spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைசீமானுக்காக குதிக்கும் குருமூர்த்தி... பாஜகவின் சதியை தோலுரித்த திருமுருகன் காந்தி!

சீமானுக்காக குதிக்கும் குருமூர்த்தி… பாஜகவின் சதியை தோலுரித்த திருமுருகன் காந்தி!

-

- Advertisement -

பெரியார் மண்ணில் பெரியார் எதிர்ப்பு அரசியலை பேசி சீமான் அதிக வாக்குகள் வாங்கி விட்டேன் என சவால் விடுவதற்காகத்தான் ஈரோடு இடைத்தேர்தலில் பாஜகவும், அதிமுகவும் போட்டியிடவில்லை என மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

we-r-hiring

பெரியாரை விமர்சிக்கும் சீமானை கண்டித்து அவரது வீட்டை முற்றுகையிடும் போராட்டம் அறிவித்துள்ளது தொடர்பாக திருமுருகன் காந்தி பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- சீமானை நேருக்கு நேர் எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மாநில கட்சிகளில் அதிகாரத்தில் இல்லாத கட்சிகளை பொதுவெளியில் மே 17 இயக்கம் விமர்சித்தது இல்லை. திமுக, அதிமுக என அதிகாரத்தில் உள்ள கட்சிகளை நோக்கிதான் விமர்சிப்போம். தமிழகத்தில் உள்ள சிறிய கட்சிகள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என நினைத்தோம். திமுக, அதிமுகவுக்கு மாற்றாக ஒரு பரந்துபட்ட ஜனநாயக கூட்டமைப்பு உருவாக வேண்டும் என விரும்பினோம். ஆனால் எந்த இடத்திலும் மாநில கட்சிகளை விமர்சிப்பது இல்லை. 2009 அழிவு என்பது மோசமான சூழல். அதுபோன்ற அழிவு வரக்கூடாது. சீமான் அரசியலில் எங்களுக்கு கருத்துவேறுபாடுகள் இருந்துள்ளன. ஆனால் நாங்கள் அதை பெரிதுபடுத்தியது கிடையாது. இயக்குநர் மணிவண்ணன், கொளத்தூர் மணி போன்றவர்கள் சொல்லிதான் நாம் தமிழர் கட்சி கட்டப்பட்டது. அதில் பொறுப்புகளில் இருந்தவர்கள் பெரியாரிய தோழர்கள்தான். இந்த போக்கு ஒரு கட்டத்தில் சரியான திசையை நோக்கி நகரும் என்று எதிர்பார்த்தோம. ஆனால 2014-15க்கு பிறகு அந்த நம்பிக்கை எங்களுக்கு போய்விட்டது. அந்த தேர்தலில் திமுக- அதிமுகவுக்கு மாற்றாக ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டும் என விரும்பினோம். அதை சிதைத்து சீமான் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக சென்றுவிட்டார்.

சீமான் கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் - புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்

இன்று திமுக எதிர்ப்பாளன் நான் என்று சீமான் சொல்கிறார். ஆனால் அவர் எப்போதும் திமுகவை எதிர்த்தது கிடையாது. இரட்டை இலை பக்கம் ஆதரவு தளத்தை திருப்பினார். 2011ல் அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார். இதனை அதிமுகவிடம் சொல்ல வழியில்லாமல் இருந்தார். அதற்காக தான் வைகோவை சென்று பார்த்தார். வைகோ மூலம் சொல்லித்தான் அன்றைய அதிமுக – மதிமுக கூட்டணியை ஆதரித்து பிரச்சாரம் செய்வதாக சொல்லிதான் அதிமுகவின் ஒப்புதலை பெற்றார். அதன் பின்னர் அதிமுக, மதிமுக கூட்டணி உடைகிறது. மதிமுக இல்லாதபோது எப்படி பேசுவது என யோசித்துகொண்டிருந்தார். அதன் பின்னர் அதிமுகவுடன் தொடர்பு எடுத்து அவர்களுக்காக பிரச்சாரம் செய்தபோது, அவர் ஒன்றை உணர்ந்து கொண்டார். இனி ஈழப் போராட்டத்தில் மதிமுகவுக்கு மாற்றாக தன்னை முன்னிருத்த வேண்டும் என முடிவுக்கு வந்தார். அப்போது, மதிமுகவுக்கும், அதிமுகவுக்குமான கசப்பு உணர்ச்சியை அவர் பயன்படுத்திக்கொணடார். வைகோவுக்கு ஆதரவாக நாங்கள் வாக்கு சேகரித்தோம் என்கிறார்கள். ஆனால் விருதுநகரில் நிறுத்தப்பட்ட திமுக வேட்பாளர் மிகின் லங்கா விமான சேவை தொடங்க காரணமாக இருந்தார். அதனால் அவர் குறித்த தகவல்களை வைகோவிடம் கூறினோம். காங்கிரஸ் எதிர்ப்பு நிலைப்பாட்டில் மே 17 இயக்கம் இருந்தது. அந்த தேர்தலில் அதிமுக சார்பில் 37 இடங்களில் வெற்றி பெற்றனர். ஆனால் அவர்களிடம் ஈழம் தொடர்பாக எந்த ஒரு நிபந்தனையையும் சீமான் முன்வைக்கவில்லை.

இதுதான் நடந்ததா? புயல் கட்சியில் வெடித்த புதிய பூகம்பம்
வைகோ பேச்சு

தமிழ்நாட்டில் 2014க்கு முன்பு இருந்த சூழல் வேறு, 2014க்கு பின்பு இருக்கும் சூழல் வேறு. மாநில அரசுகளின் உரிமைகளை நசுக்குவது, மாநில கட்சிகளை இல்லாமல் செய்வது. மத்திய பாஜக அரசு அனைத்துவித அடையாளங்களையும் அழிப்பது என்கிற அழிவு அரசியலை நோக்கி நகர்கிறார்கள். இதுவரை ஆர்எஸ்எஸ்க்கு எதிராக நாம் தமிழர் கட்சி என்ன செய்துள்ளது?. பாஜகவின் அரசியல் அதிகாரம் என்பது டெல்லியில் உள்ளது. நாம் அண்ணாமலை, தமிழிசையை எதிர்த்து அரசியல் செய்யவில்லை. மோடியின் திட்டங்கள் இங்குள்ளன. இன்றைக்கு யூஜிசியில் சட்டம் கொண்டுவந்து உள்ளனர். தமிழ்நாட்டு பல்கலைக் கழகங்களில் பட்டம் வழங்க முடியாது என்று சொல்கிறார்கள். அதனால் தமிழ்நாடடில் இன்று படிக்கும் மாணவர்களுக்கு டிகிரி கிடைக்கப் போவது இல்லை. இதனை எதிர்த்து சீமான் எதையும் பேசியிருக்க மாட்டார். அளுநர் மாநில சட்டங்கள் எதையும் நிறைவேற்ற விடாமல் தடுத்து வைத்துள்ளார். இதை எதிர்த்தும் அவர்கள் பேசவில்லை. இது திமுக அரசு மட்டும் அல்ல, அதிமுக அரசின் சட்டங்களையும் நிறைவேற்ற விடாமல் தடுத்தனர். மாநில அரசின் உச்சபட்ச அதிகாரம் சட்டங்களை இயற்றுவது. அதை டெல்லியின் புரோக்கர் ஒருவர் தடை செய்கிறார். இது ஒரு கட்சியின் பிரச்சினை அல்ல தமிழ்நாட்டின் பிரச்சினை. ஆனால் இதுவரை அவர் அப்படி கருதி போராட்டத்தை கட்டமைத்தது இல்லை. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பல்வேறு உரிமைப் பிரச்சினைகளில் பாஜக அனைத்து அதிகாரங்களையும் தன்வயப்படுத்துகிறது. நாம் மாநில பாஜக தலைமையை எதிர்த்து அரசியல் செய்ய வில்லை. இன்றைக்கு டெல்லியில் அதிகாரம் உள்ளது. அந்த அதிகாரத்தின் வாயிலாக தமிழ்நாட்டின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இதற்கு எதிரான எந்த போராட்டத்தையும் நாதக கட்டமைக்கவில்லை.

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம்!
Photo: Governor RN Ravi

சீமான் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளுடனும் முரண்பட்டு நின்றவர். அவருக்கு இந்து மக்கள் கட்சி உடனோ, இந்து முன்னணி உடனோ எந்த முரண்பாடும் இருந்தது இல்லை. காவிரி போராட்டத்தின் போது தீக்குளித்த விக்னேஷின் குடும்பத்திற்கு சீமான் என்ன செய்தார்? இங்கிருக்கும் மாற்று அரசியல் அமைப்புகள் உடன் எல்லாம் நீங்கள் கை கோர்த்து நிற்பதில் என்ன சிக்கல் வந்துவிட போகிறது. இன்று சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் உள்ளார். அவர் திமுக, அதிமுகவை எதிர்த்து சண்டைபோட்டு அடிபட்டு நிற்கிறார். அவரை கூட இவர் அங்கீகரிக்கலாம். திமுகவுக்கு எதிராக பேசிய சுப.உதயகுமாரையும் இவர் கொச்சையாக விமர்சிப்பார். மீத்தேன் எதிர்ப்பு போராட்டத்திற்காக போராடிய பேராசிரியர் ஜெயராமனுக்கு, கட்சிக்காரர் மூலம் கொலை மிரட்டல் விடுகிறார். அவர் தமிழ்தேசிய செயல்பாட்டாளர்களுக்கு எதிராக டார்கெட் செய்துதான் இழிவு படுத்தியுள்ளார். என்னை தெலுங்கன் என பேசியது, நம்மாழ்வாரை தெலுங்கன் என பேசியது. அனைத்துக்கும் ஆதாரம் உள்ளது. இங்கே தமிழின ஒற்றுமை வரக்கூடாது என்பதில் சீமான் தெளிவாக இருந்தார். திமுக, அதிமுகவுக்கு எதிராக எல்லோரும் சேர்ந்து ஒரு அமைப்பு உருவாக்கலாம் என்பதை உடைத்தவர் அவர்தான். தமிழ்நாட்டில் மாற்று அரசியல் உருவாவதை அவர் ஒருபோதும் விரும்ப மாட்டார். உடைத்துக்கொண்டும், சிதைத்துக்கொண்டும் இருப்பார்.

எந்த முற்போக்கு இயக்கத்தோடும் இளைஞர்கள் செல்வதை சீமான் தடுத்துக் கொண்டேதான் இருப்பார். பாஜக தமிழ்நாட்டிற்குள் நகர முடியாமல் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளது. இங்கே திராவிட இயக்கம் முன்வைத்த சமுக நீதி கோட்பாட்டிற்கு மாற்றாக எந்த கோட்பாட்டையும் அவர்களால் முன்வைக்க முடியவில்லை. அதற்கு பெரிய தடை கோட்பாட்டு தலைமை தான். தமிழ்நாட்டிற்கு கோட்பாட்டு தலைமை என்பது தந்தை பெரியார் முன்வைத்த கொள்கை திட்டம். அதனை தமிழ்நாட்டில் எந்த மாநில கட்சியும் எதிர்த்தது இல்லை. கொள்கை திட்டத்தை சிதைக்க பாஜகவால் முடியவில்லை. அதனால் கொள்கை திட்டத்தை கொண்டுவந்த பெரியாரின் மதிப்பை சிதைப்பதன் வாயிலாக கொள்கை திட்டத்தை உடைத்தெறிவது அவர்களது திட்டம். பெரியார் சொன்னால் வாக்கு விழுமா என்கிறார். அவர் பெயரை சொல்லிதான் இன்று திமுக, அதிமுக என்று வந்து நிற்கிறது. பாஜக சீமானை வைத்து, பெரியார் என்ற அந்த பிம்பத்தை, தமிழினத்தின் அடையாளத்தை உடைப்பதை திட்டமாக வைத்துள்ளது. பெரியார் என்பவர் சாமானிய மக்களிடம் சென்று சேர்ந்த தலைவர். அவரை சிதைப்பதன் மூலம் நீங்கள் இடஒதுக்கீட்டு கோரிக்கை நிராகரிக்க முடியும். சாதி மறுப்பு, பெண் விடுதலை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை நிராகரிக்க முடியும்.

திராவிட இயக்கத்தை எதிர்ப்பது என்பது அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் செய்யும் தவறுகளை எடுத்துச்சொல்லுங்கள். ஆனால் நீங்கள் பெரியாரை தகர்த்து விட்டால், அவர் முன்வைத்த கொள்கைகளை தகர்ப்பதற்கான வேலைதான் இது. திமுக, அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கும், அமைச்சர்களுக்கும் பெரியார் கொள்கைக்கும் தொடர்பு இல்லை. அப்படி இருந்தால் சீமான் பெரியாரை பேசிவிட்டு, எந்த மாவட்டத்திற்குள்ளாவது நுழைந்திருக்க முடியுமா? திமுக அமைச்சர்கள் வெகு சிலர்தான் பெரியாரிஸ்ட்டுகள். பண அரசியல், பதவி அரசியல், சுரண்டல் அரசியலை எதிர்க்கிறீர்கள் என்றால், யார் அதை செய்கிறார்களோ அதை நோக்கி பேச வேண்டும். ஆனால் அதை விட்டுவிட்டு கருத்தியலை நோக்கி பேசுகிறீர்கள். கருத்தியல் பேசும் இடம், கருத்தியலை உடைப்பேன் என்பது பாஜக உள்நுழைவதற்காக வாய்ப்பை கொடுக்கும். அது எந்த இடத்திலும் திமுக, அதிமுகவை வீழ்த்தி விடாது. பெரியார் எதிர்ப்பு அரசியல் என்பது தமிழ்நாட்டில் இல்லை. அண்ணாமலை ஏன் பெரியாரை எதிர்த்து பேசவில்லை. இடஒதுக்கீடு, தலித்துகள் விவகாரம் உள்ளிட்டவை குறித்து அண்ணாமலை பேச மாட்டார். அவர் ஏன் நடிக்கிறார் என்றால் இங்குள்ள அரசியல் சூழல் அப்படி. இங்கு மதங்களை கடந்து தமிழர்கள் என்ற அடையாளம் நமக்கு உள்ளது.

பெரியார் அரசியல் என்பது கட்சி கடந்த ஒரு அரசியலாக உள்ளது. இதை நாம் ஏன் பேச வேண்டும் என பாஜக நினைக்கிறது. இதனால் தனது அடியாள் சீமானை இறக்கிவிட்டிருக்கிறார்கள். அவர் காசு கிடைத்தால் எதை வேண்டுமானாலும் பேசுவார். ஈரோடு இடைத்தேர்தலில் பெரியார் எதிர்ப்பை பேசி நான் ஓட்டு வாங்கி காட்டுவேன் என சீமான் வருவதற்கு காரணம் என்ன என்றால் பாஜக, அதிமுக அங்கே இறங்கப்போவதில்லை. இப்போதைக்கு அதிமுகவும், பாஜகவும் தங்களது பலவீனத்தை காட்ட விரும்பவில்லை. ஆனால் அதிமுக வாக்குகளை திமுக எதிர்ப்பு என்ற அடிப்படையிலும், பெரியார் எதிர்ப்பு என்ற அடிப்படையில் பாஜக வாக்குகளையும் சீமான் பெறுவதுதான் திட்டம். ஏற்கனவே முந்தைய தேர்தல்களில் முறையே 11 ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் வாக்குகளை சீமான் வாங்கியுள்ளார். இந்த தேர்தலில் அதிமுக, பாஜக வாக்குகளையும் சேர்த்து 20 ஆயிரம் வாக்குகள் வாங்கினால் பெரியார் எதிர்ப்பு அரசியலை பேசி, பெரியார் ஊரிலே 20 ஆயிரம் வாக்குகள் வாங்கினேன் என்று பேச வேண்டும். இதனை சீமானை பேச வைத்து, பாஜக பெரியாரை எதிர்த்து பேசி எங்களால் ஓட்டு வாங்க முடியும் என்று காட்ட விருபுகிறார்கள். அதனால்தான் சீமானுக்கு ஆதரவாக குருமூர்த்தி இறங்குகிறார், தமிழிசை இறங்குகிறார். ஹெச்.ராஜா இறங்குகிறார். வெட்கம் இன்றி இவர்களும் வேண்டாம் என சொல்ல மறுக்கிறார்கள். அப்போது சீமானின் அரசியல் கேவலமான கீழ்த்தரமான அரசியலை செய்கிறார். இந்த இடத்திற்கு வரும்போது தான் சீமானை அம்பலப்படுத்த வேண்டிய தேவை ஏற்படுகிறது.

சீமான் பாஜக உடன்படுகிற அரசியலை செயகிறார். அவர் ஏன் ரஜினியை ஏன் பார்க்கிறார். அவருக்கும் இன்றைய தமிழ்நாட்டு அரசியலுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது. ரஜினி பாஜக பிரமுகர்களுடன் நெருக்கமாக இருப்பவர். அவர் வழியாகத்தான் குருமூர்த்தியிடம் பேசப்பட்டிருக்கிறது. அதுதான் இப்போது அம்பலமாகியுள்ளது. அதற்கு பின்னர் அண்ணா பல்கலை விவகாரத்திற்கு களமிறங்குகிறார். இந்த 4 வருடங்களில் அவர் திமுகவை எதிர்த்து போராடவில்லை. எதாவது பிரச்சினை என்றால் முதலமைச்சரை சென்று பார்த்துவிடுவார். அவர் யாருடனும் முரண்பட்டு நிற்க மாட்டார். சீமான் பெரியார் குறித்து விமர்சிக்கிறார். அதை மறுத்து எல்லோரும் பேசுகிறோம். அதற்கான ஆவணங்களும் வெளிவந்துவிட்டது. அதன் பிறகு வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் சீமான் அதை செய்யவில்லை. திரும்ப திரும்ப பேசிக்கொண்டு இருக்கிறார். மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிடுகிறார். ஒரு தகவல் தெரிந்துகொள்வதற்கும், நாட்டுடமை ஆக்குவதற்கும் என்ன தொடர்பு உள்ளது? விடுதலை, குடியரசு இரண்டும் அப்படியே படி எடுத்தகம் வெளியிட்டுள்ளனர். அதை வைத்து பேசுங்கள், பெரியாரை பாஜகவுக்காக ஆர்எஸ்எஸ்க்காக இழிவுபடுத்துகிறபோது சீமானை நேரடியாக எதிர்கொள்கிற நிலை ஏற்படுகிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

MUST READ