spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆவடிஇருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் லாரியின் டயருக்கு அடியில் சிக்கி பலி

இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் லாரியின் டயருக்கு அடியில் சிக்கி பலி

-

- Advertisement -

ஆவடி அடுத்த பட்டாபிராமில் இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் லாரியின் டயருக்கு அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

we-r-hiring

ஆவடி அடுத்த பட்டாபிராம் மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், இவர் பட்டாபிராம் சாஸ்திரி நகர் பகுதியைச் சேர்ந்த கணேஷ்-37 என்பதும் பெரம்பூர் பகுதியில் வெல்டிங் பணியை செய்து வருவதாகவும்,இன்று வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக பட்டாபிராம் ரயில்வே இருசக்கர பார்க்கிங்கில் தனது வாகனத்தை எடுத்துக்கொண்டு பட்டாபிராம் மேம்பாலத்தை கடக்கும்போது,முன் சென்ற லோடு ஏற்றப்பட்ட சரக்கு லாரியை முந்தும்போது லாரியின் வலது பக்கவாட்டில் மாட்டி சக்கரங்களின் இடையில் சிக்கி உடல் பாகங்கள் சிதைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

இந்த விபத்தின் காரணமாக பட்டாபிராம் மேம்பாலத்தில் நீண்ட நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது, மேலும் லாரியின் ஓட்டுனரை பட்டாபிராம் காவல் துறையினர் கைது செய்து விசாரணைக்காக காவல் நிலையம் கொண்டு வந்துள்ளனர், விசாரணையில் லாரி ஓட்டுனரின் பெயர் பார்த்தசாரதி-37 என்பதும் உரிமையாளர் வெங்கடேசன் என்பதும் தெரிய வந்தது இவர்கள் மீது பட்டாபிராம் காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. மேலும் இந்த விபத்தின் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது…

MUST READ