கரூர் கூட்டநெரிசல் தொடர்பாக அமைக்கப்பட்ட அருணா ஜெகதீசன் ஆணையத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்டதால், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களை தடுப்பது குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் போய்விட்டதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

கரூர் கூட்டநெரில் வழக்கின் தீர்ப்பு குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது :- கரூர் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கி இருப்பது இடைக்கால தீர்ப்பு அல்ல. பொதுவாக ஒரு தீர்ப்பை, இடைக்கால தீர்ப்பு என்று எப்படி தீர்மானிக்கலாம் என்றால்? நமது மனு தொடர்ந்து நீதிமன்றத்தில் இருக்க வேண்டும். மற்றொன்று உத்தரவின் சாராம்சம் சட்டத்தீர்வை நோக்கி சென்றுவிட்டால், அது இடைக்காலத் தீர்ப்பு கிடையாது. எனவே நீதிபதிகள் இதை இடைக்கால தீர்ப்பு என்று சொன்னாலும், அது இடைக்காலத் தீர்ப்பு கிடையாது. இந்த வழக்கில் கோரிக்கை என்பது ஒன்று சிபிஐ விசாரணை.மற்றொன்று ஓய்வுபெற்ற நீதிபதி கண்காணிப்பில் சிபிஐ விசாரணையாகும . இந்த இண்டுக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்பில் விடை அளிக்கப்பட்டு விட்டது.
ஏற்கனவே இருந்த எஸ்.ஐ.டி-ஐ சஸ்பெண்ட் செய்துவிட்டனர். ஒரு நபர் ஆணையத்தை ரத்து செய்துவிட்டார்கள். இதற்கு மேல் அந்த மனுவில் நிறைவேற்றுவதற்கு எந்த கோரிக்கையும் இல்லை. எனவே அந்த மனு முடிந்துவிட்டது. சிவில் அல்லது கிரிமினல் வழக்குகளில் ஒரு தரப்புக்கு பாதிப்பு ஏற்படும் என்று நீதிமன்றம் நம்பினால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும். ஆனால் கரூர் கூட்டநெரிசல் வழக்கில் ஒரு தரப்புக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்பட்டுவிட்டது. தமிழ்நாடு அரசு அமைத்த எஸ்.ஐ.டி, ஒரு நபர் ஆணையம் ரத்தாகிவிட்டது. எனவே உச்சநீதிமன்றம் வழங்கியது இடைக்காலத் தீர்ப்பு அல்ல. இறுதித் தீர்ப்பு.
கரூர் விவகாரத்தில் எஸ்.ஐ.டி வழக்கை விசாரித்து, ஆதாரங்களை உயர் நீதிமன்றத்திடம் வழங்கும். அதேபோல் சிபிஐ விசாரிக்கும் வழக்குகளை சிபிஐ நீதிமன்றத்திடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் கரூர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அமைத்துள்ள கமிட்டியிடம் எதற்காக விசாரணை விவரங்களை வழங்க வேண்டும். கமிட்டியில் இருப்பவர் ஓய்வுபெற்ற நீதிபதி. அவருக்கு எந்த வித அதிகாரங்களும் கிடையாது. 2 சிட்டி ஐபிஎஸ் அதிகாரிகள் சேர்க்கும்போது, இதில் அவர்கள் என்ன முடிவை எடுக்க முடியும். சாட்சிகளை சரிபார்க்கவோ, மீண்டும் விசாரிக்கவோ அவர்களால் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது.
அப்போது புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு நடுவில் எதற்கு ஒரு கண்காணிப்பு குழு. உச்ச நீதிமன்றமே கண்காணிக்கலாமே. ஏனென்றால் உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. ஆனால் கமிட்டிக்கு என்ன அதிகாரம் உள்ளது. மூன்றாவது தமிழ்நாட்டை சேராத ஐ.பி.எஸ் அதிகாரிகளை குழுவில் சேர்க்கக்கூடாது என்கிறார்கள். இடஒதுக்கீடு தொடர்பான வழக்கின் விசாரணையில் பிராமண சமுதாயத்தை சேர்ந்த நீதிபதி விசாரிக்கக் கூடாது என்று சொல்லலாமா?
கரூர் விவகாரத்தில் உண்மை கண்டறியதாத்தான் முடியும். விஜய் கரூருக்கு 12 மணிக்கு வருவதாக சமூக வலைதளங்களில் அறிவித்தார். அவர் தாமதமாக வந்தார் என்று முதலமைச்சர் சொல்கிறார். ஆனால் தொலைக்காட்சிகளில் விஜய் அங்கே வருகிறார் இங்கே வருகிறார் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். செல்போனில் இவற்றை பார்த்த மக்கள் ஏன் கலைந்து செல்லவில்லை. எனவே இந்த விவகாரத்தில் உண்மை கண்டறியலாம். அல்லது எதிர்காலத்தில் இதுபோன்று நடைபெறாமல் இருக்க வழிமுறைகள் உருவாக்கலாம்.
ஆனால் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் அருணா ஜெகதீசனின் ஆணையத்தையும் ரத்து செய்துவிட்டார்கள். தற்போது உண்மை கண்டறிதலும் கிடையாது. இனி கூட்ட நெரிசலை தடுப்பது எப்படி என்றும் கூற முடியாது. அப்போது உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு என்ன? என்று எனக்கு புரியவில்லை. நியாயமாக இது தான் நடந்திருக்க வேண்டும். ஆனால் நடக்கவில்லை. அப்போது, முதலமைச்சர் சொல்வது சரிதான் என்று நான் நினைத்தேன். இனி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து, உச்சநீதிமன்றத்தின் மனசாட்சியை உலுப்புகிற வகையில் பல கேள்விகளை எழுப்ப வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
கரூர் சம்பவத்தில் 41 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். தவெக தொண்டர்கள் ஏராளமான தனியார் சொத்துக்களை உடைத்து சேதப்படுத்தி இருக்கிறார்கள். அதற்கெல்லாம் எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. இதற்கு விஜய் தான் பொறுப்பேற்க வேண்டும். அவர்தான் நிவாரணம் வழங்க வேண்டும். ஆனால் கொடுப்பார்களா? உண்மை கண்டறியும் குழுவை அமைக்கிறபோது அதை கண்டறியலாம். தற்போது எந்த பொறுப்புணர்வும் கிடையாது. அதனை உச்சநீதிமன்றம் முழுமையாக துடைத்து எரிந்துவிட்டது.
கிரிமினல் குற்ற விசாரணை நடைபெறும். அதற்கும் நாம் தான் செலவு செய்ய வேண்டும். இதன் மூலம் ஓய்வுபெற்ற நீதிபதிக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. அதைவிட இதில் வேறு என்ன லாபம் உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் யாருக்கும் நன்மை கிடையாது. அடிப்படையில் இந்த வழக்கில் சரியான முறையில் வாதங்கள் வைக்கப்படவில்லை என்று நினைத்தேன்.
உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் வழக்கமாக பிரதே பரிசோதனை 2 மணி நேரம் நடைபெறும். 40 உடல்கள் என்கிறபோது 80 மணி நேரமாகும். 18 மணிநேரத்தில் பிரேத பரிசாதனை முடிந்துள்ளது என்றால் எத்தனை டேபிள்கள் போட்டு மருத்துவர்கள் பிரேத பரிசோதனை மேற்கொண்டார்கள் என்கிற விவரத்தை கேட்க வேண்டும். எப்போது ஒரு அசம்பாவிதம் நடைபெறுகிறபோது உடல்களை விரைந்து பிரேத பரிசோதனை செய்து இறுதிச்சடங்கை நடத்த காவல்துறை முயற்சிப்பார்கள். இதன் மூலம் கலவரம் ஏற்படாமல் தடுப்பார்கள்.
உண்மையில் சந்தேகம் இருந்தால் உடல்களை வாங்க மாட்டோம் என்று சொல்லி இருக்க வேண்டும். பிரே பரிசோதனையில் சந்தேகம் எழுப்பினால், அதனை வெள்ளிக்கிழமையே நீதிமன்றத்தில் உடைத்திருக்க வேண்டும். நம்மிடம் அதற்கான ஆதாரங்கள் அனைத்தும் இருக்கின்றன. எனவே இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதில் பல கேள்விகள் இருக்கின்றன. தீர்ப்புக்கு முன்பு நடந்த வாதங்களிலும் உள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.