Homeசெய்திகள்ஆவடிஆவடியில் ரூ.56 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து – சாலையில்...

ஆவடியில் ரூ.56 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து – சாலையில் வழிந்தோடிய மதுபானங்கள்!

-

- Advertisement -

திருவள்ளூர் மாவட்டம் காக்கலூரில் இருந்து செங்குன்றத்திற்கு மதுபாட்டில்களை ஏற்றிச் சென்ற சரக்கு லாரி, ஆவடி அருகே சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.ஆவடியில் ரூ.56 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து – சாலையில் வழிந்தோடிய மதுபானங்கள்!

இதில் லாரியில் இருந்த ரூ.56 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் உடைந்து, மதுபானங்கள் சாலையில் வழிந்தோடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்டச் சாலையில் ஆவடியை அடுத்த மோரை பகுதியில் லாரி சென்றுகொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் லாரியில் பயணித்த ஓட்டுநர் உள்ளிட்ட நான்கு பேர் காயமடைந்தனர்.

தகவலறிந்து வந்தவர்கள் மற்றும் மீட்புப் பணியினர் காயமடைந்த நான்கு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே, லாரி கவிழ்ந்ததில் அதில் ஏற்றிச் செல்லப்பட்டிருந்த மதுபாட்டில்கள் உடைந்து சாலையில் சிதறின. இதனால் மதுபானங்கள் சாலையில் வழிந்தோடியது. ரூ.56 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை ஏற்றிச் சென்ற லாரி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பட்டாபிராமில் கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. உருவ பொம்மையைத் தலைகீழாகத் தொங்கவிட்டு திமுகவினர் போராட்டம் – முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

MUST READ