spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாபிரபல நாட்டுப்புற பாடகர் 'கத்தார்' காலமானார்!

பிரபல நாட்டுப்புற பாடகர் ‘கத்தார்’ காலமானார்!

-

- Advertisement -

 

பிரபல நாட்டுப்புற பாடகர் 'கத்தார்' காலமானார்!
File Photo

தெலுங்கானா மாநில போராட்டத்தில் பங்காற்றியவரும், பிரபல நாட்டுப்புற பாடகருமான கும்மடி வித்தல் ராவ் (வயது 74) காலமானார்.

we-r-hiring

“நாடாளுமன்றத் தேர்தல் எங்களை எதிர்நோக்கி வந்துக் கொண்டிருக்கிறது”- வீடியோவை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

‘கத்தார்’ என ரசிகர்களால் அழைக்கப்படும் வித்தல் ராவ், தெலுங்கானா தனி மாநிலத்திற்காகக் குரல் கொடுத்தவர். கருத்தியல் ரீதியாகவும், மக்களின் பிரச்சனைகளை அழுத்தமாகப் பதிவு செய்ததாலும் மக்கள் பாடகர் என அழைக்கப்பட்டார். ஹைதராபாத் மாநிலத்தில் பிறந்த கத்தார், 1995, 2011 ஆம் ஆண்டுகளில் ஆந்திர அரசின் உயரிய விருதான நந்தி விருதுகளைப் பெற்றுள்ளார். அத்துடன், தெலுங்கானா மாநிலம் உதயமான உடன் தெலுங்கானா பிரஜா ப்ரண்ட் என்ற கட்சியைத் தொடங்கி நடத்தி வந்தார்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக இதயநோய்க்கு சிகிச்சைப் பெற்று வந்த அவர், நேற்று (ஆகஸ்ட் 06) காலமானார்.

‘பாரதியார் மண்டபம்’ ஆன தர்பார் ஹால்!

கத்தார் மறைவுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், தெலுங்கானா மாநில ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் சந்திரசேகர ராவ் உள்ளிட்ட ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளனர்.

MUST READ