ஒசூர் அருகே இரண்டு கார்கள் மீது கனரக லாரி கவிழ்ந்து விபத்துள்ளானது.ஒசூர் அருகே கோபால் சந்திரம் பகுதியில் மராட்டியத்தில் இருந்து தூத்துக்குடி நோக்கி 25 டன் வெங்காயம் மூட்டைகளை கனரக லாரியில் கொண்டு சென்று கொண்டிருந்தாா். அப்போது, கோபால் சத்திரம் பகுதியில் கனரகலாாி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, நிலைத்தடுமாறி அந்த வழியாக வந்த இரண்டு கார்கள் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு கார்களும் நசுங்கி சேதமடைந்த போதிலும், அதன் கீழ் சீக்கிய இரு காா்களில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், விபத்து நடந்த உடனேயே, மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கனரக லாாிகளுக்கு அடியில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. ஓசூர் அருகே நடந்த இந்த விபத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த நிலைமை மெல்ல மெல்ல சீரடைந்து வருகிறது.
ரஜினி – லோகேஷ் காம்போ ரசிகர்களுக்கு விருந்து படைத்ததா?…. ‘கூலி’ திரைவிமர்சனம்!
