Homeசெய்திகள்தேர்தல் 2026பெரம்பூரில் தொடங்கியது விஜயின் தேர்தல் பிரசாரம்…

பெரம்பூரில் தொடங்கியது விஜயின் தேர்தல் பிரசாரம்…

-

- Advertisement -

தமிழக சட்டசபை தேர்தல் களம் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது தேர்தல் பயணத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளார். சென்னை பெரம்பூர் தொகுதியில் இன்று அவர் வேட்புமனுவை தாக்கல் செய்து விட்டு பிரசாரத்தையும் தொடங்கியுள்ளாா்.பெரம்பூரில் தொடங்கியது விஜயின் தேர்தல் பிரசாரம்…தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் செயல்முறைகள் தொடங்கியுள்ள நிலையில், த.வெ.க. சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களின் பட்டியலும் நேற்று வெளியிடப்பட்டது. வேட்புமனு தாக்கல் செய்ய குறுகிய கால அவகாசம் மட்டுமே உள்ளதால், முதல் நாளிலேயே மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்று தனது கட்சி வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தியிருந்தார். அதன் அடிப்படையில், த.வெ.க. வேட்பாளர்கள் அனைவரும் ஒரே நாளில் மனுத்தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தேர்தலில் விஜய், திருச்சி கிழக்கு மற்றும் சென்னை பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். பெரம்பூர் தொகுதிக்கான அவரது வேட்புமனு, வியாசர்பாடியில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியில் தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பெருமளவிலான கட்சி தொண்டர்கள் திரண்டதால், அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தேர்தல் நடைமுறைகள் சீராக நடைபெறுவதற்காக அதிகாரிகள் விரிவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.

we-r-hiring

வேட்புமனு தாக்கலைத் தொடர்ந்து, பெரம்பூர் தொகுதியிலிருந்தே விஜய் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், ஏப்ரல் 6-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவும் வில்லிவாக்கம் தொகுதியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். சிட்கோ நகர் சமுதாய கூடத்தில் உள்ள அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் அவர் மனுவை சமர்ப்பித்தார்.

இதனால், தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ளதோடு, அடுத்த கட்ட அரசியல் பரபரப்பிற்கும் துவக்கமாயுள்ளது.

தமிழகத்தில் இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

MUST READ