Homeசெய்திகள்தமிழ்நாடுமுன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி கைது..? கரூரில் திமுக-விற்கு நெருக்குடி தர தவெக அரசு...

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி கைது..? கரூரில் திமுக-விற்கு நெருக்குடி தர தவெக அரசு பாய்ச்சல்

-

- Advertisement -

​அதிமுகவிலிருந்து முக்கிய முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைந்த அதிர்ச்சி அலையே இன்னும் ஓயாத நிலையில், தற்போது திமுகவின் வலுவான கோட்டையாகக் கருதப்படும் கரூர் மாவட்ட அரசியல் சக்தியைக் குறிவைத்து இந்த கைது நடவடிக்கை பாய்ந்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
செந்தில் பாலாஜி

கைதுக்கு பின்னணியில் தேர்தல் வியூகம்?:
அரசியல் நோக்கர்களின் துல்லியமான கணிப்பு மற்றும் கள நிலவரங்களின்படி, தவெக அரசு தற்பொழுது மேற்கொண்டு வரும் அடுத்தடுத்த கைது நடவடிக்கைகளுக்குப் பின்னால் மிகப்பெரிய தேர்தல் வியூகம் ஒளிந்திருப்பதாகக் கூறப்படுகிறது. கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அசைக்க முடியாத அரசியல் செல்வாக்குக் கொண்ட செந்தில் பாலாஜியைச் சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்குள் கொண்டு வந்து முடக்குவதன் மூலம், அப்பகுதிகளில் திமுகவின் தேர்தல் பணிகளை முற்றிலுமாகத் தொய்வடையச் செய்ய தவெக அரசு திட்டமிட்டுள்ளதாக உடன்பிறப்புகள் குற்றம் சாட்டுகின்றனர்.

we-r-hiring

திமுக முக்கியப் பிரமுகர்களுக்கு நெருக்குடி:
முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனைத் தொடர்ந்து, தற்போது செந்தில் பாலாஜியும் கைது செய்யப்பட்டிருப்பது, இடைத்தேர்தல் வரவிருக்கும் பகுதிகளில் தவெகவின் தேர்தல் வேலைகளுக்கு எந்தவித எதிர்ப்பும் இடையூறும் இல்லாமல் பார்த்துக் கொள்வதற்காகவே என்று பரவலான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

திமுகவின் முக்கியப் பிரமுகர்களைக் குறிவைத்து, அவர்களை மிரட்டும் தொனியில் காவல்துறை தற்பொழுது ஏவப்பட்டு வருவதாக திமுக தரப்பில் மிகக் கடுமையான விவாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஒட்டுமொத்த இடைத்தேர்தல் களத்தையும் தனது முழு முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர தவெக தலைமை வியூகம் வகுத்துச் செயல்படுவதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருவதால், கரூர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தற்பொழுது அசாதாரணமான அரசியல் சூழல் நிலவி வருகிறது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விரைவில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது..

MUST READ