
தருமபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கெங்கலாபுரம் என்ற இடத்தில் தனியார் சொகுசுப் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் சுமார் ஒரு மணி நேரமாகப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

‘சைனிக் பள்ளி சேர்க்கை’ – நுழைவுத் தேர்வு எப்போது?
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து பொள்ளாச்சிக்கு திரும்பிக் கொண்டிருந்த தனியார் சொகுசுப் பேருந்து, கெங்கலாபுரம் அருகே சென்றுக் கொண்டிருந்த போது, பேருந்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, சப்தம் வந்துள்ளது. பேருந்து ஓட்டுநர், பேருந்தை நிறுத்திப் பார்த்த போது, பேருந்தில் இருந்து புகை வந்துள்ளது.
தீயை அணைக்க முயற்சித்த போது, திடீரென தீ பேருந்தின் மற்ற பகுதிகளுக்கும் பரவி, மளமளவென எரிய தொடங்கியது. தீப் பிடித்ததைப் பார்த்த பேருந்து ஓட்டுநர்கள் இருவரும், பேருந்தில் இருந்து இறங்கி ஓடிவிட்டனர்.
செம்பரம்பாக்கம் ஏரி: நீர்த்திறப்பு 1,000 கனஅடியாக உயருகிறது!
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.