spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதக் லைஃப் படத்திலிருந்து விலகினாரா துல்கர் சல்மான்?

தக் லைஃப் படத்திலிருந்து விலகினாரா துல்கர் சல்மான்?

-

- Advertisement -

நடிகர் துல்கர் சல்மான், தக் லைஃப் படத்திலிருந்து விலகியதாக தகவல் கிடைத்துள்ளது.தக் லைஃப் படத்தை விட்டு விலகினாரா துல்கர் சல்மான்?

நடிகர் துல்கர் சல்மான், சீதாராமம் படத்திற்கு பிறகு இந்திய அளவில் பிரபலம் அடைந்து பான் இந்தியா ஸ்டாராக உருவெடுத்துள்ளார். அதன்படி அடுத்தடுத்த பான் இந்திய படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக துல்கர் சல்மான் நடிப்பில் கிங் ஆப் கொத்தா திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த அளவில் வெற்றியை பெறவில்லை. அடுத்ததாக துல்கர் சல்மான் லக்கி பாஸ்கர், காந்தா போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் தமிழில் சூர்யாவின் புறநானூறு திரைப்படத்தில் நடிப்பதற்கும் கமிட் ஆகியுள்ளார். இதற்கிடையில் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கி வரும் தக் லைஃப் படத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.தக் லைஃப் படத்தை விட்டு விலகினாரா துல்கர் சல்மான்? கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைக்கிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்து செர்பியாவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், துல்கர் சல்மான் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகியுள்ளதால் தக் லைஃப் படத்திலிருந்து விலகி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் உள்ளனர். அதேசமயம் துல்கர் சல்மான், சூர்யாவின் தீவிர ரசிகர் என்பதால் புறநானூறு திரைப்படத்தில் நிச்சயம் நடிப்பார் என்றும் சொல்லப்படுகிறது.

MUST READ