spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைகாவல்துறை கையில் முக்கிய சிசிடிவி ஆதாரங்கள்! பஸ்சுக்குள் நடந்தது என்ன? உமாபதி நேர்காணல்!

காவல்துறை கையில் முக்கிய சிசிடிவி ஆதாரங்கள்! பஸ்சுக்குள் நடந்தது என்ன? உமாபதி நேர்காணல்!

-

- Advertisement -

கரூர் சம்பவத்தில் சதி செய்ததாக தவெகவினர் குற்றம் சாட்டும் நிலையில், அதற்கு ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்திடம் வழங்கி இருக்கலாமே என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

we-r-hiring

கரூர் சம்பவம் தொடர்பாக விஜய் மற்றும் தவெகவினரின் செயல்பாடுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் உமாபதி பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- கரூர் கூட்டநெரிசல் மரணங்கள் தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோ காட்சிகள், பத்திரிகைகள் போன்றவற்றை நீதிபதிகள் பார்த்திருக்க கூடும். அப்படி பார்த்ததன் காரணமாகவே இந்த கால கட்டத்தில் இத்தகைய அக்கிரமம் நடைபெற்றுள்ளது என்று அதிர்ச்சி அடைந்திருப்பார்கள். இந்த இளைஞர்கள் சமூக வலைதளங்களில் அமைச்சர்கள், ஆட்சியர்கள், முதலமைச்சர் என்று அனைத்து தரப்பினரையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதனை கண்டு சராசரி மக்களே அதிர்ச்சி அடைகிறபோது, நீதிபதியும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருப்பார். இவர்களுடைய தலைவர் ஒரு பேட்டி அளிக்கிறார். அதில் இறந்தவர்களுக்கு இரங்கலையோ, அவர்களுடைய உறவினர்களுக்கு ஆறுதலையோ சொல்லாமல் அரசாங்கத்தின் மீது பாய்கிறார். முதலமைச்சரிடம் என் மீது கோபம் இருந்தால், என்னை பழிவாங்குங்கள் என்று சொல்கிறார். இதை பார்த்து நீதிமன்றம் மட்டும் அல்ல படித்தவர்கள், கல்வியாளர்கள், பொதுமக்கள் என அனைவருமே அதிர்ச்சியாகி உள்ளனர்.

விஜய் வாகனத்தில் செல்கிறபோது வாகனம் மோதி கீழே விழுகிறார்கள். நீங்கள் அவர்கள் மீது அன்பு வைத்திருந்தால் வாகனத்தை நிறுத்திவிட்டு சென்று தானே பார்த்திருக்க வேண்டும். விஜயகாந்த் தன் மீது இருக்கும் கிரேசை உடைத்து, மாஸை உருவாக்கினார். விஜயகாந்த் வேட்டியை மடித்துக்கட்டி கொண்டு கூட்டத்திற்குள் சென்று அடிப்பார். தொண்டர்கள் தன்னை நேசிக்கலாம், ஒரு தலைவராக ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் மடத்தனமான செயல்களில் ஈடுபடக்கூடாது என்று கூறினார். அவர் ஒரு அரசியல் தலைவராக, எதிர்க்கட்சித் தலைவராக வளரவில்லையா? விஜயகாந்த் ஒரு மனிதநேயராக, ரசிகர்களை நேசிக்கக்கூடிய தலைவராக இருந்தார். ஆனால் விஜய் கேரவனில் பத்திரமாக இருந்துகொண்டு அவரை நம்பி வந்தவர்களை அல்லவா சாக விடுகிறார். பிறகு கேள்வி கேட்காமல் என்ன செய்வார்கள்?  தவெக தரப்பில் ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்ட நிலையில், இதுவரை கொடுக்கவில்லை. அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட எல்லோரும் தலைமறைவாகி விட்டனர்.

புதுச்சேரியில் தவெக கூட்டணியா?? தலைவர் விஜய் முடிவே இறுதி - ஆனந்த்

தவெகவின் கொள்கை தலைவரான காமராஜரின் நினைவு தினத்திற்கு கூட அவர்கள் மரியாதை செலுத்தவில்லை. அப்போது புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட சிலர் தலைமறைவாகி விட்டால் கட்சியே இல்லை என்றுதானே அர்த்தம்.  விஜயும் வெளியே வர மாட்டார். தவெக மாவட்ட செயலாளரும் சிறையில் உள்ள நிலையில், கட்சியினர் யாரும் பாதிக்கப்பட்டவர்களை சென்று சந்திக்கவில்லை என்கிற போது நீதிபதி கேள்வி எழுப்பத்தான் செய்வார். புஸ்ஸி ஆனந்தின் முன் ஜாமின் மனு விசாரணையின் போது சம்பவத்திற்கு மாவட்ட செயலாளர்தான் காரணம் என்று சொல்கிறார். இதனிடைய கரூர் மாவட்ட செயலாளரின் மனைவி கத்தியை வைத்து குத்தினார்கள் என்று உண்மைக்கு புறம்பாக பேசி வருகிறார். அவர் மீதும் வழக்குப்பதிவு செய்ய வில்லை. இவர்கள் மீது அரசு ஏன் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவில்லை என்று தோன்றுகிறது. அவர்கள் தங்களில் வாயில் வந்த குற்றச்சாட்டை தான் முன் வைக்கிறார்கள். அவர்களிடம் ஆதரம் எதுவும் கிடையாது. அப்படி இருந்திருந்தால் கொடுத்திருப்பார்கள்.

யோகா,இயற்கை மருத்துவம் மருத்துவர்கள் நியமன காலியிடங்கள் அதிகரிப்பு அறிவிப்பு ரத்து – உயர்நீதி மன்றம் உத்தரவு

நீதிமன்றம் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ள நிலையிலும், தவெகவினர் சதி கோட்பாட்டையே பேசி வருகின்றனர். அப்போதுதான் அவர்கள் தப்பித்துக் கொள்ள முடியும். இதற்கு நீதிமன்றமும், மக்களும் சரியான பதிலை சொல்வார்கள். விஜயின் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்ய உத்தரவிட்டிருக்கும் நிலையில், அதற்கு ஆயுதபூஜை கொண்டாடி இருக்கிறார்கள். கொலை ஆயுதத்திற்கு ஆயுத பூஜை போட்டிருக்கிறார்கள். டயரை வைத்து ஏற்றாமலே 41 பேரை வாங்கிய சாத்தான் பேருந்து அது. இந்த விவகாரத்தில் சிறப்பு விசாரணைக்குழுவின் அறிக்கை கிடைத்த பின்னர் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. எனவே இதற்கு காலம்தான் பதில் சொல்லும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ