Homeசெய்திகள்தேர்தல் 2026”நாங்கள் வாரிசு அரசியல் தான் செய்கிறோம்” – எடப்பாடியின் விமர்சனத்திற்கு எழிலன் நாகநாதன் பதிலடி…

”நாங்கள் வாரிசு அரசியல் தான் செய்கிறோம்” – எடப்பாடியின் விமர்சனத்திற்கு எழிலன் நாகநாதன் பதிலடி…

-

- Advertisement -

நாங்கள் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் வாரிசுகளாக மக்களுக்காக அரசியல் செய்து வருகிறோம் என்று ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவ எழிலன் நாகநாதன் தெரிவித்துள்ளாா்.”நாங்கள் வாரிசு அரசியல் தான் செய்கிறோம்” – எடப்பாடியின் விமர்சனத்திற்கு எழிலன் நாகநாதன் பதிலடி…

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது. சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் மருத்துவர் எழிலன் நாகநாதன் தினமும் காலை மற்றும்  மாலை நேரங்களில் தொகுதி முழுவதும் வீடு வீடாக சென்று மக்களை நேரடியாக சந்தித்து வாக்குகளை சேகரித்து வருகிறாா்.

we-r-hiring

இதனுடன்,துண்டு பிரசுரங்களை விநியோகித்தும் கடைவீதிகளில் பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு  கோரிக்கை விடுத்து வருகிறார்.

பிரசாரத்தின் போது செய்தியார்களிடம் பேசிய அவர், ”மக்களுக்கு தேவையான திட்டங்களை திராவிட மாடல் அரசு செயல் படுத்திவருகிறது. மேலும் ஆயிரம் விளக்கு தொகுதிற்கும் இதுவரை நிறைவேற்றப்படாத பல திட்டங்களையும் நிறைவேற்றி உள்ளோம். மேலும் பல புதிய திட்டங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

மேலும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முன்வைக்கும்,  வாரிசு அரசியல் குறித்த விமர்சனத்திற்கு பதிலளித்த அவர்,  ஆமாம் நாங்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரின் வாரிசுகளாக மக்களுக்காக அரசியல் பணி செய்து வருகிறோம். அந்த வகையில் நாங்கள் வாரிசு அரசியல் தான் செய்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளாா்.

தொகுதி மறுவரையறை – ரகசியம் காப்பது ஏன்? – முதல்வர்

MUST READ