திராவிட அரசியலும் அறிவியல் தொழில்நுட்பமும் என்ற தலைப்பில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஆவடியில் பேசுகிறார்.
திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் அரசியல் பயிற்சி கூட்டம் நடைபெறவுள்ளது.
திராவிட இயக்கங்களின் முதன்மையான பணி மனிதர்களை அறிவுப் பாதைக்கு அழைத்து வருவது.
இந்த பூமியில் முதன்முதலில் தாவரங்கள் தோன்றியது. அதை தொடர்ந்து பறவையினம் தோன்றியது. மூன்றாவதாக தொன்றியது விலங்கினம்.
குரங்கில் இருந்து மனிதன் உதிர்த்து முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. மனிதன் தோன்றியதும் அவன் கண்டுப்பிடித்த முதல் கண்டுப்பிடிப்பு “கடவுள்”. அவன் கண்டுப் பிடித்ததை காப்பாற்றவும் இதுநாள் வரை தவறியதில்லை.
எந்தெந்த இடத்தில் கேள்வி இல்லையோ அந்த இடங்களில் எல்லாம் கடவுள் ஆக்ரமித்துக் கொண்டார். எங்கே கேள்வி பிறந்து, அந்த கேள்விக்கு விடை கிடைத்ததோ அங்கிருந்து கடவுள் மெதுவாக விடைப் பெற்றுக் கொள்வார். எங்கே கேள்வி இல்லாமல் இருக்கிறதோ அங்கே கடவுள் உயிருடன் இருக்கிறார்.
மனிதனுக்கு முன் தொன்றிய பறவைகள் பறக்கிறது, காகம், கழுகு, குருவி, பட்டாம்பூச்சி என்று அனைத்தும் பறக்கிறது. தரையில் வாழ்கின்ற கோழி கூட பறக்கிறது. ஆனால் பறவைகளுக்கு பின்னர் பிறந்த மனிதனால் பறக்க முடியவில்லை.
பறவைகளுக்கு றெக்கைகளை கொடுத்த கடவுள் மனிதனுக்கு றெக்கை களை கொடுக்க மறந்தது ஏன்? அதுதான் கடவுள் செய்த விதி, கடவுள் மனிதனுக்கு செய்த சதி என்ற முடிவிற்கு மனிதன் வந்துவிட்டான். அதை பல லட்சம் ஆண்டுகளாக நம்பி வந்தான்.
ஒரே ஒருவனுக்கு திடீரென்று அறிவு வந்தது. நியூட்டன் தோட்டத்தில் அமர்ந்திருந்த போது ஆப்பிள் பழம் மரத்தில் இருந்து கீழே பூமியில் விழுந்தது. இங்கே தான் நியூட்டனின் அறிவு வேலை செய்தது. மரத்தில் இருந்து உதிரும் பழம் மேலே போகாமல் கீழே பூமியில் விழவேண்டியது ஏன் என்ற கேள்வி எழுந்தது.
அதுவரை தரையில் தேங்காய் விழுந்தது, மாங்காய் விழுந்தது. ஒருவரும் கண்டுக் கொள்ளவில்லை. நியூட்டன் ஆராய்ந்தார். அடுத்த நூற்றாண்டில் விமானம் கண்டுப் பிடிக்கப்பட்டது.
அதுவரை விதியின் பெயராலும், கடவுளின் பெயராலும் பறக்கமுடியது என்று மனிதன் நம்பி வந்தான். அந்த விதியை அறிவு உடைத்தது. விமானத்தை கண்டுப்பிடித்தான். மனிதன் பறந்தான்.
மனிதனுக்கு அறிவு பிறந்ததும் கடவுள் புன்முறுவலுடன் விலக்கிக் கொண்டார்.
மனிதன் தன் அறிவால், தன் ஆற்றலால் தன்னைத்தானே பறக்கும் சக்தி உள்ளவன் என்று அறிந்து கொள்வதற்கு லட்சக்கணக்கான ஆண்டுகள் தேவைப்பட்டது.
இதுவரை மனிதன் அறிந்துக் கொண்டது கையளவு, அவன் அறியாதது கடலளவு.
அறிவை தேடும் முயற்சியில் ஒரு பகுதிதான் ஆவடியில் அரசியல் பயிற்சி கூட்டம். அது அறிவு பயிற்சிக்கான கூட்டம்.
ஆவடி பேருந்து நிலையம் அருகில் APR பார்ட்டி ஹாலில் 23-08-2024 அன்று மாலை 6 அளவில் நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியை ஆவடி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமாகிய ஆவடி.சா.மு.நாசர் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.
திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் திருவள்ளூர் கிழக்கு மாவட்டத் தலைவர் தோழர் ஆ.ராஜி தலைமை தாங்குகிறார். APC NEWS TAMIL நிறுவனத்தின் ஆசிரியர் என்.கே.மூர்த்தி வரவேற்பு உரை நிகழ்த்துகிறார். இறுதியில் அம்பத்தூர் வே.மோகன்ராம் நன்றியுரை நிகழ்த்துகிறார்.
அனைவரும் வாரீர்! அறிவு கடலில் மூழ்குவீர்!!