spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஅண்ணா - நினைத்தாலே இனிக்கும் நேசம் நெஞ்சோடு உறவாடும்

அண்ணா – நினைத்தாலே இனிக்கும் நேசம் நெஞ்சோடு உறவாடும்

-

- Advertisement -

சங்கீதா. இரா.கண்ணன்

அண்ணா எனும் மூன்று எழுத்துச் சொல் அகம் முழுவதும் பரவி, பொதுவாழ்வை ஆராதனை செய்யத் தூண்டும். பச்சையப்பன் கல்லூரியில் படிக்கின்ற மாணவப் பருவத்திலேயே ஓய்.எம்.சி.ஏ. மன்றத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டு தம் நெஞ்சில் தோன்றிய நேர்த்தி மிகு கருத்துகளை முன் வைத்து வாதிடும் பழக்கத்தைக் கொண்டிருந்தார் அண்ணா.அண்ணா - நினைத்தாலே இனிக்கும் நேசம் நெஞ்சோடு உறவாடும்

அதன்பிறகு நீதிக்கட்சி மேடைகளில் பல பிரபலங்களின் ஆங்கிலப் பேச்சை தமிழில் மொழி பெயர்த்துப் பேசி வந்தார். அடுத்து நீதிக்கட்சி மாநாடுகளில் மாதாட்டு உணவு இடைவேளையில் அண்ணாவை பேசச் சொன்னார்கள். பேசினார் அண்ணா; கூட்டத்தினர் உணவருந்த மறந்து அண்ணாவின் சொற்பொழிவைக் கேட்டுக்கொண்டிருந்தனர்.

நீதிக் கட்சியில் சிறந்ததொரு இடத்தைப் பெற்ற அண்ணா அவர்கள், மேடைப்பேச்சில் பல புதுமையைப் புகுத்தி புகழ்க்கொடி யேற்றினார். ஆங்கில பாணியில் தமிழ்ச் சொற்களை அடுக்கு மொழியில் பேசியும் எழுதியும் பேச்சிலும் எழுத்திலும் புதுமைகளைப் புகுத்தினார் அண்ணா.

we-r-hiring

மேடைப் பேச்சில் மட்டுமன்றி எழுத்திலும் தமிழ் ஆங்கிலத்தில் எதுகை மோனையெனும் இலக்கிய வடிவம் காட்டினார் இனியவர் அண்ணா அவர்கள். சங்க இலக்கியம் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களைப் பழுதறக் கற்ற அண்ணா அவர்கள் ஆங்கில எழுத்தாளர்கள் கவிஞர்களின் படைப்புகளைக் கற்று எளிய நடையில் தமிழில் பெயர்த்து தமிழருக்கு வழங்கினார்.அண்ணா - நினைத்தாலே இனிக்கும் நேசம் நெஞ்சோடு உறவாடும்

அவர் உள்ளம் கவர்ந்த ஜார்ஜ்பொ்னார்ட்ஷா, இரவின் வாலஸ், சாமா்செட் மாம், வால்ட் விட்மன், கிப்பன், மாக்ஸிம் கார்க்கி, வால்டேர், ரூசோ, ஷெல்லி காண்டேகர் போன்றவர்களின் படைப்புகளிலிருந்து மொழிபெயர்த்துக் காட்டி இளைஞர்களின் இதயத்தில் தனியிடம் பெற்றார் பேரறிஞர் அண்ணா.

தந்தை பெரியாருடன் பதினைந்து ஆண்டுகள் பயணித்த அண்ணா அவர்கள் அய்யாவின் பேச்சுகள் சிறு சிறு நூல்களாக வெளிவருவதற்கு ஆவன செய்தார். குறிப்பாக ஐரோப்பாவின் ஆன்றோர்,சான்றோர், அரசியல், ஆட்சிமுறை, போர்கள். அதனால் ஏற்பட்ட மறுமலர்ச்சி, ஏற்படும் மாற்றம் என்பதையெல்லாம் அண்ணாவின் எழுத்தில் படிக்கின்றபோதே இதயத்தின் ஆழத்தில் பதிந்துவிடுவதை உணரலாம்.

அடுத்ததொரு சிறப்பு யாதெனில் உலகினர் தந்த அனைத்தையும் உற்றுநோக்கிப் படித்து ஓரிடத்தில் குவித்து வைத்து, வகை பிரித்து இனிய தமிழில் எளிய நடையில் தன் தம்பிகளுக்கு வழங்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார் அண்ணா.அண்ணா - நினைத்தாலே இனிக்கும் நேசம் நெஞ்சோடு உறவாடும்சனாதனம், சமத்துவம், ஆரியம், திராவிடம், அரசியல், ஆட்சி, அரசு இவற்றின் தரவுகளை தெரிவுறுத்தும் கட்டுரைகளைத் தொடாந்து திராவிட நாடு வார இதழில் வெளியிட்டு வந்தார் அண்ணா.

அடுத்து சமுதாய இழிவுகளை நீக்கும் வகையிலும், ஆரிய எழுத்தாளர்களால் உருவாக்கப்படும் அபத்தங்களையும், அவலங்களையும் தனது நூற்றுக்கும் மேற்பட்ட நாடகப் படைப்புகளின் மூலம் விளக்கியிருந்தார் அண்ணா.

நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், ஆகியவற்றில் தொடர்ந்து எழுதியும் பேசியும் வந்த அண்ணா அவர்களின் பின்னால் இலட்சக்கணக்கான இளைஞர்கள் அணி வகுத்து நின்றனர்.அண்ணா - நினைத்தாலே இனிக்கும் நேசம் நெஞ்சோடு உறவாடும்

1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் சிறை சென்ற அண்ணா அவர்கள் தொடர்ந்து பல தடவை சிறையில் அடைக்கப்பட்டார். அதில் அவர் எழுதிய ஆரியமாயை நூலுக்காகவும் சிறை புகுந்தார். 1962 தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த அண்ணா அவர்கள் சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். அப்போது சிங்கப்பூர், விமான நிலையத்தில் அவரை வரவேற்க வந்த கூட்டம் வரலாறு ஆனது. அதுவரை கட்டணம் இல்லாமல் விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டது. அண்ணா வருகையின் போது கட்டணம் வசூலிக்கப்பட்டது. அதுவும் அண்ணாவுக்குத்தான் கூட்டம் அதிகமாய் வந்தது வரலாறு ஆனது.

1962 நாடாளுமன்ற மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அண்ணா அவர்கள் அங்கு அவர் பேசியபோது நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு புது வரலாறாகப் பதிவானது. ஏற்கனவே 1957, 1962 காலத்தில் தமிழ்நாடு சட்டப் பேரவையில் அவர் ஆற்றிய உரைகள் மக்களாட்சி மரபு, மாண்புகளை உலகத்திற்கு உணர்த்தியது.அண்ணா - நினைத்தாலே இனிக்கும் நேசம் நெஞ்சோடு உறவாடும்

ஏடு கொள்ளாத அளவுக்கு எழுதிக்குவித்த அண்ணா அவர்கள் பொதுக்கூட்ட மேடைகளில் கல்லூரி அரங்குகளில் கலாசாலை மன்றங்களில் ஆற்றிய உரைகள் உலகளாவிய இடத்தைப் பெற்றது. எழுத்து பேச்சு மட்டு மன்றி படத்துறையில் ஈடுபாடு கொண்டு தான் தேசித்த கொள்கைக் கருத்துகளை திரைப்படங்களிலும் பதியவைத்து மக்களிடம் கொண்டு சென்று வரலாறு படைத்தார் அண்ணா.

புராண, இதிகாச, சரித்திரக் கதைகளைப் படமாக்கி வந்த சூழலில் சமூகத்தின் சிக்கல்களை தேவைகளை வலியுறுத்துகின்ற கருத்துகள் கொண்ட படங்களுக்கு வழிகாட்டியது அண்ணாவுடைய திரைத்துறை படைப்புகள். அவர் எழுதி நடித்த நீதி தேவன் மயக்கம், சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம், ஆகிய இரண்டு நாடகங்களும் நாடக வரலாற்றில் புதுமையான படைப்புகளாகும். மாற்றாகும் மதிக்கும் வண்ணம், பகைவரும் பாராட்டும் வண்ணம், அவர் வாழ்வின் மொத்த நாட்களும் ஏழை, எளிய மனிதர்களின் வாழ்வின் உயர்வுக்காகப் பயன்பட்டது.

அறிஞர் அண்ணா அவர்களும் அவர் தம் தம்பியரும் வெளிநாடுகளைப்போல் தமிழ் நாட்டை உருவாக்கவேண்டும். அதற்குத் தமிழர்களை ஆயத்தப்படுத்த வேண்டும் என்று நினைத்தார்கள்.அண்ணா - நினைத்தாலே இனிக்கும் நேசம் நெஞ்சோடு உறவாடும்அதனால்தான் இரவு பகல் பாராமல் தமிழ்நாட்டைச் சுற்றிவந்து தமிழர்களின் அறிவை, உணர்வை கூரேற்றிக் கொண்டிருந்தார் அண்ணா. சிங்கப்பூர் மலேசியத் தமிழர்கள் விரும்பி திருப்பத் திரும்ப அழைப்பு விடுத்ததால் அங்கு சென்றார்.அவரது வருகையால் அங்குள்ள தமிழர்கள் மீது சீனர்களுக்கும் மலேயர்களுக்கும் மதிப்பும் மரியாதையையும் கூடியது.

அதையடுத்து அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழகம் அறிஞர் அண்ணாவுக்கு ‘சப் பெலோசிப்’ என்ற விருது தருவதாக அறிவித்து அண்ணா அவர்களுக்கு அழைப்பு விடுத்தது. சப் பெலோசிப் விருதின் பொருள் இது தான், அதாவது ஓய்வே கிடைக்காத பொது வாழ்வு உழைப்பாளரை அழைத்து தங்கள் பல்கலைக்கழக மாணவர்களுடன் ஒருவார காலம் தங்கி உண்டு உறங்கி உறவாடி மகிழ வைத்து அனுப்புவதுதான்.

அந்த வகையில் அண்ணா ஆறாவது மனிதராகச் சிறப்பிக்கப்பட்டார். அந்த ஆறுபேரில் ஐந்து பேர் அமெரிக்கர்கள். அமெரிக்காவைத்தாண்டி அழைக்கப்பட்டது அண்ணா அவர்கள் மட்டும்தான். இந்தப் பட்டத்தை ஏற்றுக்கொண்டதற்கு அண்ணா சொன்ன காரணம் எண்ணி எண்ணி இன்புறத்தக்கதாகும்.அண்ணா - நினைத்தாலே இனிக்கும் நேசம் நெஞ்சோடு உறவாடும்

அமெரிக்காவில் சிலபேர் ஒரு பள்ளியை ஏற்படுத்த நினைத்து அதற்காக நன்கொடை கேட்டு விளம்பரம் செய்தார்கள். நன்கொடைகள் வந்தன. வந்த கொடைகளில் சென்னையில் ஆளுநராக இருந்த எலிகு யேல் என்பார் அனுப்பிய நான்கு பொதி பருத்திதான அதிக மதிப்புடையதாக இருந்ததால் அந்த எலிகு யேலின் பெயரில் பள்ளியைத் தொடங்கினார்கள். அந்தப் பள்ளிதான் பல்கலைக்கழகமாக வளர்த்திருக்கிறது. தமிழகத்தின் பகுத்தியில் உருவான பல்கலைக் கழகம் என்பதால்தான் அந்த பெல்லோசிப் அழைப்பை விரும்பி ஏற்றுக்கொண்டதாகச் சொன்னார் அறிஞர் அண்ணா.

அரசியல் பொதுவாழ்வில் அண்ணா வகுத்த இலக்கணம் இன்றுவரை உலகம் உவந்து போற்றுவதற்குரியது. வணிகம், பொருள், பணத்தாசையை முதன் மையாகக் கொண்ட உலகத்தில் கட்மை கண்ணியம் கட்டுப்பாடு, எதையும் தாங்கும் இதயம், சுத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு எனும் அறிவுரைகளும் முழக்கங்களும் இளையோர்முதல் முதியோர்வரை ஏற்றுக் கொண்டு இதயத்தில் நிலைநிறுத்தி கடை பிடிக்க வேண்டிய தியாக இலக்கணமாகும்.

அண்ணா அவர்களின் பொதுவாழ்வும் அதன் தொடர் நிகழ்வுகள் அனைத்தையும் நினைத்தாலே இனிக்கும்; நெஞ்சோடு நேசம் உறவாடும்.

டிரம்ப் நிர்வாகத்தின் வரி வெறி!

MUST READ