spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஓட்டு திருடிய பாஜக தலைவரின் மகன்! வைரலாகும் வீடியோ ஆதாரம்!

ஓட்டு திருடிய பாஜக தலைவரின் மகன்! வைரலாகும் வீடியோ ஆதாரம்!

-

- Advertisement -

மத்திய பிரதேச மாநிலத்தில் டைனிக் பாஸ்கர் நிறுவனம் நடத்திய கள ஆய்வில் பல இடங்களில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு இருப்பது அம்பலமாகி உள்ளதாக பத்திரிகையாளர் மகிழ்நன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

வடமாநிலங்களில் ஊடகங்கள் நடத்திய கள ஆய்வுகளில் பாஜக மோசடியாக வாக்காளர்களை சேர்த்துள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்து பத்திரிகையாளர் மகிழ்நன் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவத்துள்ளதாவது:- மத்திய பிரதேச மாநிலத்தில் டைனிக் பாஸ்கர் என்கிற பத்திரிகை வாக்கு திருட்டு தொடர்பாக வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மத்திய பிரதேசத்தில் சுமார் 9 கோடி வாக்காளர்கள் உள்ளனர். சராசரியாக ஒரு வீட்டிற்கு 5 பேர் இருப்பார்கள். ஆனால் அதை பொய்யாக்கும் விதமாக டைனிக் பாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் 1,696 வீடுகளில் 50க்கும் மேற்பட்ட வாக்குகள் உள்ளன. பத்திரிகையாளர் நேரடியாக சென்று சோதனை செய்கிறபோது, அவர்களுக்கு பாதிபேர் யார் என்றே தெரியவில்லை.

தலைநகர் போபாலை பொருத்தவரை 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தவறுகள் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. காரியா என்கிற கிராமத்தில் 40 வீடுகளில் 20க்கும் மேற்பட்ட வாக்குகள் இருக்கிறது. அதேபோல் போபால் வடக்கு தொகுதியில் வீடுகளில் 36 வாக்குகள் உள்ளன. ஆனால் போய் பார்த்தால் 11 பேர் தான் இருக்கிறார்கள். மற்றவர்களை யாருக்கும் தெரியவில்லை. எம்.பி. ஸ்டேட் எலெக்ட்ரானிக் டிபார்மெண்ட் கார்ப்பரேஷன் என்கிற அமைப்பு இந்த முறைகேடுகளை ஒப்புக்கொண்டிருக்கிறது. 7 லட்சத்து 95 ஆயிரம் வீடுகளில் 20க்கும் மேற்பட்ட வாக்குகள் உள்ளன. அதில் 2 ஆயிரத்து 354 வீடுகளில் 40க்கும் மேற்பட்ட வாக்குகள் உள்ளன. மிகவும் வெளிப்படையாக வாக்கு திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.

Karnataka Elections 2023 vote

ஒரே வீட்டில் பிராமணர், பிற்படுத்தப்பட்டவர், பட்டியல் இனத்தவர், பழங்குடியினத்தவர், சிறுபான்மையினர் உள்ளனர். வழக்கமாக ஒவ்வொரு வீடாக சென்று வாக்காளர்களை சரிபார்ப்பார்கள். அந்த வேலை முடிந்த உடன்தான் இவர்கள் போலி வாக்காளர்களை சேர்த்துள்ளனர். எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட நிலையில், அவர்கள் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் பலருடைய அப்பாவின் பெயர் புள்ளியாகும். அம்மாவின் பெயரும் புள்ளியாகும். எஸ்.ஐ.ஆர். முறையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணிக்கு எதிர்க்கட்சி சார்பில் ஆர்.ஜே.டி. ஆளுங்கட்சி தரப்பில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி உதவி புரிந்துள்ளது. பாஜக உடன் கூட்டணி வைத்துள்ள கட்சியை வைத்துக்கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். அப்படி செய்யும்போது தங்களுக்கு வாக்களிப்பவர்கள், வாக்களிக்காதவர்கள் என்று பார்த்து பெயர்களை நீக்கியுள்ளதாக தான் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாக்காளர் பட்டியலில் 2 லட்சத்து 98 ஆயிரத்து 42 வீடுகளுக்கு பூஜியம் என்று குறிப்பிட்டுள்ளனர். சில இடங்களில் இரட்டை பூஜியங்கள் போட்டுள்ளனர். 22 லட்சம் பேர் இறந்துவிட்டதாக சொல்லப்பட்ட நிலையில், அவர்களில் இருவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். இதை எல்லாம் பார்த்து நீதிமன்றம் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகளில் இவ்வளவு முறைகேடு உள்ளது. அதனால் அதற்கு தடை விதிக்கிறோம் என்று சொல்லவில்லை. தற்காலிகமாக நீக்கப்பட்டவர்களின் விவரங்களை வெளியிட உத்தரவிட்டுள்ளது. மெஷின் ரீடபிள் பார்மேட்டில் வாக்காளர் பட்டியல் தொடர்பான தரவுகளை வழங்கிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பீகாரில் மொத்தம் 87 லட்சத்து 898 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதை 235 வாக்குச்சாவடிகளில் ஆய்வு செய்கிறபோது இவ்வளவு குளறுபடிகள் இருப்பது தெரியவருகிறது. உச்சநீதிமன்றத்தில் அண்மையில் ஒரு தீர்ப்பு வந்துள்ளது. பானிப்பட்டில் உள்ள பவ்னா என்கிற கிராமத்தில் 2022 பஞ்சாயத்து தேர்தலில் குல்தீப் சிங் என்பவர் வெற்றி பெற்றதை எதிர்த்து மோகித் குமார் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இதில் வாக்குப் பெட்டியை பயன்படுத்தி நடைபெற்ற தேர்தலில் மோகித்குமார் என்பவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தற்போது 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை வெளியிடு. அவர்களில் தகுதி உள்ளவர்கள் மீண்டும் விண்ணப்பித்தால் அவர்களின் பெயரை சேர்க்க வேண்டும். அதற்கு ஒரு 30 நாட்கள் காலக்கெடு உள்ளது. இந்த பணிகளில் அரசியல் கட்சிகளை ஈடுபடுத்தக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது. தற்போது இடைக்கால தடை போன்றுதான் விதித்துள்ளனர்.

பூனம் அகர்வால் என்ற பத்திரிகையாளர் தேர்தல் மோசடிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டுள்ளார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் கிட்டத்தட்ட 140 தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். வெற்றி பெற்ற வாக்கு வித்தியாசம் குறைவாக உள்ள இடங்களில் சோதனை செய்து பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார். அங்குதான் அவர்கள் கள்ள ஓட்டுகள் போட்டுள்ளனர். 2010 குஜராத் சட்டமன்றத் தேர்தலில் கிட்டத்தட்ட 60 தொகுதிகளில் 8 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வாக்குகள் அளவுக்கு கூடுதல் வாக்குகள் பதிவானதாக காங்கிரஸ் கட்சியினர் சொல்கிறார்கள். ஆனால் தற்போது ராகுல் அதை வெளியிட வேண்டிய விதமாக வெளியிட்டதால், அவர் மீதான ஈர்ப்பு கூடியுள்ளது. முன்பு காங்கிரஸ் தரப்பில் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை பாஜக தன்னுடைய ஆதரவு ஊடகங்களை வைத்து ஒன்றுமில்லாமல் செய்துவிடும்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் குஜராத்தில் பர்தான்பூர்  மகிசாகர் மாவட்டத்தில் விஜய்பாபு என்கிற நபர், ஒரு விஷயம் செய்கிறார். வாக்கு திருட்டு எப்படி நடைபெற்றிருக்கும்  என் சொல்லிக்காட்டுகிறார். தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக ராகுல்காந்தி சிசிடிவி காட்சிகள் வேண்டும் என்று சொல்கிறார். ஆனால் இவர் லைவ் காட்சிகளையே வழங்கியுள்ளார். அந்த வீடியோவில் வாக்குப்பதிவு இயந்திரத்தை காண்பித்து இது தன்னுடை அப்பனுடையது என்றும், மொத்தமே பாஜக தான் என்று சொல்கிறார். பின்னால் தேர்தல் அலுவலர்கள் நிற்கிறார்கள். அவர் அங்கே வைத்து வாக்களித்துவிட்டு, இன்ஸ்டாகிராமில் லைவ் போடுகிறார். வெளியே வந்ததும் அவர் கைது செய்யப்பட்டார்.

தற்போது அவர் என்ன செய்கிறார் என்று தேடி பார்த்தபோது, அவர் புஷ்பா படத்தில் வருவதுபோல தனக்கு இந்த நாடே வேண்டும் என்று ரீல்ஸ் போட்டுள்ளார். மேலும், அவர் கைதுசெய்யப்பட்டபோது, காவல்துறை வாகனத்தில் கைவைத்துக்கொண்டு போஸ் கொடுக்கிறார். இதன் மூலம் வாக்குச்சாவடியில் மோசடி செய்து நேரலை செய்தாலும், கொஞ்ச நாள் கழித்து வெளியே வந்துவிடலாம். எந்த பெரிய தண்டனையும் கிடையாது என்கிற செய்தியை பாஜக தெரிவித்துள்ளது. இவன் முட்டாள் என்பதில் வீடியோ வெளியிட்டுள்ளான். ஆனால் வீடியோ வெளியிடாமல் கமுக்கமாக இந்த முறைகேடுகளை செய்தவர்களை அம்பலப்படுத்த வேண்டியது நமது கடமையாகும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ