spot_imgspot_imgspot_imgspot_img
HomeBreaking Newsஊட்டி, கொடைக்கானலில் பலத்த மழை… சுற்றுலா பயணிகள் அவதி…

ஊட்டி, கொடைக்கானலில் பலத்த மழை… சுற்றுலா பயணிகள் அவதி…

-

- Advertisement -

உதகை மற்றும் கொடைக்கானலில் பலத்தக் காற்றுடன் மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் அவதி.ஊட்டி, கொடைக்கானலில் பலத்த மழை… சுற்றுலா பயணிகள் அவதி…கொடைக்கானலில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதன்  காரணமாக ஏரியில் படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இன்று காலை 9 மணிக்கு நடைபெற இருந்த படகு போட்டி பலத்த காற்று காரணமாக தொடங்கப்படவில்லை. காற்றின் வேகம் மற்றும் மழை குறைந்த பிறகு படகு போட்டி நடத்தப்படும் என்று சுற்றுலாத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், தொடா் மழையால் கொடைக்கானல் மழைச்சாலையில் உள்ள மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் வருவாய்த்துறை ஊழியா்கள் ஈடுபட்டுள்ளனா்.

உதகையிலும் மற்றும் அதன்  சுற்றுப் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.  தொடா் மழைக் காரணமாக மரம் விழுந்து கேத்தி காவல் நிலைய கட்டிடம் சேதமடைந்துள்ளது. மழையின் காரணமாக உதகையில் படகு இல்லம் சாலையில் ரயில்வே பாலத்தில் நீா் தேங்கியுள்ளது. ரயில்வே பாலத்தில் தண்ணீா் தேங்கியதால், காா் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

we-r-hiring

மேலும், வெள்ளப் பெருக்கு காரணமாக சுருளி அருவியில் குளிக்க வனத்துறையினா் தடை விதித்துள்ளனா். கம்பம், கூடலூா் பகுதிகளில் 2 நாட்களாக மழை பெய்து வருவதால், சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இறைச்சி கழிவுகளால் தொற்று நோய் பரவும் அபாயம்!

MUST READ