Homeசெய்திகள்மாவட்டம்அரசு கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் -  விவசாயிகள் வேதனை

அரசு கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் –  விவசாயிகள் வேதனை

-

- Advertisement -

செங்கல்பட்டு மாவட்டம் வில்லியம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட சாஸ்திரம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன.அரசு கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் -  விவசாயிகள் வேதனை

சாஸ்திரம்பாக்கம், வடகால் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை இந்த கொள்முதல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். ஆனால், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் திறந்தவெளியில் பாதுகாப்பின்றி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் நெல் மூட்டைகளில் மழைநீர் புகுந்து நெல் சேதமடைந்துள்ளது. சில மூட்டைகளில் இருந்த நெல்மணிகள் முளைத்தும் காணப்பட்டன. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி மற்றும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

we-r-hiring

அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் இந்த நிலை ஏற்பட்டதாக குற்றம்சாட்டும் விவசாயிகள், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை பாதுகாப்பாக சேமிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற பாதிப்புகளைத் தவிர்க்க நிரந்தர சேமிப்புக் கிடங்குகள் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பக்தர்கள் கவனத்திற்கு…”திருச்செந்தூர் கோயிலில் செல்போன்களுக்கு ஜூலை 1 முதல் முழுத் தடை”

MUST READ