பொதுவெளியில் பெண்கள் குறித்து அரசியல் தலைவர்கள் பேசும்போது அடிப்படை நாகரித்தை கடைபிடிக்க வேண்டும். கனிமொழி பற்றிய எடப்பாடியின் கருத்துக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமது தேர்தல் பிரசாரத்தின் போது, திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழியை கண்ணியக் குறைவாக விமர்சனம் செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது என இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் முகமது ஷிப்லி, பொதுவெளியில் பேசும் அரசியல் தலைவர்கள், குறிப்பாக பெண்களை குறித்துப் பேசும் போது மரியாதை மற்றும் பொறுப்பை கடைப்பிடிக்க வேண்டும் என அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அடிப்படை நாகரிகம், கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவை தரம் தாழ்ந்த விமர்சனங்களாக மாறக் கூடாது என்பது எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாதா? என கேள்வி எழுப்பியுள்ள ஷிப்லி,
இத்தகைய செயல்கள் அரசியல் பண்பாட்டை கீழ்த்தரப்படுத்துவதோடு, சமூகத்தில் தவறான முன்னுதாரணத்தையும் உருவாக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தோல்வி பயத்தில் எடப்பாடி பழனிசாமி இதுபோல பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுச் செயலாளர் முகம்மது ஷிப்லி எச்சரித்துள்ளார்.
