spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைவிஜய் தேர்தலில் நிற்க மாட்டார்! பனையூரில் நடந்த டீலிங்! உமாபதி நேர்காணல்!

விஜய் தேர்தலில் நிற்க மாட்டார்! பனையூரில் நடந்த டீலிங்! உமாபதி நேர்காணல்!

-

- Advertisement -

2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் போட்டியிட மாட்டார். அவருடைய கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெல்லும் பட்சத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்க திட்டமிட்டிருக்கிறார் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.

we-r-hiring

விஜய் கட்சிக்கான வாக்கு சதவீதம் குறித்த கருத்துக்கணிப்புகள் குறித்தும், தவெகவிற்குள் நடைபெறும் களேபரங்கள் குறித்தும் மூத்த பத்திரிகையாளர் உமாபதி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- த.வெ.க தலைவர் விஜய்க்கு 23 சதவீதம் வாக்குகள் இருப்பதாகவும், கரூர் சம்பவத்திற்கு பிறகும் அவருடைய வாக்கு சதவீதம் குறையவில்லை என்றும் கருத்துக்கணிப்பில் சொல்கிறார்கள். இவர்கள் எங்கே சென்று சர்வே நடத்தினார்கள்? யாரிடம் சர்வே நடத்தினார்கள் என்கிற விவரங்கள் எல்லாம் இருக்காது.

சர்வே என்று வரும்போது இன்னும் எத்தனை பேர் கூட்டநெரிசலில் இறந்தாலும் அவருடைய ரசிகர்கள் விஜய்க்கு தான் வாக்களிப்பார்கள். அவர்கள் 4 முதல் 7 சதவீதம் பேர் உள்ளனர். களத்திற்கு சென்றவர்கள் இதனை தான் சொல்கிறார்கள்.  வாக்கு சதவீதம் சில இடங்களில் கூடுதலாக இருக்கும். சில இடங்களில் குறைவாக இருக்கும். ஆனால் விஜய் குறித்து வரும் வாக்கு வங்கி நிலவரங்கள் அனைத்தும் போலியானவை தான். அவருக்கு அதிகபட்சமாக 7 சதவீதம் வாக்குகள் இருக்கலாம். அல்லது 10 சதவீதம் வாக்குகள் வரை இருக்கலாம். அப்படி 10 சதவீதம் இருந்தாலும் அவரால் வெற்றி பெற முடியாது.

நீங்கெல்லாம் CM ஆனா மக்களுக்கு ஒன்னும் பண்ண மாட்டீங்க.... விஜயை விமர்சித்த பிக் பாஸ் பிரபலம்!

விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டார். அதற்கு 99 சதவீதம் வாய்ப்புகள் கிடையாது. காரணம் அவர் எங்கே போட்டியிடலாம் சர்வே நடத்தினால், அது கொங்கு மண்டலம் என்றுதான் வரும். அப்படி இருந்தாலும் விஜய் வெற்றி பெறுவது கடினம் தான். புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண் ஐ.ஆர்.எஸ் போன்றவர்கள் தேர்தலில் போட்டியிடுவார்கள். வெற்றி பெற்றால், விஜய் முதலமைச்சர் ஆகி விடுவார். ஜெயலலிதா ஸ்டலை பாலோ செய்வதற்கு தான் விஜய் பிளான் பண்ணுகிறார். ஆனால் அதற்குள்ளாக அவரை தூக்கி போட்டுவிடுவார்கள்.

விஜய் வந்தால் சிறுபான்மை மக்கள் எல்லாம் அவர் பின்னால் போய்விடுவார்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால் இருப்பதிலேயே அரசியல் தெளிவு பெற்றவர்கள் அவர்கள் தான். புஸ்ஸி ஆனந்துக்கு கரூர் மரணங்கள், போலீசார் தேடுவது எல்லாம் பிரச்சினை அல்ல. அவருக்கு பிரச்சினையே ஆதவ் அர்ஜுனாவை எப்படி காலி செய்வது என்பது தான். அதே நேரத்தில் ஆதவ் அர்ஜுனாவுக்கு, எப்படியாவது புஸ்ஸீ ஆனந்தை போலீசில் மாட்டிவிடுவது என்பதுதான். அவரை காலி செய்துவிட்டால், நாம் 2வது இடத்திற்கு வந்துவிடலாம் என்று நினைக்கிறார்.

அடுத்தபடியாக தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி இருக்கிறார். அவர் இவர்கள் இருவரும் பேசுவதை போன் ரெக்கார்டு ஆக போட்டு விடுகிறார். இவர்கள் மூன்று பேரும் போடுகிற சண்டையில் விஜயை போட்டு மிதித்து விடுவார்கள்.  2026 தேர்தலுடன் விஜய்க்கு முடிந்துவிடும். விஜய் ஒரு பிடிவாத குணமுடையவர். அவருக்கு தான் செய்வது தான் சரி. இன்னும் எத்தனை பேர் இறந்தாலும் நாம் தேர்தலில் நிற்கிறோம். 2026ல் முதல்வர் ஆகிறோம் என்று விஜய் நினைக்கிறார். புஸ்ஸி ஆனந்த் 2026 தேர்தலில் தான் யார் என்று காட்டுவார். அவரிடம் உழைப்பு இருக்கிறது.

கரூர் சம்பவத்தின்போது புஸ்ஸி ஆனந்தை பேருந்தில் இருந்து பாதி வழியில் விஜய் இறக்கிவிட்டார். காவல்துறையினர் புஸ்ஸியை பிடித்தால், தன்னையும் கைது செய்துவிடுவார்கள் என்பதால் அப்படி செய்தார். ஆனால் அரசியலில் வேறு வழியில்லை. எனவே மீண்டும் அவர் விஜயிடம் வந்துவிட்டார். விஜயுடன் அவருடைய பெற்றோர் பேசுவது கிடையாது. அவர் பெற்றோரை மதிப்பது இல்லை என்று ஊடகங்களில் செய்தி வெளியான உடன், மாநாட்டிற்கு பெற்றோரை அழைத்து வந்தார். அது எல்லாம் ஒப்புக்காக  தான். 2026ல் இவை எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு இருக்கிறது.

விஜய், அதிமுக – பாஜக உடன் கூட்டணிக்கு ஒருபோதும் செல்ல மாட்டார். காரணம் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆவதற்காகவா விஜய் கட்சி நடத்துகிறாரா? இல்லா விட்டால் விஜயை முதலமைச்சர் ஆக்க எடப்பாடி பழனிசாமி கட்சியை நடத்துகிறாரா? பாஜக, விஜயை மிரட்டி கூட்டி வந்தாலும் ஒன்றும் நடக்காது. கரூர் சம்பவத்தில் விஜய் மாட்டிவிட்டார் என்று நினைக்க வேண்டாம். அடுத்த வாரம் எதுவே நடக்காதது போல வருவார்கள் பாருங்கள். மற்றொரு ஊரில் கூட்டத்தை போடுகிறேன் என்பார்.

கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.20 லட்சம் தருகிறேன் என்று விஜய் எப்போது சொன்னார்?. அவர் அறிக்கையாகவோ, வீடியோ  மூலமாகவோ சொன்னாரா? அப்படி தகவல் பரப்பப்பட்டது. அவ்வளவுதான். பணத்திற்காகவா விஜய் மீது அன்பு வைத்தீர்களா? என்று கேட்டால் அவர்கள் அப்படி எல்லாம் இல்லை. விஜயை ஒரு முறை பார்த்தால் போதும் என்று சொல்வார்கள். மாதம் ரூ.5000 தருகிறோம் என்று சில மாதங்கள் வருவார்கள். தேர்தல் முடிந்த உடன் மாயமாகி விடுவார்கள். கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு அடுத்த சுற்று வருவார்கள். தேர்தலுக்கு முன்னதாக இன்னொரு சுற்றுப்பயணம் கட்டாயம் வருவார்கள். கரூர் துயர சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பங்களை முதலில் சந்திப்பார்கள் அதற்கு பிறகு சுற்றுபயணத்தை தொடருவார்கள்.

 

MUST READ