Homeசெய்திகள்கட்டுரைபொன்முடி பதவி பறிப்பு! துரைமுருகன் மன்னிப்பு கடிதம்!  என்ன நடக்கிறது திமுக-வில்!

பொன்முடி பதவி பறிப்பு! துரைமுருகன் மன்னிப்பு கடிதம்!  என்ன நடக்கிறது திமுக-வில்!

-

- Advertisement -

அமைச்சர் பொன்முடி தொடர்ச்சியாக பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி வந்ததால், அவரது கட்சி பொறுப்பை பறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மூத்த பத்திரிகையாளர் ஜென்ராம் தெரிவித்துள்ளார்.

genram
genram

அமைச்சர் பொன்முடி, திமுக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் ஜென்ராம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறி இருப்பதாவது:- வனத் துறை அமைச்சர் பொன்முடி விழா மேடையில் பேசியபோது, முன்னர் நடைபெற்றதாக ஒரு நிகழ்வை நினைவு கூர்ந்திருந்தார். அது சமுக வலைதளங்களில் வைரலாகிய நிலையில் திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து, பொன்முடி வகித்து வந்த துணை பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து அவர் அதிரடியாக நீக்கி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இருவரது நடவடிக்கைகளுமே மிகவும் சரியானவை தான். எப்போது சறுக்குவார்கள் என எதிர் அணியினர் காத்திருக்கக்கூடிய சூழலில், தவறாக பொருள்படும்படியாக பேசுவதையும் தவிர்ப்பது நல்லது என்று ஏற்கனவே முதலமைச்சர் அறிவுறுத்தியிருந்தார். அதை மூத்த அமைச்சராக உள்ளர்கள் அவர்களையும் கடைபிடித்து, மற்றவர்களுக்கும் சொல்ல வேண்டும்.

யுனைட்டரி ஸ்டேட், ஃபெடரல் ஸ்டேட் என்றால் என்ன? - அமைச்சர் பொன்முடி எடுத்த பாடம்

பொன்முடி படிதத் காலங்களில், அவர்கள் பார்த்த பழைய நிகழ்வுகள் அனைத்தும், அவர்களுக்கு சில சொற்களோடு தொடர்புடையதாக தான் இருக்கும். காலப்போக்கில் வளர்ச்சி, மனித உரிமைகள் சார்ந்து பல சொற்களை நாம் மாற்றி இருக்கிறோம். சொற்கள் மாற்றமாக இருக்கலாம், நிர்வாக முறையில் மாற்றம் இருக்கலாம். அதனை தங்களுக்கு தெரியவில்லை என்று சொல்ல முடியாது. கற்பழிப்பு என்கிற சொல்லை நாம் வல்லுறவு என்று சொல்கிறோம். பாலியல் தொழிலாளி என்று சொல்கிறார். அமைச்சர் பயன்படுத்திய சொல் கூட ரொம்ப பழைய சொல்தான். கட்சியின் பொதுச் செயலாளரே, திமுக தலைவர் முன்வைத்த சொற்களை பயன்படுத்தாமல் வேறு விதமான சொற்களை பயன்படுத்துகிறார். அதற்கு பிறகு வருத்தம் தெரிவிக்கிறார். இந்த போக்கு தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

போதை சாம்ரஜியத்தால் தமிழகம் சீரழிந்து வருகிறது - மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான்

நீங்கள் குறிப்புகளை எழுதிக்கொண்டு சென்று மேடைகளில் பேசுவது கூட நல்லதாகும். கூட்டம் வேறு எங்காவது இழுத்துக்கொண்டு போவதற்கு வாய்ப்பு இருந்தால், அந்த வேகத்திற்கு நானும் போய்விட மாட்டேன் என்கிற உறுதியோடு இருப்பவர்கள் மட்டும் ஒரு வருடத்திற்கு கூடடங்களில் போய் பேசினால் மட்டும் போதும். பேசி பிரச்சினைகளை இழுத்துக்கொண்டு வருபவர்களை விட அவர்கள் பேசாமல் இருப்பது நல்லது என்கிற நிலைக்குதான் கட்சிகள் வந்து சேரும். அப்படிதான் இந்த விஷயத்தையும் நாம் பார்க்க வேண்டியுள்ளது. எந்தெந்த இடங்களில் எல்லாம் பிரச்சினை வரும்  என்பதை பார்க்கலாம் அல்லவா. சாதிய வசைபாடல் அல்ல. சாதிய அடிப்படையில் பழைய மொழிகள் உள்ளன. அவற்றுக்கு எல்லாம் பின்னால் பொதுத்தன்மை கிடையாது. சில விஷயங்களுக்கு பின்னால் சாதியம் உள்ளது. அதுபோன்ற விஷயங்களை பகுத்தறிவு மூலம் அறிந்துகொண்டு அதை பேசாமல் இருப்பது நல்லது. அதற்கு பின்னர் பாலின ரீதியான பிரச்சினைகளில் சிக்கிக் கொள்கிறார்கள். இது போன்ற நிகழ்வுகள் வரும்போது நமக்குள் எச்சரிக்கை உணர்வு இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இன்னொருவருக்கு நடைபெறும் போதே மற்றவர்கள் அதில் இருந்து பாடம் கற்றுக்கொள்வது நல்லது. அனைத்துக் கட்சிகளில் உள்ள மூத்த தலைவர்கள் பழைய சொற்களை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

திமுக - அண்ணா அறிவாலயம்

பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் அரசாக திமுக அரசு திகழ்ந்து வருகிறது. அரசியல் ரீதியாக திமுக எதிர்க்கக்கூடியவர்கள் இதை வைத்து திமுக மீது தவறான எண்ணத்தை கட்டமைக்க முயற்சிப்பார்கள் தான். அதற்கு இடம் கொடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது திறமையாகும். ஏனென்றால் பெண்களுக்கு எதிராக வரலாற்று ரீதியாக நிகழ்த்தப்பட்ட தீங்குகளை சரி செய்யும் திட்டத்தை வைத்து செயல்படும் திமுகவினர்தான் இரு மடங்கு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். இதை ஒவ்வொருவரும் சுய பரிசோதனையாக பார்க்க வேண்டும். சிறு சொல் என்று நாம் நினைக்கலாம். ஆனால் அந்த சிறு சொல் கூட மிகவும் சென்சிட்டிவான விளைவுகளை கொடுக்கக்கூடிய இடத்தில் நாம் இருக்கிறோம். அரசியலில் கவனமாக இருக்க வேண்டியது நமது கடமையாகும். அப்படி பேச முடியாத ஆட்களை, கூட்டங்களில் பங்கேற்கவே வேண்டாம் என்று திமுக தடை விதித்து விடலாம்.

பொன்முடியை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கியதே அவர் மீதான மிகப்பெரிய நடவடிக்கை தான். அதனை அதிமுகவினரோ, பாஜகவினரோ ஒன்றுமில்லை என விமர்சிப்பது சரியானது அல்ல. பழைய அறிஞர்கள் அந்த காலத்தில் பேசிய பேச்சை அப்படியே தற்போது பயன்படுத்தக்கூடாது. கண்ணதாசனின் பாடல்களில் அதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளார். உருவக் கேலி செய்யக்கூடிய கவுண்டமணி காமெடிகள் நீண்ட காலமாக இருந்தன. அதை சுட்டிக்காட்டி பேசும்போது பிரச்சினைகள் ஏற்படலாம். அப்படி பழைய நிகழ்வு ஒன்றை சுட்டிக்காட்டி பேசும்போதுதான் பொன்முடி மாட்டியுள்ளார். ஏற்கனவே இதுபோன்ற பிரச்சினைகளில் மாட்டி இருக்கிறோம். முதலமைச்சர் வருத்தப்பட்டார் என்பதையும் மிக நன்றாக அறிந்த நபர்தான் அமைச்சர் பொன்முடி. அதனால் அவர் அதனை கோட் செய்யாமல் தவிர்த்து இருக்கலாம். என்ன பேசுவது என்று முடிவு செய்திருந்தால் இதனை தவிர்த்து இருக்கலாம்.

பொன்முடி மீதான நடவடிக்கைக்கு அரசியல் அழுத்தம் மட்டும் காரணம் இல்லை. அவர் தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார் என்தால் தான். அவரிடம் இருந்து தொடர்ந்து பிரச்சினைகள் வந்து கொண்டிருக்கிறது என்பதால்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் துணை பொதுச்செயலாளர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை கண்டு திமுகவில் உள்ளவர்கள் ஒவ்வொருக்கும் சிந்தனை ஏற்படும். இதனால் அவர்கள் சரியாக செயல்படுவார்கள் அல்லவா. திமுக போன்ற சமத்துவ, சமூகநீதி, சுரியமரியாதை போன்ற கோட்பாடுகளை கொண்ட கட்சிகளில், இதுபோன்ற தடித்த வார்த்தைகளை பயன்படுத்துவது இருக்கக்கூடாது. மற்ற கட்சிகளின் தலைவர்கள் இதுபோன்று தொடர்ச்சியாக அவதூறுகளை பேசி கொண்டிருந்தாலும் அவர்கள் மீது கட்சிகள் நடவடிக்கை எடுப்பது கிடையாது. ஆனால் திமுக, கம்யூனிஸ்ட், விசிக போன்ற கட்சிகளின் மீது இதுதான் நீங்கள் பேசும் கொள்கையா? என்று கேள்வி எழுப்புவார்கள். இதுதான் இந்த கட்சிகளில் உள்ளவர்களுக்கு கூடுதல் பொறுப்பு அவசியம் என்று சொல்கிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ