spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைடெல்லி கார் வெடிப்பு! யார் டார்கெட் தெரியுமா? பெரிய சதித்திட்டம் இருக்கு? பொன்ராஜ் நேர்காணல்!

டெல்லி கார் வெடிப்பு! யார் டார்கெட் தெரியுமா? பெரிய சதித்திட்டம் இருக்கு? பொன்ராஜ் நேர்காணல்!

-

- Advertisement -

நாட்டில் தேர்தல்களின் போது நடைபெறுகிற தீவிரவாத தாக்குதல் சம்பங்களினால் அதிகளவில் பயன்பெறுவது பாஜக மட்டும் தான் என்று அரசியல் விமர்சகர் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

டெல்லி செங்கோட்டை கார் வெடிப்பு சம்பவம் குறித்து அரசியல் விமர்சகர் பொன்ராஜ் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- தீவிரவாதத்தின் தாக்கம் இன்னும் இந்தியாவில் இருக்கிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது. ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு தீவிரவாதத்திற்கு சரியான பாடம் கற்பித்துவிட்டதாக பிரதமர் மோடி சொன்னார். ஆனால் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அப்போது தீவிரவாதம் இன்னும் அழித்து ஒழிக்கப்படவில்லை என்பது தெரிகிறது. டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற துயரகரமான சம்பத்தில் 15 பேர் உயிரிழந்து பலர் காயமடைந்திருப்பது மக்கள் மத்தியில் ஒரு அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. செங்கோட்டை அருகே கேட் நம்பர் 1 அருகே காரில் இருந்த குண்டு வெடித்திருக்கிறது. ஏற்கனவே 3500 கிலோ வெடிமருந்து பொருட்கள் ஹரியானாவில் கைப்பற்றப்பட்டிருக்கிறது. அதற்கு பிறகு உளவுத்துறை அறிக்கையில் பாதுகாப்பில் ஏன் இந்த அளவுக்கு குறைபாடு ஏற்பட்டிருக்கிறது. வாகனங்கள் சோதனைப்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக கார், பகல்காமை சேர்ந்த தாரிக் என்பவரிடம் விற்கப்பட்டிருக்கிறது. அவருடைய நண்பர் கைது செய்யப் பட்டிருக்கிறார். ஒரு பெண்மணியும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

கைதானவர்களுக்கு ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புக்கும் தொடர்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மசூத் ஆசாரை ஒழித்துவிட்டோம். குடும்பத்தினரை அழித்துவிட்டோம் என்று சொன்னார்கள். ஆனால் இன்னும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தாக்கம் இருக்கிறது என்பது விசாரணைக்கு பிறகே தெரியவரும். ஆண்டுதோறும் ஏதாவது ஓரிரு குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடக்கிறது. சதிச் சம்பவங்கள் நடக்கின்றன. குற்றச்சாட்டுகள், கைதுகள் நடக்கின்றன. சிலர் தண்டனை பெறுகிறார்கள். சிலர் விடுவிக்கப்படுகிறார்கள். சில நேரங்களில் குண்டுடிப்புகளும், தீவிரவாத செயல்களும் தேர்தலுக்கு அருகாமையில் வருகின்றன. இவற்றை எல்லாம் பார்க்கும்போது தீவிரவாத செயல்கள் தொடர்ந்து அரங்கேறி கொண்டுதான் வருகிறது. இதை தடுத்து நிறுத்துவதற்கான உட்கட்டமைப்பு வசதிகள், தைரியம் இன்னும் போதுமான அளவுக்கு இல்லை என்றுதான் நினைக்கிறேன். அதற்குள்ளாக பல்வேறு ஊடகங்கள் இதை பாகிஸ்தானின் சதி என்று இஸ்லாமியர்களுக்கு எதிராக திருப்பி விடுகிற வேலையை தான் செய்கிறார்கள். ஆனால் எது உண்மை என்பது போக போக தான் தெரியும்.

2019 மக்களவை தேர்தலுக்கு 56 நாட்களே இருந்தபோது, புல்வாமா தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். உடனடியாக பேசு பொருளாக்கப்பட்டு, தீவிரவாதிகள் மீது பய உணர்வு ஏற்படுத்தப்பட்டு, இதன் காரணமாக தீவிவாத செயல்களில் ஈடுபடுபவர்கள் இஸ்லாமியர்கள் என்கிற எண்ணத்தை உருவாக்கி அதை தேர்தலில் அறுவடை செய்தது பாஜக. ஆனால் தேர்தலுக்கு பிறகு சம்பவத்திற்கு காரணமே பிரதமர், உள்துறை அமைச்சர் தான், காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்தார். சிஆர்பிஎப் வீரர்களுக்கு ஹெலிகாப்டர் வழங்க வேண்டும் என்று கடிதம் எழுதி கேட்டபோதும், அவர்கள் வழங்கவில்லை. பகல்காம் தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்ட பிறகு அந்த இடத்திற்கு செல்லாத பிரதமர், நேரடியாக சென்றது பீகார் பிரச்சாரத்திற்கு தான். அங்கு சென்று இது குறித்து பேசினார். பீகாரில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவுக்கு முதல் நாளில் செங்கோட்டையில் கார் குண்டு வெடிப்பு நடக்கிறது.  ஒவ்வொன்றுக்கும் பின்னால் அரசியல் சதி இருக்குமோ என்கிற எண்ணம் வரும். ஏன் தீவிரவாதிகள் எப்போதும் தேர்தல் வரும் நேரத்தில் பாஜகவுக்கு வாக்குகள் போகிறது மாதிரி சாதாரண மக்களின் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். அதை வைத்து பாஜக, தேர்தல் பிரச்சினையாக மாற்றுகிறது. அந்த தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக மட்டும்தான் நாட்டை காப்பாற்றுகிற கட்சி. மற்றவை எல்லாம் தீவிரவாதத்திற்கு ஆதரவான கட்சி என்று கட்டமைக்கப்படுகிறது. அதன் மூலம் இந்துக்களின் வாக்குகளை குவித்து  வெற்றி பெற்று குளிர்காய்கிறது பாஜக.

தீவிரவாதிகள் யாருக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள். பாஜகவுக்கு ஆதரவாக மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும், இஸ்லாமியர்களுக்கு மத்தியில் வெருப்பை ஏற்படுத்தும் எண்ணத்தில் இதை செய்கிறார்களா? இதுபோன்ற சம்பவங்களை ஆராய்ந்து பார்த்தால் இதனால் அதிகம் பயன் பெற்றது பாஜக தான். எனவே நாம் அந்த கோணத்திலும் பார்க்க வேண்டும். பீகார் தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாக செங்கோட்டை குண்டுவெடிப்பு நடைபெற்றுள்ளது. அதற்கு முன்பாக காங்கிரஸ் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதாக பாஜக குற்றம்சாட்டுகிறது. இவற்றின் மூலமாக பீகார் மக்களிடம் அச்ச உணர்வை ஏற்படுத்தி, பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்கிற போலரைசேஷன் நடைபெற்றிருக்குமோ என்கிற சந்தேக கண்களோடு பார்க்க வேண்டி உள்ளது. குண்டுவெடிப்பு நடைபெற்ற உடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா அங்கு சென்று பார்வையிட்டார். இது தொடர்பாக கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதில் எந்த தவறும் கிடையாது. ஆனால் இந்த சம்பவத்தை வைத்து அரசியல் செய்து, அரசியல் லாபம் பெறும்போது தான் சந்தேகம் ஏற்படுகிறது.

டெல்லி தலைநகர் பகுதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியாகும். அங்கு குண்டுவெடிப்பு நடைபெற்றுள்ளது மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடுகள், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்பட்டுள்ளது. இதற்கு பொறுப்பேற்று அமித்ஷா பதவி விலகுவாரா? கோவையில் கார் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றபோது ஆளுநர் ரவி, அண்ணாமலை போன்ற பாஜகவினர், திமுக அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். ஆனால், டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக அவர்கள் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இதுபோன்ற ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்றிருந்தால், பாஜக கடும் விமர்சனங்களை வைத்திருக்கும். இன்றைக்கு பாகிஸ்தான் மீது பழியை போடும் கோடி மீடியாக்கள், காங்கிரஸ் தான் குண்டுவைத்தது என்று சொல்வார்கள். இந்த குண்டுவெடிப்புக்கு பதில் அளிக்க வேண்டிய மோடி, அமித்ஷா போன்றவர்கள் எந்த கேள்விக்கும் உள்ளாக்கப்படாமல், தீவிரவாதிகள் மீது பழி போடுகிறார்கள். தீவிரவாதிகள் செய்கிற நடவடிக்கையால் பாஜக தான் பலன் பெறுகிறது. வாக்குகள் பாஜகவுக்கு சாதகமாக மாறுகின்றன. அவ்வளவுதான், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ