ஆவடி மாநகராட்சி 48-வது வார்டுக்குட்பட்ட எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் இன்று 105 வீடுகளுக்கு ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கான நோட்டீஸ் வழங்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்த நிலையில், மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி, ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சா.மு. நாசர் அவர்களிடம் மக்கள் பிரதிநிதிகள் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
ம.தி.மு.க மூத்த தலைவர் ஆவடி இரா. அந்திரிதாஸ், ஆவடி மாநகராட்சி துணை மேயர் சூரியகுமார் மற்றும் 48-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆகியோர் இந்த சந்திப்பில் இணைந்து, எம்.ஜி.ஆர் நகர் மக்களின் கோரிக்கையையும், அங்குள்ள கள நிலவரத்தையும் சட்டமன்ற உறுப்பினரிடம் விரிவாக எடுத்துக் கூறினர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக மக்கள் பிரதிநிதிகள் உடனடியாக களமிறங்கி, சட்டமன்ற உறுப்பினரைச் சந்தித்து ஆக்கிரமிப்பு நடவடிக்கையை நிறுத்தக் கோரியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
