Homeசெய்திகள்அரசியல்மக்களின் பணத்தை வீணடிக்கும் வக்கில்லாத அரசு!" – கூடங்குளம் விவகாரம் மற்றும் சபாநாயகர் அதிரடி குறித்து...

மக்களின் பணத்தை வீணடிக்கும் வக்கில்லாத அரசு!” – கூடங்குளம் விவகாரம் மற்றும் சபாநாயகர் அதிரடி குறித்து அதிமுக எம்பி ஐ.எஸ்.இன்பதுரை கடும் சாடல்!

-

- Advertisement -

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் (Rajya Sabha MP) ஐ.எஸ்.இன்பதுரை, தமிழக அரசின் மெத்தனப் போக்கு, கூடங்குளம் அணுமின் நிலைய ஆபத்துகள் மற்றும் 6 சட்டமன்றத் தொகுதிகள் காலி செய்யப்பட்டது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது:

அதிமுக

we-r-hiring

​விவசாயிகள் நலனில் மெத்தனம்: ஏமாற்றும் முதலமைச்சர்
​விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி செய்வதாகப் பெரிய அளவில் வாக்குறுதி அளித்துவிட்டுத்தான் இந்த முதலமைச்சர் ஆட்சிக்கு வந்தார். ஆனால், தற்போது அந்த தள்ளுபடியைப் பிரித்துப் பிரித்து வழங்கி விவசாயிகளை முற்றிலும் ஏமாற்றி வருகிறார்.
​நெல்லை மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான நெல் மணிகள் மர்மமான முறையில் தீவைத்து எரிக்கப்பட்ட விவகாரத்தில், அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும். விவசாயிகளின் உழைப்பைத் தடுத்து, இச்சம்பவத்தைத் தடுக்கத் தவறிய இந்த அரசு, மக்களின் பணத்தை வீணடிக்கும் ஒரு ‘வக்கில்லாத அரசாகச்’ செயல்படுகிறது. இதற்கு அரசே முழு பொறுப்பேற்க வேண்டும்.

​கூடங்குளம் அணு உலைக்கு அருகில் கல்குவாரிகளா? பெரும் ஆபத்து!
​கூடங்குளம் அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள 7 கிலோமீட்டர் சுற்றளவிற்குள் கல்குவாரிகள் செயல்பட இந்த அரசு அனுமதி அளித்துள்ளது. அணு உலைக்கு மிக அருகில் கல்குவாரிகள் செயல்படுவதும், அங்கு வெடிகள் வைக்கப்படுவதும் ஒட்டுமொத்தப் பகுதிக்கும் பெரும் ஆபத்தை விளைவிக்கும்.

இந்தக் குவாரிகளுக்கு அனுமதி அளிக்கும்போது சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்புத் துறையினரிடம் தடையில்லாச் சான்றிதழ் (NOC) முறையாகப் பெறப்பட்டதா என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இது குறித்து அரசு உடனடியாக உயர்மட்ட ஆய்வு செய்ய வேண்டும்.

“சபாநாயகர் ஒன்றும் ஊஞ்சல் கட்டி ஆட முடியாது” – நீதிமன்றத்தை நாடிய அதிமுக
​தமிழகத்தில் ஆறு தொகுதிகளில் எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்த விதம் முற்றிலும் தவறானது. சபாநாயகர் திட்டமிட்டு செயற்கையாக இந்த காலி இடங்களை உருவாக்கியுள்ளார். சபாநாயகர் பதவி மற்றும் அதிகாரம் உள்ளது என்பதற்காக, அவர் தன் இஷ்டத்திற்கு ஊஞ்சல் கட்டி ஆட முடியாது. சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் மீதான கட்சித் தாவல் புகார் நிலுவையில் இருக்கும்போதே, அவர்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக் கொண்டிருக்கக் கூடாது.

​இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்பதால், நாங்கள் இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். இந்த வழக்கு வரும் திங்கட்கிழமை (ஜூலை 13-ஆம் தேதி) நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. நாங்கள் சபாநாயகர் மீது பகிரங்கமாகக் குற்றச்சாட்டை முன்வைத்து, அவருக்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். இந்திய வரலாற்றிலேயே எந்தவொரு சபாநாயகருக்கும் இதுபோன்று நோட்டீஸ் வழங்கப்பட்டதில்லை. இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு உட்பட்டிருப்பதால், உரிய நீதி கிடைக்கும் என நம்புகிறோம்.
​— இவ்வாறு அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் ஐ.எஸ்.இன்பதுரை தெரிவித்தார்.

MUST READ