spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'சைரன்' படத்திற்கு கிடைத்த வெற்றி..... ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சமுத்திரகனி!

‘சைரன்’ படத்திற்கு கிடைத்த வெற்றி….. ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சமுத்திரகனி!

-

- Advertisement -

ஜெயம் ரவி நடிப்பில் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி வெளியான படம் சைரன் . இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து அனுபமா பரமேஸ்வரன், கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்த நிலையில் அறிமுக இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் இயக்கியிருந்தார். ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைத்திருந்தார்.சைரன் படத்திற்கு கிடைத்த வெற்றி..... ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சமுத்திரகனி! இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதே சமயம் சைரன் திரைப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றிப் பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. அதன்படி சைரன் திரைப்படமானது மூன்று நாட்களில் 7 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடித்திருந்த சமுத்திரக்கனி சைரன் படத்திற்கு கிடைத்த வெற்றிக்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் , “சைரன் படத்தில் வித்தியாசமான வில்லன் வேடத்தில் நடித்தது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. தம்பி ஜெயம் ரவி அவர்களுடனும் கீர்த்தி சுரேஷ் அவர்களுடனும் இணைந்து நடித்தது மறக்க முடியாத அனுபவம். சைரன் படத்தை மிகப்பெரிய வெற்றி படமாக மாற்றியதற்கு உங்கள் ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இன்னும் அடுத்தடுத்த படைப்புகளில் சந்திப்போம், வெல்வோம்” என்று பேசியுள்ளார்.

MUST READ