Homeசெய்திகள்கட்டுரைநெருக்கடிக்குள் இந்தியா - புதிய அரசுக்கு காத்திருக்கும் சவால் - என்.கே.மூர்த்தி

நெருக்கடிக்குள் இந்தியா – புதிய அரசுக்கு காத்திருக்கும் சவால் – என்.கே.மூர்த்தி

-

நாடு மிகக் நெருக்கடியான  காலக்கட்டத்தை நோக்கி சென்றுக் கொண்டிருப்பதை அரசியல் தெளிவுள்ள அனைவருக்கும்  தெரியும். இதுவரை மக்களுக்கு பாதுகாப்பாக இருந்து வந்த  சிபிஐ, ராணுவம், தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி மற்றும் ஊடகத்துறை போன்ற அனைத்து நிறுவனங்களும் ஆர்எஸ்எஸ் – பாஜக கட்டுப்பாட்டின் கீழ் சென்றுவிட்டது. நீதித்துறையும் இறுதி கட்டத்தில் போராடிக் கொண்டிருக்கிறது.நெருக்கடிக்குள் இந்தியா - புதிய அரசுக்கு காத்திருக்கும் சவால்இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதை எல்லோரும் ஒப்புக்கொள்கிறோம். ஜனநாயக நாட்டில், மக்கள் என்ன சொல்கிறார்களோ அதை ஆட்சியாளர்கள் கேட்க வேண்டும். மக்களுக்கு கல்வி, மருத்துவம், இருப்பிடம், வேலைவாய்ப்பு போன்ற அடிப்படை தேவைகளை  ஆட்சியாளர்கள் செய்து கொடுக்க வேண்டும். அதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை.

ஆனால் பிஜேபி ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் தலைகீழாக நடைபெறுவதை பார்க்க முடிகிறது. பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் சாலையில் இறங்கி ஒரு வருடத்திற்கு மேல் போராடினார்கள். அந்த விவசாயிகள் மீது மத்திய மந்திரியின் மகனை வைத்து காரை ஏற்றி கொலை செய்தார்கள். ஆனால் விவசாயிகள் பிரச்சனையை காது கொடுத்து கேட்கவில்லை. மணிப்பூர் மதக் கலவரத்தில் பற்றி எரிந்தது, இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்றார்கள். ஆட்சியாளர்கள் அவர்கள் பக்கம் திரும்பிக் கூட பார்க்கவில்லை.

https://www.apcnewstamil.com/news/article-news/fifth-phase-of-polling-bjp-loses-majority-nk-moorthi/86920

ஆர்எஸ்எஸ் – பிஜேபி சொல்வதை வேதவாக்காக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மிரட்டுகிறார்கள். ஆரம்பத்தில் மக்களை மிரட்டி பயமுறுத்தியவர்கள், அடுத்து அரசியல் கட்சி தலைவர்களை, முதலமைச்சர்களை, அமைச்சர்களை மற்றும் தொழில் அதிபர்களை என்று படிப்படியாக எல்லோரையும் மிரட்டி வருகிறார்கள்.நெருக்கடிக்குள் இந்தியா - புதிய அரசுக்கு காத்திருக்கும் சவால்ஆர்எஸ்எஸ் – பிஜேபி சொல்ல வருவது  என்னவென்றால் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே போன்று, அஜித்பவார் போன்று பிஜேபியுடன் ஐக்கியமாகி விடவேண்டும்.

அல்லது ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக், எடப்பாடி பழனிச்சாமி ஆகிய தலைவர்களை  போன்று சொல்வதை கேட்டுக் கொண்டு அமைதியாக பிழைத்துக் கொள்ள வேண்டும். இதுதான் பிஜேபி ஆட்சியாளர்கள் தரும் குறைந்த பட்ச வாய்ப்பு.

அவர்கள் சொல்வதை கேட்காமல் முதுகெலும்பை முறுக்கி கொண்டு எதிர் கருத்துகளை, கொள்கைகளை பேசினால் ஜார்காண்ட் முதல்வர் ஹேமந்த் சொரானை போன்று, டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை போன்று, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலைப் போன்று மற்றும் தமிழ்நாடு செந்தில் பாலாஜியைப் போன்று சிறையில் தான் இருக்க வேண்டும். இதுதான் ஆர்எஸ்எஸ் – பிஜேபியின் தாரக மந்திரம்.நெருக்கடிக்குள் இந்தியா - புதிய அரசுக்கு காத்திருக்கும் சவால்கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு பணமோசடி வழக்கு என்பது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று, குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பின்னர் சிறையில் தண்டனையை அனுபவிக்க வேண்டும்.

https://www.apcnewstamil.com/news/article-news/history-of-avm-studio-in-chennai-vyjayanthi-mala-made-her-debut-in-the-first-film/86932

தற்போது அந்த சட்டத்தை அவர்களுக்கு ஏற்றார் போல் முழுவதுமாக மாற்றிவிட்டார்கள்.

பணமோசடி வழக்கில் ஒருவரை குற்றவாளி என்று யூகித்தால் கூட அவர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய முடியும். (ஆதாரங்களை பிறகு திரட்டி கொள்ளலாம்) அவரை உடனடியாக கைது செய்து எவ்வளவு நாள் வேண்டுமானாலும் சிறையில் வைத்திருக்கலாம். ஜாமீன் கூட பெறமுடியாது. அவரே குற்றமற்றவர் என்று நிருபித்து விட்டு வெளியே வரவேண்டும்.

இதுதான் தற்போது நடைமுறையில் உள்ள பணமோசடி தடுப்பு சட்டத்தின் நிலைமை. அவர்கள் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் கைது செய்வார்கள்.நெருக்கடிக்குள் இந்தியா - புதிய அரசுக்கு காத்திருக்கும் சவால்அவர்களின் நோக்கம் எதிர்க்கட்சிகளை, எதிர் சித்தாந்தம் பேசக்கூடியவர்களை அழிக்க வேண்டும் அல்லது அவர்களின் செயல்பாடுகளை முடக்க வேண்டும் என்பதுதான் ஆர்எஸ்எஸ் – பிஜேபியின் உண்மையான திட்டம்.

பிஜேபியை எதிர்த்து வாக்களிக்கும் தமிழ்நாடு, கேரளா, ஒரிசா, மேற்குவங்கம், டெல்லி, பஞ்சாப் மற்றும் அரியானா போன்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்க மாட்டார்கள். பேரிடர் நிதியைக் கூட கொடுக்க மறுப்பார்கள். அடுத்தது ஆளுநரை வைத்து தனி அரசாங்கத்தை நடத்துவார்கள். அதையும் தாண்டி மாநில முதலமைச்சர்களை கைது செய்து சிறையில் அடைப்பார்கள். இதுதான் அவர்கள் நாட்டை வழிநடத்தும் முறை.

இது மிகவும் ஆபத்தான சர்வதிகார மனோபாவம். மூன்றாவது முறையாக மீண்டும் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் ரஷ்யா அதிபர் விளாதிமிர் புதினை போன்று எதிர்கட்சி தலைவர்கள் எல்லோரையும் சிறையில் அடைத்து வைத்துவிட்டோ அல்லது கொன்று விட்டோ தேர்தலை நடத்தி வெற்றிப் பெற்றதாக அறிவித்துக் கொள்வார்கள். பாகிஸ்தானில் இம்ரான்கானை சிறையில் அடைத்துவிட்டு, அவர் கட்சியை முடக்கி விட்டு தேர்தலை நடத்தியதைப் போன்று இந்தியாவிலும் நடத்த முயற்சி செய்தார்கள். ஆனால் அதில் ராகுல்காந்தி மட்டும் நீதிமன்றத்தால் தப்பித்துக் கொண்டார்.

இந்த நிலையில் ஜூன் 4 ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளது. மூன்றாவது முறையாக பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சட்டத்தை முழுமையாக திருத்துவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. ஒரு வேளை இந்திய கூட்டணி வெற்றிப் பெற்று புதிய அரசு அமைத்தால் இந்த நெருக்கடிகளை எப்படி சமாளிக்கப் போகிறது? எதற்கும் மக்கள் மன உறுதியுடனும், விழிப்புடனும் இருக்க வேண்டும்.

MUST READ