spot_imgspot_imgspot_imgspot_img
HomeBreaking Newsஒகேனக்கல் வெள்ளப் பெருக்கு! சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை!

ஒகேனக்கல் வெள்ளப் பெருக்கு! சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை!

-

- Advertisement -

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 32,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.ஒகேனக்கல் வெள்ளப் பெருக்கு! சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை! காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சில தினங்களாக நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது. ஒகேனக்கல்காவிரி ஆற்றில் நீர்வரத்து 20,000 கன அடியிலிருந்து 12000 கன அடி நீா் அதிகரித்து, 32,000 கனஅடியாக உள்ளது. இதனால், பிரதான அருவி, சினிஃபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்வதால், கர்நாடக மாநில அணைகளில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. அப்போது, காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம்.

மேலும், கே ஆர் எஸ் அணையில் நீர் திறப்பு அதிகரிப்பால், தமிழ்நாட்டுக்கு காவிரி நீர்வரத்து 1 லட்சம் கன அடியை தாண்டும் என எதிா்ப்பாா்க்கப்படுகிறது. கே ஆர் எஸ் அணையில் உபரி நீா் திறக்கப்படுவதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றிலும் தண்ணீர் வேகமாக ஓடுவதால், அருவிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லவும், காவிரி ஆற்றில் குளிக்கவும், பாிசல்களை இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

முன்னுரிமை மதிப்பெண் எங்களுக்கு பொருந்தாதா?… கேள்வி எழுப்பும் மருத்துவ பணியாளர்கள்

we-r-hiring

MUST READ