spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசெந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளிவர வேண்டி பிரார்த்தனை!

செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளிவர வேண்டி பிரார்த்தனை!

-

- Advertisement -

 

செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளிவர வேண்டி பிரார்த்தனை!

we-r-hiring

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளிவர வேண்டி வழக்கறிஞர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் கோயிலில் முழங்காலிட்டவாறு சென்று வழிபட்டார்.

ஆளுநரை நீக்கும் அதிகாரம் சட்டமன்றத்திற்கு வேண்டும் – என்.கே.மூர்த்தி

வினோத் கண்ணா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே பள்ளித் தெருவில் உள்ள முனீஸ்வரர் கோயிலில் வழிபாடு நடத்தினார். தனது கல்விக்கு செந்தில் பாலாஜி பணம் கொடுத்து உதவியதால் இந்த பிரார்த்தனையில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.

கையில் செந்தில் பாலாஜியின் புகைப்படத்தை ஏந்தியவாறு, கோயில் முழுவதும் முழங்காலிட்டவாறு சுற்றி வந்து, சுவாமிக்கு சிறப்பு சிறப்பு பூஜைகளை செய்து வழிபாடு நடத்தினார்.

‘ஒரு கிடாயின் கருணை மனு’ பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் யோகி பாபு!

சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் கடந்த 2023- ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14- ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, சுமார் 8 மாதங்களாக சிறையில் உள்ளார். கீழமை நீதிமன்றங்கள் முதல் உச்சநீதிமன்றம் வரை ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், அமலாக்கத்துறை தரப்பின் கடும் எதிர்ப்பால் நீதிமன்றங்கள் மனுக்களை அடுத்தடுத்து தள்ளுபடி செய்தனர்.

MUST READ