spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைமுதலமைச்சர் மீதான ராமதாஸ் குற்றச்சாட்டு... EDஆல் வெளிச்சத்திற்கு வந்த உண்மை!

முதலமைச்சர் மீதான ராமதாஸ் குற்றச்சாட்டு… EDஆல் வெளிச்சத்திற்கு வந்த உண்மை!

-

- Advertisement -

அதானி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு தொடர்பான பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டு, அவரது பாஜக மீதான விசுவாசத்தின் வெளிப்பாடே தவிர உண்மை ஒன்றும் இல்லை என்பது அவரது அறிக்கை மற்றும் அண்மை கால செயல்பாடுகள் மூலம் உறுதியாகிறது.

we-r-hiring

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவதூறாக பேசி விட்டார் என்றும், அதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி, பாஜக நிர்வாகிகள் அண்ணாமலை, தமிழிசை போன்றவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் முதலமைச்சர் அளித்த பேட்டியில் இந்த விவகாரம் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்து விட்டதாகவும், அதனால் இதில் டிவிஸ்ட் செய்ய வேண்டாம் என கூறியிருந்தார். மருத்துவர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ஆகியோர் வெளியிடும் அறிக்கைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளிக்கும்போது, மிகுந்த மரியாதையுடனே மருத்துவர் ஐயா என்றே பதில் அளிப்பது வழக்கமாக கொண்டுள்ளார்.

ஆனால் மூத்த அரசியல்வாதியான மருத்துவர் ராமதாஸ், முதலமைச்சர் குறித்து அவதுறான வார்த்தைகளை பிரயோகித்துள்ளார். அண்மையில் 10.5 சதவீத உள்ஒதுக்கீடு தொடர்பாக பேசிய ராமதாஸ், “10.5 இடஒதுக்கீடு விவகாரத்தில் உங்கள் அப்பன் வீட்டு சொத்தையா கேட்கிறோம். எங்கள் நாடு, எங்கள் பூமி, எங்கள் மண், உனக்கு இங்கு என்ன வேலை. உன் கிட்டபோய் நான் 10.5 கேட்கனுமா? எனக்கு அவமானமாக உள்ளது. உன்னை போய் கோட்டையில் நான் சந்திக்கனுமா? எனக்கு அவமானமாக உள்ளது”, என கூறினார். மேலும் முதலமைச்சர் குறித்து சாதியக் கண்ணோட்டத்துடன் ராமதாஸ் பேசினார். ஆனால் முதலமைச்சர் குறித்த அவரது கருத்துக்கு அன்புமணியோ, தமிழிசையோ ராமதாசை கேள்வி கேட்வில்லை. எனவே ராமதாசுக்கு அவரது பாணியில் முதலமைச்சர் பதில் அளித்துள்ளார்.

அமெரிக்க நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில் அதானி மொத்தம் ரூ. 2,029 கோடி லஞ்சம் வழங்கியுள்ளதாகவும், இதில் ஆந்திராவுக்கு மட்டும் ரூ. 1,750 கோடி வழங்கப்பட்டதாகவம், இதேபோல் தமிழ்நாடு, ஒடிசா, சத்திஸ்கர், காஷ்மீர் ஆகிய மாநிலங்களுக்கு வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அதிகாரிகள் குறித்த தகவல் இல்லை. மத்திய அரசின் சூரிய ஒளி மின்உற்பத்தி கழகத்தில் கடந்த 2021 செம்படம்பர் 16ஆம் தேதி 1000 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் அதானி நிறுவனத்துடன் ஒப்பந்த செய்துள்ளதாகவும், 2024ஆம் தேதி ஜுலை மாதம் முதலமைச்சரை, அதானி சந்தித்து பேசியதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் 3 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட ஒரு ஒப்பந்தத்திற்கு தற்போது தான் இருவரும் டீல் பேசுவார்களா? என கேள்வி எழுகிறது. முதலமைச்சரை அதானி சந்திருக்கலாம் என்று தான் சில செய்தி நிறுவனங்களில் தகவல் வெளியானது. ஆனால் இருவரது சந்திப்பு குறித்து உறுதியான செய்தி எதுவும் வெளியாக வில்லை. மேலும், அதானி அன்றிரவே புறப்பட்டு சென்றுவிட்டார் என்றும் தெரிவித்துள்ளது.

"ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை அதானி குழுமம் ஏற்கும்"- கவுதம் அதானி அறிவிப்பு!
File Photo

இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 3 ஆண்டுகளில் அதானி நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ளவில்லை என்றும், மத்திய அரசின் மின்துறைக்கு உட்பட்ட சூரிய ஒளி மின்உற்பத்தி கழகத்திடம் தான் 1500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பான விளக்கத்தை தன்னிடமோ, துறை அதிகாரிகளிடமோ பெறலாம் என்றும் விளக்கம் அளித்துள்ளார். அதேவேளையில் ஆந்திராவில் இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மனவும் காத்து வருகிறார். அத்துடன், ஆந்திராவுக்கு மின்தேவை உள்ளதால், அந்த திட்டத்தை ரத்து செய்யும் திட்டமில்லை என்றும் அறிவித்துள்ளார்.

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் விசாரணை

அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது லஞ்சம் பெற்றதாக செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்திருந்த நிலையில், சிறையில் இருந்த செந்தில் பாலாஜி மீது இந்த வழக்கில் அமலாக்கதுறை நடவடிக்கை எடுக்காதது ஏன். மேலும், இதனை காரணம் காட்டி அவரது ஜாமீனை ரத்து செய்திருக்காதா?. எதிர்க்கட்சிகள் அதானியிடம் பணம் பெற்றதாக தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, அதானியிடம் முதலமைச்சர் பணம் பெற்ற விவகாரத்தை கூறாமல் இருப்பது ஏன். அதானியை சந்தித்தீர்களா என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கேள்வி கேட்கும் மருத்துவர் ராமதாஸ், ஏன் அமலாக்கத் துறை சோதனை நடத்த வில்லை என பிரதமர் மோடியிடம் ஒற்றை கேள்வியும் எழுப்பவில்லை. ஏனென்றால் ராமதாஸ் கூறுவது போன்ற குற்றச்சாட்டு எதுவும் நடைபெற வில்லை. மோடி அரசுக்கு விசுவாசம் காட்டவே இது போன்று குற்றசாட்டுகளை மருத்துவர் ராமதாஸ் முன்வைக்கிறார்.

அதானிக்கு எதிராக வழக்கு தொடர்ந்த அமெரிக்க பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு, அதானி நேரடியாக ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகனை சந்தித்து பணம் வழங்கியதாக தெரிவித்துள்ளது. இதேபோல், ஒடிசாவுக்கும் வழங்கியதாக கூறியுள்ளது. ஆனால் தமிழ்நாடு அரசு குறித்து அவ்வாறு கூறவில்லை. இந்த முறைகேடு தொடர்பாக அதானியின் உறவினரிடம் இருந்த செல்போன், ஆவணங்களை என அனைத்தையும் கைப்பற்றி, ஆதரத்துடன் வழக்கில் சிக்க வைத்துள்ளது. அதன் அறிக்கையில் ஆந்திர மாநிலத்தை போலவே தான் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கும் ஒப்பந்தம் வழங்கப்பட்டிருக்கிறது என கூறியுள்ளது. தவிர தமிழ்நாடு அரசுக்கு லஞ்சம் வழங்கியுள்ளதாக தகவல் இல்லை. குறிப்பாக மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் இந்த அறிவிப்பு வந்துள்ளது. மேலும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மீதும் மட்டும் குற்றம்சாட்டியுள்ளது சந்தேகத்தை வலுக்கச் செய்துள்ளது.

ராமதாஸ் கூறுவது போல் அதானி நிறுவனத்திடம் லஞ்சம் பெற்றது உண்மை என்றால், எதிர்க்கட்சிகள் மீது அமலாக்கத் துறையை ஏவி விசாரிக்கும் மத்திய அரசு அதானி முறைகேடு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளாதது ஏன்?. ஸ்டாலினுக்கு எதிராக இவ்வளவு பெரிய குற்றச்சாட்டு வந்துள்ளபோதும், அவரது வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்தாது ஏன்? என கேள்வி எழுந்துள்ளது. அதானிக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளபோதும், அவரது நிறுவனத்துடனான ஒப்பந்தங்களை மத்திய அரசு ரத்து செய்யதது ஏன்?. மேலும், இந்த விவகாரம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் மத்திய அமைக்காதது ஏன் என்றும் கேள்வி எழும்பியுள்ளது. ஆனால் மோடிக்கு விசுவாசம் காட்டவே, மருத்துவர் ராமதாஸ் இது குறித்து வாய் திறக்காமல் உள்ளார்.

தி.மு.க.வில் இருந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நீக்கம்!
Photo: DMK

முதலமைச்சருக்கு எதிராக ஆதாரமில்லாத குற்றசாட்டுகளை முன்வைத்தால் அதற்கு முதலமைச்சர் பதிலடி கொடுத்துள்ளார். ஏற்கனவே திமுக தலைமை அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக மருத்துவர் ராமதாஸ் குற்றம்சாட்டியிருந்த நிலையில், இது தொடர்பாக ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த அவதூறு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் ராமதாஸ் வாய்தா வாங்கி வருகிறார். எனவே இந்த குற்றச்சாட்டும் பஞ்சமி நில விவகாரம் போன்று போலியானது என உறுதியாகிறது.

MUST READ