Homeசெய்திகள்தமிழ்நாடுதேசியக் கட்சிகள் கர்நாடகாவிற்கு மட்டுமே ஆதரவு; மேகதாதுவில் தூர்வாரினால் 200 டி.எம்.சி தண்ணீரைச் சேமிக்கலாம்: திருப்பூரில்...

தேசியக் கட்சிகள் கர்நாடகாவிற்கு மட்டுமே ஆதரவு; மேகதாதுவில் தூர்வாரினால் 200 டி.எம்.சி தண்ணீரைச் சேமிக்கலாம்: திருப்பூரில் பாமக தலைவர் அன்புமணி அதிரடி

-

- Advertisement -

கர்நாடகாவில் பாஜக, காங்கிரஸ் என எந்தத் தேசியக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் அவர்கள் கர்நாடகாவிற்கு மட்டுமே ஆதரவாகச் செயல்படுவதால், மேகதாது அணை விவகாரத்தில் தமிழகக் கட்சிகள் அனைத்தும் ஒன்றுகூடி மத்திய அரசுக்குக் கடுமையான அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.தேசியக் கட்சிகள் கர்நாடகாவிற்கு மட்டுமே ஆதரவு; மேகதாதுவில் தூர்வாரினால் 200 டி.எம்.சி தண்ணீரைச் சேமிக்கலாம்: திருப்பூரில் பாமக தலைவர் அன்புமணி அதிரடி

​கர்நாடகா அரசு காவேரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட முயல்வதைக் கண்டித்து, பாமக சார்பில் 4 நாட்கள் தொடர் நடைபயணம் மேற்கொண்டு வரும் அன்புமணி ராமதாஸ், இன்று திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாகப் பிரச்சாரம் மேற்கொண்டார். ​முன்னதாக திருப்பூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது,  “காவேரி ஆற்றை நம்பி தமிழகத்தில் 5 கோடி மக்களும், 28 மாவட்டங்களும் வாழ்ந்து வருகின்றன. கடந்த 1934-ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி கர்நாடகாவின் கே.ஆர்.எஸ் அணைக்கும், தமிழ்நாட்டின் மேட்டூர் அணைக்கும் மட்டுமே உடன்பாடு எட்டப்பட்டது. அதன்பின்னர் கர்நாடகா சிறு அணைகளைக் கட்டியது. ஆனால், தற்போது 70 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட புதிய பெரிய அணையைக் கட்ட முயல்வது தமிழகத்திற்குப் பெரும் ஆபத்தை விளைவிக்கும்.

we-r-hiring

​கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் இது குறித்துத் தொடர்ந்து பொய் கூறி வருகிறார். பெங்களூரு நகரக் குடிநீருக்கு வெறும் 5 டி.எம்.சி தண்ணீரே போதுமானது. அப்படியிருக்க, 70 டி.எம்.சி தண்ணீரைச் சேமிக்கும் அணை எதற்கு? ஏற்கனவே அங்குள்ள 4 அணைகளில் 115 டி.எம்.சி தண்ணீர் உள்ள நிலையில், கூடுதலாக 70 டி.எம்.சி சேமித்தால் தமிழகம் முற்றிலும் வறண்டு போகும். ஜூன் மாதத்திற்கு 9 டி.எம்.சியும், ஜூலைக்கு 42 டி.எம்.சியும் காவேரி தண்ணீர் திறக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பையும், கூட்டுக்குழு முடிவையும் கர்நாடக அரசு அப்பட்டமாகப் புறக்கணித்து வருகிறது.

இந்த மேகதாது அணை கட்டப்பட்டால் 12,500 ஏக்கர் வனப்பகுதி முற்றிலுமாக அழிக்கப்படும். ஆயிரக்கணக்கான யானைகள், புலிகள் மற்றும் பழமையான மரங்கள் அழியும் அபாயம் உள்ளதால், அங்குள்ள சமூக ஆர்வலர்களும் இதனை எதிர்க்கின்றனர். கடந்த 1974-இல் தமிழ்நாட்டில் 29 லட்சம் ஏக்கரிலிருந்த பாசன நிலம் தற்போது 20 லட்சமாகக் குறைந்துள்ளது. ஆனால், கர்நாடகாவில் இது 6 லட்சத்திலிருந்து 21 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது. மணல் கொள்ளையடிப்பதற்காகவே தமிழகத்தைத் தொன்றுதொட்டு ஆண்ட திராவிடக் கட்சிகள் தடுப்பணைகளைக் கட்டாமல் மக்களை ஏமாற்றி வந்துள்ளன. ​தமிழகச் சட்டமன்றத்தில் ‘மேகதாது நடுவர் மன்றம்’ அமைக்க வேண்டும் என நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முரணானது. உச்ச நீதிமன்றம் வரும் 2033 வரை எந்த ஒரு விரிவாக்கப் பணிகளுக்கும் தடை விதித்துள்ள நிலையில், கர்நாடக அரசு அதனை மதிப்பதில்லை. எனவே, தமிழக அரசு உடனடியாக அந்தத் தீர்மானத்தைத் திரும்பப் பெற வேண்டும்.

தற்போதைய தவெக அரசு திறந்த மனதுடன் மற்ற கட்சிகள் சொல்லும் நல்ல கருத்துக்களை ஏற்பதை நான் ஆக்கப்பூர்வமாகப் பார்க்கிறேன். தற்போது தென்மேற்குப் பருவமழை துவங்கியுள்ள சூழலில், ‘சூப்பர் எல்நினோ’ தாக்கத்தைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மழை குறைந்தால் விவசாயிகளே அதிகம் பாதிக்கப்படுவார்கள். தமிழ்நாட்டில் இருந்த 42,000 ஏரிகளில் தற்போது 27,000 ஏரிகள் மட்டுமே உள்ளன. பல அரசு கட்டடங்களே ஏரிகளில்தான் அமைந்துள்ளன. அனைத்து ஏரிகளையும் போர்க்கால அடிப்படையில் தூர்வாரினால் மட்டுமே எல்நினோ பாதிப்பைச் சமாளிக்க முடியும்; இதன் மூலம் 200 டி.எம்.சி தண்ணீரை நாம் கூடுதலாகச் சேமிக்கலாம். ​ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 99 சதவீதம் பேர் ஜல்லிக்கட்டைப் பார்த்ததே இல்லை, எனினும் உணர்வால் ஒன்றிணைந்து வென்றனர். ஆனால், இந்த மேகதாது அணையால் தமிழகத்தின் 80 சதவீத மக்கள் நேரடியாகப் பாதிக்கப்படுவார்கள் என்பதால், மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் ஒன்றிணைய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் பேசினார்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்ய கோரிக்கை: திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு!

MUST READ