Homeசெய்திகள்கட்டுரைஐந்தாவது கட்ட வாக்குப்பதிவு - பாஜக பெரும்பான்மையை இழந்தது - என்.கே.மூர்த்தி

ஐந்தாவது கட்ட வாக்குப்பதிவு – பாஜக பெரும்பான்மையை இழந்தது – என்.கே.மூர்த்தி

-

ஐந்தாவது கட்ட வாக்குப்பதிவு - பாஜக பெரும்பான்மையை இழந்தது - என்.கே.மூர்த்தி

நாடாளுமன்ற தேர்தல் (2024) ஐந்தாவது கட்ட  வாக்குப்பதிவு 49 தொகுதிகளுக்கு நடந்து முடிந்துள்ளது. அதிலும் பிஜேபி இழப்பை சந்திக்கிறது.

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதில் முதல் நான்கு கட்டத்தில் 379 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிந்தது. தொடர்ந்து ஐந்தாவது கட்டத் தேர்தல் 49 தொகுதிகளுக்கு கடந்த 20ந் தேதி நடந்து முடிந்துள்ளது. 8 மாநிலங்களில் நடைப்பெற்ற இந்த  தேர்தலில் பிஜேபி மேலும் சரிவை சந்தித்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி மூத்தத் தலைவர் ராகுல்காந்தி போட்டியிடுகின்ற ராய்பரெலி, அமேதி, ஃபைசாபாத் ஆகிய முக்கிய தொகுதிகள் உள்ளிட்ட 14 தொகுதிகளில் தேர்தல் நடந்துள்ளது. அதில் கடந்த 2019ல் 13 தொகுதிகளை பிஜேபி வென்றது. இந்த தேர்தலில் 8 தொகுதிகளுக்கு குறையாமல் இந்தியா கூட்டணி கைப்பற்றும்.

2019ல் 13 தொகுதிகளை பிஜேபி வென்றது

மகாராஷ்ட்டிரா மாநிலத்தில் உத்தவ்தாக்கரே தலைமையில் உள்ள ஒரிஜினல் சிவசேனா, சரத்பவார் தலைமையில் உள்ள ஒரிஜினல் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி களத்தில் பலமாக இருந்தது. டூப்ளிகேட் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் போட்டியில் இருந்தாலும் கீழ்மட்ட தொண்டர்கள் ஒரிஜினல் கட்சிகளுடன் கைகோர்த்து கொண்டதால் பிஜேபி கூட்டணி இழப்பை சந்திக்கிறது. 6 தொகுதிகளில் பெரும்பான்மையான இடங்களில் இந்தியா கூட்டணிக்கு வாய்ப்புகள் அதிகம்.

பீகார் மாநிலத்தில் தேஜஸ்வி யாதவ் – காங்கிரஸ் கட்சி கூட்டணி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த மாநிலத்தில் நடந்த 6 தொகுதிகளில் 4 தொகுதிகளை இந்தியா கூட்டணி கைப்பற்றினால் ஆச்சரியம் இல்லை.

மேற்குவங்கம் – ஜார்க்கண்ட் மாநிலங்களிலும் பாஜகவிற்கு பலத்த இழப்பு ஏற்படலாம் என்று அங்கு உள்ள தேர்தல் வியூக வாதிகள் வெளிப்படுத்தி வருகின்றனர். அதேபோன்று ஒரிசா, ஜம்மு காஷ்மீரிலும் களச்சூழல் பிஜேபிக்கு எதிராகவே இருக்கிறது.

ஐந்தாவது கட்ட வாக்குப்பதிவு - பாஜக பெரும்பான்மையை இழந்தது - என்.கே.மூர்த்தி

கடந்த 2019ல் நடந்த தேர்தலில் 49 தொகுதிகளில் 39 இடங்களை பிஜேபி கூட்டணி கைப்பற்றியது. அதில் 32 தொகுதிகளில் பிஜேபி மட்டும் வெற்றிப் பெற்று இருந்தது. அந்த வெற்றி இந்த தேர்தலில் சாத்தியமில்லை. ஐந்தாவது கட்டத்தில் நடந்த வாக்குப்பதிவில் 49 இடங்களில் 25 க்கு குறைவில்லாமல் இந்திய கூட்டணி வெற்றிப் பெறும். இதுவரை நடந்துள்ள 428 தொகுதிகளில் 154 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. 250 தொகுதிகளுக்கு குறைவில்லாமல் இந்திய கூட்டணி வெற்றிப் பெற்றுவிடும் என்பது களநிலவரம்.

MUST READ