spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைசாதித்து காட்டிய ராகுல்! கவிழும் பாஜக ஆட்சி!

சாதித்து காட்டிய ராகுல்! கவிழும் பாஜக ஆட்சி!

-

- Advertisement -

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையான போராட்டம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பின் காரணமாக, பீகாரில் பாஜக – தேர்தல் ஆணையம் நடத்த இருந்த வாக்கு திருட்டு முயற்சி முறியடிக்கப்பட்டு உள்ளது என்று வழக்கறிஞர் சரவணன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு குறித்து திமுக செய்தி தொடர்பு இணைச்செயலாளர் வழக்கறிஞர் சரவணன் பிரபல யூடியுப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- பீகாரில் மிகப்பெரிய வாக்கு திருட்டை நடத்த பாஜகவும், தேர்தல் ஆணையமும் மிகப்பெரிய முயற்சி எடுத்தனர். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையான போராட்டம், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் காரணமாக, அந்த திருட்டு முயற்சி முறியடிக்கப்பட்டு உள்ளது. 65 லட்சம் வாக்காளர்களை நீக்கியுள்ளனர். அத்துடன் Not Recommended என்கிற  பெயரில்  ஒரு கோடி வாக்காளர்களுக்கு மேல் குறிப்பிட்டுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் நோக்கம் என்பது பாஜகவுக்கு ஆதரவாக சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்குகளை நீக்கிவிட வேண்டும் என்பதுதான்.

இதன் மூலம் தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்ற அடிப்படையில்தான் வாக்கு திருட்டு நடைபெற்றது. பீகார் தேர்தல் ஏன் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் என்றால்?  மோடி பிரதமராக தொடர்வாரா? இல்லையா? என்பதை தீர்மானிக்கும் தேர்தல் இதுவாகும். நிதிஷ்குமாரின் 22 எம்.பிக்களின் ஆதரவு இருப்பதால்தான், மோடி பிரதமராக தொடர்ந்துகொண்டிருக்கிறார். அதனால் நிதிஷ்குமாரை எப்படியாவது வெற்றிபெற வைத்து மீண்டும் முதலமைச்சர் ஆக்கிவிட வேண்டும் என்று நோக்கத்தில் இந்த செயல்பாடுகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டிற்கு தேர்தல் ஆணையம் விளக்கம்…

பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட விவகாரத்தில் உச்சநீதிமன்றம், ஒரு  சிறப்பான தீர்ப்பினை வழங்கியுள்ளது. நீக்கப்பட்டவர்களின் விவரங்களை வழங்கிட முடியாது என்று ஆணவத்துடன் தேர்தல் ஆணையம் கூறிவந்தது. உச்சநீதிமன்றம் அவர்களுக்கு ஒரு சம்மட்டி அடி கொடுத்துள்ளது. நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய ஆணையிட்டுள்ளனர். நீக்கப்பட்டவர்கள் மீண்டும் பெயரை சேர்க்க ஆதாரை ஒரு ஆவணமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. என்ன காரணத்திற்காக அவர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர் என்பதை தெரிவிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு தேர்தல் ஆணையம், பாஜக எதிர்பார்த்திராத பேரிடியாகும். 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை அச்சிட்டு தாளில் வழங்க தேர்தல் ஆணையம் முயன்றது. உச்சநீதிமன்றம் அதற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது. இதில் பெரிய கொடுமை என்ன என்றால்? ஆதாரை அடையாள ஆவணமாக ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்கிறார்கள். 2024ல் இவர்கள் எல்லாம் வாக்களித்து தேர்வாகிய எம்.பிக்களின் ஆதரவில் தானே மத்தியில் மோடி ஆட்சி செய்கிறார். அவர்களை வேண்டாம் என்று சொல்வாரா? எஸ்.ஐ.ஆர் முறையில் பீகாரில் ஒரு வாக்காளர் கூட சேர்க்கப்படவில்லை. இதை எல்லாம் பார்த்தபிறகு அதிர்ந்துபோன உச்சநீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது.

தேர்தல் ஆணையம் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் - என்.கே.மூர்த்தி

உச்சநீதிமன்றம் என்பது தன்னிச்சையாக செயல்பட முடியாது. மக்களின் எண்ண ஓட்டங்களின் பிரதிபலிப்பாக தான் உச்சநீதிமன்றத்தில் பல விஷயங்கள் நடந்துகொண்டு இருக்கிறது. வாக்காளர் பட்டியல் மோசடிக்கு எதிரான போராட்டங்களுக்கு பின்னர் காங்கிரஸ் கட்சியின் இன்ஸ்டாகிராம் பாலோயர்களின் எண்ணிக்கை 8.6 மில்லியனை தாண்டி விட்டது. ராகுல்காந்தியின் வீடியோக்கள் பல கோடி முறை பார்க்கப்படுகிறது. அப்போது இதுஒரு செய்தியை கொண்டுசெல்கிறது. தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை போய்விட்டது.

தேர்தல் ஆணையர்கள், தேர்தல் திருட்டை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். மின்னணு தரவுகளை வழங்கிட வேண்டும் என்றுதான் கேட்கிறோம். தேர்தல் ஆணையர்களாக உள்ள 3 பேர், பாஜகவோடு கள்ள உறவு வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த இந்தியாவின் ஜனநாயகத்தையே குழி தோண்டி புதைக்கிறார்கள். இப்படிபட்ட மோசமான தேர்தல் ஆணையர்களை இந்தியா சந்தித்ததே கிடையாது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ