Homeசெய்திகள்ஆவடிபோதைக்கு எதிராக வீதிக்கு வந்த மாணவர்கள்: அம்பத்தூரில் காவல்துறையுடன் இணைந்து பிரம்மாண்ட சைக்கிள் பேரணி!

போதைக்கு எதிராக வீதிக்கு வந்த மாணவர்கள்: அம்பத்தூரில் காவல்துறையுடன் இணைந்து பிரம்மாண்ட சைக்கிள் பேரணி!

-

- Advertisement -

சென்னையில் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில், அம்பத்தூர் சேது பாஸ்கரா பள்ளி மாணவர்கள் மற்றும் காவல்துறையினர் இணைந்து நடத்திய பிரம்மாண்ட சைக்கிள் பேரணி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.போதைக்கு எதிராக வீதிக்கு வந்த மாணவர்கள்: அம்பத்தூரில் காவல்துறையுடன் இணைந்து பிரம்மாண்ட சைக்கிள் பேரணி!

5 கிலோ மீட்டர் பயணம்
அம்பத்தூர் ராக்கி தியேட்டர் சாலையில் தொடங்கிய இந்த விழிப்புணர்வு சைக்கிள் பயணம், சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை நடைபெற்றது. போதை இல்லா சமூகத்தைப் படைப்போம் என்ற முழக்கத்தோடு, நூற்றுக்கணக்கான மாணவர்கள் உற்சாகமாக சைக்கிள் ஓட்டிச் சென்றனர். இந்தப் பேரணியில் அம்பத்தூர் காவல் உதவி ஆணையர் குமார், காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட காவல்துறையினர், மாணவர்களுடன் தோளோடு தோள் நின்று சைக்கிள் ஓட்டிச் சென்றது மாணவர்களுக்குப் பெரும் ஊக்கமளிப்பதாக இருந்தது.போதைக்கு எதிராக வீதிக்கு வந்த மாணவர்கள்: அம்பத்தூரில் காவல்துறையுடன் இணைந்து பிரம்மாண்ட சைக்கிள் பேரணி!

we-r-hiring

வசீகரித்த விழிப்புணர்வு முழக்கங்கள்
பச்சை நிறத் தொப்பி அணிந்து, அணிவகுத்துச் சென்ற 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள், போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர். “போதைப்பொருளை ஒழிப்போம்”, “ஆரோக்கியமான சமூகத்தைப் படைப்போம்” என அவர்கள் கோஷமிட்டவாறு சென்ற காட்சி, அப்பகுதியைக் கடந்து சென்ற பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் ஈர்த்தது.

பொதுமக்கள் பாராட்டு
இன்றைய இளைய தலைமுறையினர் சமூக அக்கறையுடன் போதைக்கு எதிராக வீதிக்கு வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர். காவல்துறையினரும் பள்ளி நிர்வாகமும் இணைந்து முன்னெடுத்துள்ள இந்த முன்னெடுப்பு, போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் முக்கிய முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

போலி ஆவணங்கள் மூலம் ஆதி திராவிடர் சான்றிதழ்: ஒருவர் கைது – ஆவடி ஆணையரகம் எச்சரிக்கை

MUST READ