2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாமகவின் கோரிக்கைகளை அதிமுக ஏற்கவில்லை என்றும், அதன் காரணமாக பாஜகவுடன் ராமதாஸ் கூட்டணி அமைத்தார் என்றும் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.

மருத்துவர் ராமதாஸ், அவரது மகனும், பாமக தலைவருமான அன்புமணி இடையே ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பில் வெட்டு ஒன்று, துண்டு ரெண்டு என்று பேசிவிட்டார். வன்னியர் மக்களுக்கு தன் தரப்பு நியாயங்களை தெரிவித்து உள்ளார். தனது பெயரை கெடுக்கும் வகையில் அன்புமணி சிலவற்றை செய்கிறார். அது தவறு. அன்புமணி இப்படிபட்டவர்தான் என்று உடைத்து எரிந்துள்ளார். அன்புமணி, பொய் சொல்லக்கூடியவர். அவரிடம் தலைமைப் பண்பு இல்லை என்று ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அன்புமணி தான் பெரிய புத்திசாலி என்று நினைத்துக் கொண்டு ராமதாசின் பிம்பத்தை உடைக்கிற விதமாகவும், தனக்கு ஒரு சிம்பதியை ஏற்படுத்துகிற விதமாகவும் செய்யக்கூடிய பிளேவுக்கு, ராமதாஸ் வெளிப்படையாக பதிலடி கொடுத்து விட்டார். இந்த பதிலடி என்பது அன்புமணிக்கு துணையாக தான் முகுந்தன் என்று சொல்லிக்கொண்டு வந்த ராமதாஸ்க்கு, அன்புமணி மீது உச்சக்கட்ட கோபம் வந்து விட்டது. அம்மாவை பாட்டிலை கொண்டு வீசினார். தமிழ்க்குமரன் பொறுப்பேற்க வந்தபோது தடுத்தது. எல்லவாற்றையும் விட குருவை அவமானப் படுத்தியது தான் அன்புமணி மீதான மிகப்பெரிய தாக்குதலாகும். குருவை அன்புமணி அவமதிப்பு செய்து விட்டார் என்பது, அவரது எதிர்கால அரசியலுக்கே பாதிப்பை ஏற்படுத்தும்.
மருத்துவர் ராமதாசின் செய்தியாளர் சந்திப்பு மூலம் தந்தை, மகன் இடையிலான சண்டை உச்சத்திற்கு வந்துவிட்டது என்பதை விட இதற்கு மேல் அன்புமணிக்கு இடம் கொடுக்க முடியாது. உங்களின் எதிர்காலத்திற்காக செயல் தலைவர் பொறுப்பை எடுத்துக்கொண்டு இருப்பதாக இருந்தால் இரு. இல்லா விட்டால் தன்னால் முடிந்த அளவுக்கு உருவாக்கி இன்னொருவரிடம் கொடுக்க முடியும் என்று ராமதாஸ் சொல்கிறார். நானா கட்சியை உடைத்தேன்? என்று ராமதாஸ் கேட்கிறார். தொண்டர்களும், வாக்காளர்களும் ராமதாஸ் உடன் இருக்கிறார்கள். அவர்தான் அடையாளம்.
இன்றைக்கு ராமதாஸ் ஒரு அரசியல் சக்தியாக இருக்கவும் தான், வன்னியர் சமுதாயம் அரசியல் அரங்கத்திற்குள் இந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது. அன்புமணியுடன் ஒப்பிடுகிற போது வன்னியர்கள் மத்தியில் ராமதாசின் இடம் என்பது மிகவும் உயரமானதாகும். ஆனால், கட்சிக்குள் நிர்வாகிகள் 90 சதவீதம் பேர் அன்புமணியை நம்பி தான் உள்ளனர். நாளைய அரசியல் என்பது அன்புமணிதான். கூட்டணி, வேட்பாளர்களை அன்புமணி தான் முடிவு செய்வார் என்று நினைப்பவர்கள் தான் அன்புமணியுடன் உள்ளனர்.
பழ கருப்பையாவின் கடிதத்தை படித்த மருத்துவர் ராமதாஸ், தந்தையிடம் கீழே செல்வது என்பது தோற்பது கிடையாது என்று சொன்னார். மருத்துவர் ராமதாஸ், கட்சி பதவி இல்லாமலேயே அனைவரையும் வழிநடத்தியவர். எம்.பி., எம்.எம்.ஏ, அமைச்சர் ஆகாமலே அதிகாரம் செலுத்தியவர். தான் அதிகாரம் மிக்கவனாக தொடர்வதை ஏற்றுக்கொண்டு உள்ளே வர வேண்டும். அல்லது பாதிப்புகள் மிக மோசமாக இருக்கும் என்றுதான் அவர் அன்புமணிக்கு சொல்கிறார். இந்த விவகாரத்தில் அன்புமணி தான் இறங்கி வர வேண்டும். அவருடைய எதிர்காலமும் இதில் தான் இருக்கிறது. சித்திரை முழு நிலவு மாநாட்டில் ராமதாசை முன்னிலைப்படுத்தி பேசக் கூடியவர்கள் தடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. எந்த மாநாடாக இருந்தாலும் ராமதாசை முதன்மைப்படுத்திதான், அவரது தியாகங்களை முதன்மை படுத்திதான் பேசப்படும். ஆனால் இந்த மாநாட்டில் அவரை முழுமையான அளவில் வெளிப்படுத்த வில்லை என்று ராமதாஸ் எண்ணுகிறார்.
குடும்பத்தினர் கொடுத்த அழுத்தம் காரணமாக தான் அன்புமணியை மத்திய அமைச்சர் ஆக்கியதாக ராமதாஸ் சொல்கிறார். அப்படி வாரிசுகளை கொண்டு வராமல் இருந்திருந்தால் அவரது வளர்ச்சியும் பெரிய அளவுக்கு இருந்திருக்கும். ஆனால் அன்புமணியின் வருகை காரணமாக தான் 2016 தேர்தலில் அந்த கட்சியும் நின்றது. தமாகா, மதிமுக, தேமுதிக போன்ற கட்சிகளை ஒப்பிடுகிற போது, பாமக அதே வலிமையோடுதான் இருக்கிறது. அதற்கு காரணம் அன்புமணியை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தியதுதான். நிர்பந்தம் காரணமாக அன்புமணியை அரசியலுக்கு கொண்டு வந்திருந்தாலும் 2016ல் கட்சி மீட்சி பெறுவதற்கு அது உதவியது.
சவுமியா அன்புமணியை அரசியலுக்கு கொண்டுவந்ததில் மருத்துவர் ராமதாசுக்கு விருப்பம் இல்லை. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாமக எதிர்பார்த்த இடங்களை அதிமுக கொடுக்கவில்லை. அதன் காரணமாக தான் பாமக பாஜக கூட்டணிக்கு சென்றது. அதனால் ராமதாஸ், அன்புமணி கட்டாயத்தால் பாஜகவுடன் கூட்டணிக்கு சென்றது என்று சொல்வது, அவரது மனசாட்சிக்கே தெரியும். பிறகு ஏன் மகிழ்ச்சியுடன் அவர் பிரதமர் மோடியை சந்தித்தார்?. தருமபுரியில் அதிமுக முன்னாள் அமைச்சர் அன்பழகன் செயல்பாடு மற்றும், 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு காரணமாகதான் சவுமியா, ஒரு சதவீத வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
மருத்துவர் ராமதாசின் இந்த முடிவுகளுக்கு காரணம், விக்கிரவாண்டி தேர்தல் முடிவுகள் தான் ஆகும். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களத்தை அதிமுக புறக்கணித்தது. அந்த தேர்தலில் 23 சதவீத அதிமுகவின் வாக்குகள், திமுகவுக்கு சென்றது. இது சாத்தியமற்ற ஒரு விஷயமாகும். இடைத்தேர்தலில் அதிமுக – பாஜக சேர்ந்து 2 தேர்தலில் தான் முன்னிலை காட்டியது. அதிமுக வாக்குகளை, பாமகவுக்கு மாற்றுகிற சக்தி எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை என்பதை விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ராமதாஸ் உணர்ந்து கொண்டார். அதை வெளிப்படையாக சொல்வதற்கு அவர் தயாராக இல்லை. பல முனை போட்டியை விரும்பிதான், தனித்து நின்றே ஜெயித்தோம். கூட்டணியால் என்ன சாதித்தோம்? என்ற கருத்தை ராமதாஸ் சொல்கிறார்.
பாமக என்கிற கட்சியை தான் பார்த்துக்கொள்கிறேன். அன்புமணி மக்களை சென்று சந்திக்கட்டும் என்று மருத்துவர் ராமதாஸ் சொல்கிறார். நாளை கூட்டணி பேரம் படியா விட்டாலும், அன்புமணியை முதலமைச்சர் வேட்பாளர் என்று தனித்து நிற்போம் என்கிற முடிவை அவர் எடுப்பார். என்ன சிக்கல்கள் இருந்தாலும், ராமதாசின் அனைத்து அரசியல் காய் நகர்த்தல்களும் அன்புமணியின் நலனுக்காக தான். அதை அவர் புரிந்துகொள்ள வில்லை. எடப்பாடி 2024 தேர்தலில் பாமகவுக்கு சரியான வாய்ப்பை வழங்கவில்லை. தற்போதும் எடப்பாடி அதே 23 இடங்களை தான் தருவார். நான் சொல்வது சரி என்பது மருத்துவர் அய்யாவுக்கு தெரியும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.