிரை பேரம் - வரலாற்று சம்பவம்

we-r-hiring

ஆனால், இதன் பின்னணியில் ஒரு சுவாரசியமான, உண்மையான வரலாற்றுச் சம்பவமும், அதன் பரிணாம வளர்ச்சியும் இருக்கிறது.

​19-ஆம் நூற்றாண்டில் (1800-களில்) அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் குதிரை சந்தைகள் மிகப் பிரபலமாக இருந்தன. குதிரைகளின் உண்மையான வயது, அதன் வேகம், ஆரோக்கியம் போன்றவற்றை அதன் உரிமையாளர்கள் மறைத்து, ஏமாற்றி விற்க முயல்வார்கள். வாங்குபவர்களும் குதிரையின் பற்களைப் பார்த்தும், அதன் நடையை வைத்தும் அதன் உண்மையான மதிப்பை கணிக்க முயல்வார்கள்.

​குதிரை வியாபாரத்தில் இருதரப்பும் ஒருவரையொருவர் ஏமாற்ற நினைத்து, ரகசியமாக, கடுமையான பேரம் பேசி ஒரு விலையை முடிவு செய்வார்கள். இதிலிருந்துதான் “ரகசியமான, தந்திரமான, சுயநல லாப நோக்கோடு நடத்தப்படும் பேச்சுவார்த்தை”-களை குறிக்க “குதிரை பேரம்” என்ற சொல் உருவானது. ​இந்திய அரசியலில் இந்தச் சொல் முதன்முதலில் அதிகாரப்பூர்வமாக ஒரு வரலாற்றுச் சம்பவத்தோடு தொடர்புபடுத்தப்பட்டது 1967-ஆம் ஆண்டு ஹரியானா மாநிலத்தில் நடந்த நிகழ்வின் போதுதான்.

குதிரை பேரம் - வரலாற்று சம்பவம்

​”ஆயா ராம், கயா ராம்” (Aaya Ram, Gaya Ram) சம்பவம்:
​1967-ல் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த கயா லால் (Gaya Lal) என்ற சட்டமன்ற உறுப்பினர் (MLA), ஒரே நாளில் ஒன்பது மணி நேரத்திற்குள் மூன்று முறை கட்சி மாறினார். ​

முதலில் காங்கிரஸிலிருந்து ஐக்கிய முன்னணிக்கு மாறினார். 

​சில மணி நேரங்களில் மீண்டும் காங்கிரஸுக்கே வந்தார்.

​வந்த அடுத்த ஒன்பதே மணி நேரத்தில் மீண்டும் ஐக்கிய முன்னணிக்கு மாறினார்.

​அப்போது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், காங்கிரஸ் தலைவர் ராவ் பிரேந்திர சிங், கயா லாலை சுட்டிக்காட்டி “ஆயா ராம், கயா ராம்” (ராம் வந்துவிட்டார், ராம் போய்விட்டார்) என்று கிண்டலாகக் கூறினார். ​இந்தச் சம்பவத்திற்குப் பிறகுதான், இந்தியாவில் எம்.எல்.ஏ-க்களைப் பணம் அல்லது பதவிக்காக விலைக்கு வாங்கும் அரசியல் கலாச்சாரத்திற்கு “குதிரை பேரம்” என்ற சொல் மிகத் தீவிரமாகப் பயன்படுத்தப்படத் தொடங்கியது.குதிரை பேரம் - வரலாற்று சம்பவம்

​தமிழக அரசியல் வரலாற்றில் குதிரை பேரம்
​தமிழக அரசியலிலும் இந்தச் சொல் ஒரு குறிப்பிட்ட வரலாற்று நிகழ்வின் போது மிகத் தீவிரமாகப் பயன்படுத்தப்பட்டது. ​2017 இல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவிற்குப் பின், அதிமுக-வில் பிளவு ஏற்பட்டது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பு தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க, தங்களது ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் யாரும் எதிரணிக்கு மாறிவிடக் கூடாது என்பதற்காக சென்னைக்கு அருகில் உள்ள கூவத்தூர் சொகுசு விடுதியில் (Resort Politics) தங்க வைத்தனர். ​எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடகங்கள் இந்த ஒட்டுமொத்த நிகழ்வையும் “கூவத்தூர் குதிரை பேரம்” என்றே வர்ணித்தன. இப்போதும் அதுபோன்ற குதிரை பேரம் அரசியல் நடந்து வருகிறது.

”100% குதிரை பேரம்” – தவெக மீது அதிமுக எம்.பி.இன்பதுரை கடும் குற்றச்சாட்டு…

MUST READ