spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைபாண்டிச்சேரி சிஎம் விஜய்! ராகுல் பேசிய புது டீல்! ரகசியம் உடைக்கும் ரவீந்திரன் துரைசாமி!

பாண்டிச்சேரி சிஎம் விஜய்! ராகுல் பேசிய புது டீல்! ரகசியம் உடைக்கும் ரவீந்திரன் துரைசாமி!

-

- Advertisement -

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சொல்லிவிட்டு தான், ராகுல்காந்தி விஜயிடம் பேசியிருப்பார் என்றும், ஒருபோதும் திமுக கூட்டணியில் இருந்து விலகும் முடிவை அவர் எடுக்க மாட்டார் என்றும் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.

we-r-hiring

நடிகர் விஜயுடன், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேசியதன் பின்னணி குறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- காங்கிரஸ் தாலைவர் ராகுல்காந்தி, விஜயிடம் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளன. அதற்கு அதிகளவு வாய்ப்புகள் உள்ளன. விஜய்க்கு, கேரளாவில் பிரச்சார வலிமை உள்ளது. அதேபோல், கர்நாடகா, ஆந்திராவிலும் அவருக்கு பிரச்சார வலிமை உள்ளன. அப்படி பட்ட ஒருவர் என்.டி.ஏ கூட்டணிக்குள் சென்றுவிடக்கூடாது என்று விஜய் நினைக்கலாம். விஜய் விரும்பினால், புதுச்சேரி முதலமைச்சர் பதவியை கூட விட்டுக் கொடுக்கலாம். அதேபோல் விஜயை இந்தியா கூட்டணியில் சேர்ந்து, தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு வழங்கிடுமாறு கேட்கலாம். ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலினை விட்டுவிட்டு போக மாட்டார்.

மம்தா பானர்ஜி மோடியிடம் நெருக்கத்தை காட்டுகிற நிலையில், இந்தியா கூட்டணி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலினை நம்பி 40 சீட்டுகள் வெற்றிபெறக் கூடிய நிலையில், அவருடன்தான் ராகுல்காந்தி இருப்பார். ஸ்டாலின், இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு கூடுதலாக  விஜயை பயன்படுத்துவதற்கு புதுச்சேரி முதல்வர் பதவியை காங்கிரஸ் விட்டுத் தரலாம். அத்துடன் தமிழ்நாட்டில் சில தொகுதிகளையும் வாங்கிக் கொள்ளலாம். 2029ல் ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளர் என்று ஸ்டாலின் சொல்ல வேண்டும் என்பதுதான் அவர்களுடைய நோக்கமாக இருக்கும்.

திமுகவிடம் சொல்லிவிட்டு தான் ராகுல்காந்தி, விஜயிடம் பேசியிருப்பார். 2029ல் 40 சீட்டுகளையும் வெல்ல வேண்டும் என்பது தான் காங்கிரஸ் கட்சியின் நோக்கமாகும். எனவே இந்தியா கூட்டணியை பலப்படுத்துவதற்காகவே விஜயை, கூட்டணிக்கு அழைத்திருப்பார். அதை தவிர்த்து தற்கொலை முயற்சியாக திமுக கூட்டணியில் இருந்து ராகுல்காந்தி ஒருபோதும் விலகிட மாட்டார். திமுக கூட்டணி 45 சதவீதத்திற்கும் குறையாமல் வாக்குகளை பெறும். மீண்டும் சொல்கிறேன். ஸ்டாலினுக்கு எதிராக ஒரே அணியாக இணைந்து போட்டியிட்டால் தான் வெல்ல முடியும். எடப்பாடி பழனிசாமியை விஜய் ஆதரித்தாலும், ஒன்றும் பிக்அப் ஆகாது. இன்றைக்கு அதிமுகவும், அண்ணாமலை இல்லாத பாஜகவும் சேர்ந்தாலும் 25 சதவீதம் வாக்குகளை தாண்ட முடியாது. சாதி சார்பற்ற ஸ்டாலினை, இரண்டு சாதிகளின் ஆதிக்கத்தில் உள்ள எடப்பாடியால் ஒருபோதும் ஜெயிக்க முடியாது.

அதிமுக, பாஜகவினர் விஜயை முன்னிலைப்படுத்தி, அண்ணாமலையை காலி செய்ய பார்த்தனர். இதனை உணர்ந்துகொண்ட அண்ணாமலை, விஜயை தாக்கி பேச தொடங்கி விட்டார். சீமான் இன்றைக்கு விஜயை விமர்சித்து பேசுவதால் அவருக்கு பெரிய அளவில் லாபம் இருக்கிறது. மனவலிமை அற்ற விஜய், காங்கிரசுடன் சேர்ந்துவிட முடியாதா? இந்தியா – பாகிஸ்தான் பேரில் பாஜகவை எதிர்த்து கருத்து சொன்னால் நமக்கு பாதிப்பு வருமோ என்று கருத்து சொல்லாமல் இருந்தார் என்பது மக்களுக்கு தெரியும். விஜய் – சீமான் கம்பேரிஷனில் தான் சீமானுக்கு அதிக மக்கள் ஆதரவு கிடைக்கிறது. கமல்ஹாசன், எம்ஜிஆர் ஆட்சி கொண்டுவருவேன் என்கிற போது அதை சீமான் எதிர்த்ததால் தான் இன்றைக்கு 8 சதவீதம் வாக்குகள் கிடைத்திருக்கிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ