spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாUPI பணப்பரிவர்த்தனை சேவைகளைத் தொடர 'Paytm'-க்கு அனுமதி!

UPI பணப்பரிவர்த்தனை சேவைகளைத் தொடர ‘Paytm’-க்கு அனுமதி!

-

- Advertisement -

 

காலக்கெடு நீட்டிக்கப்பட்டதால் பேடிஎம் வங்கி வாடிக்கையாளர்கள் நிம்மதி!

we-r-hiring

‘Paytm’ நிறுவனம் மூன்றாம் தரப்பு செயலி என்ற அடிப்படையில் தொடர்ந்து பணப்பரிவர்த்தனை சேவையை வழங்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.

கல்லீரல் பிரச்சனையா? கவலையே வேண்டாம்….. பாகற்காய் ஜூஸ் குடிங்க!

‘Paytm Payments Bank’ வங்கி விதிகளை மீறிய புகாரில் வரும் மார்ச் 15- ஆம் தேதியுடன் பணப்பரிவர்த்தனைகளை நிறுத்திக் கொள்ள ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக, ‘Paytm’ நிறுவனத்தின் UPI எனப்படும் செயலி அடிப்படையிலான பணப்பரிவர்த்தனை சேவைகளும் பாதிக்கும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், மூன்றாம் தரப்பு செயலி வழங்குநர் என்ற அடிப்படையில் பணப்பரிவர்த்தனை சேவைகளைத் தொடர்ந்து வழங்க ‘Paytm’ நிறுவனத்தின் தாய் நிறுவனமான 197 கம்யூனிகேஷன் நிறுவனத்திற்கு தேசிய பணப்பட்டுவாடா ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

இதன்மூலம் ‘Paytm’ செயலி மூலம் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும், பாரத ஸ்டேட் வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, எஸ் வங்கி வாயிலாகத் தொடர்ந்து, இந்த சேவையை ‘Paytm’ வழங்கும். எனினும், ஏற்கனவே ரிசர்வ் வங்கி அறிவித்தபடி, ‘Paytm Payments Bank’ இன்றுடன் தனது பணிகளை நிறுத்திக் கொள்ளவுள்ளது.

உடல் உஷ்ணத்தை குறைக்கும் வெள்ளரிக்காய் கூட்டு!

‘Paytm Payments Bank’ FASTag பயன்படுத்துபவர்களும் தங்களது கணக்கை மார்ச் 15- ஆம் தேதிக்குள் வேறு வங்கிக்கு மாற்றிக் கொள்ள வேண்டுமே என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் ஏற்கனவே கூறியிருந்தது.

MUST READ