spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைகல்வி மீது கை வைக்கும் ஆர்.எஸ்.எஸ்! அண்ணாமலை பதில் சொல்லனும்! எஸ்.பி. லட்சுமணன் விளாசல்! 

கல்வி மீது கை வைக்கும் ஆர்.எஸ்.எஸ்! அண்ணாமலை பதில் சொல்லனும்! எஸ்.பி. லட்சுமணன் விளாசல்! 

-

- Advertisement -

தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் செய்யக்கூடாது என்று நினைக்கிற பாஜகவுக்கு தமிழர்களை பற்றி, அரசுப்பள்ளி மாணவர்கள் பற்றி பேசுவதற்கு தார்மீக உரிமை இல்லை என மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் விமர்சித்துள்ளார்.

we-r-hiring

மும்மொழி கொள்கை விகாரத்தை பாஜக கையில் எடுத்திருப்பதின் பின்னணி குறித்தும், இந்த விவகாரத்தில் தமிழக கட்சிகளின் எதிர்வினை குறித்தும் பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பு மிகவும் ஆபத்தானது என அறிந்திருந்தும் பாஜக இதனை கையில் எடுத்துள்ளதற்கு காரணம் முதலில் தமிழர்கள், தமிழர்களாக இருக்கக்கூடாது என்பதுதான். தமிழ்நாட்டை பாஜக ஆள வேண்டும், இங்கே கட்சி வளர வேண்டும் என்று நினைத்திருந்தால், தமிழ்நாட்டிற்கு ஏதாவது ஒரு நல்லது செய்திருக்க வேண்டும். ஆனால் நான் பல முறை யோசித்து பார்த்தாலும் அப்படி அவர்கள் எதுவும் பாஜக தமிழ்நாட்டிற்கு செய்யவில்லை. அதிகாரம் இல்லாத காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்தது, 6 வருடங்களாக கட்டப்படாமல் இருக்கும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை என்று தமிழ்நாட்டிற்கு எண்ணற்ற துரோகங்களை பாஜக செய்துள்ளது. தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் செய்யக்கூடாது என்று நினைக்கிற பாஜகவுக்கு தமிழர்களை பற்றி, அரசுப்பள்ளி மாணவர்கள் பற்றி பேசுவதற்கு தார்மீக உரிமை இல்லை. தமிழ்நாட்டில் நவீன தீண்டாமை கடைபிடிக்கப்படுவதாக எல்.முருகன் சொல்கிறார். அவர்கள் எத்தனை வேஷம் போட்டாலும் தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள். மூன்றவாது மொழி படிக்க வேண்டும் என்று சொல்லும் அண்ணாமலை, எதற்காக ஜெர்மனி, சீனம், பிரெஞ்சு மொழிகளை நீக்கினார்கள். சரி கன்னடம், மலையாளம், தெலுங்கு கற்பிக்க ஆசிரியர்களை நியமனம் செய்தார்களா? மாறாக சமஸ்கிருதம் படிக்க வேண்டும் என மற்றொரு சுற்றறிக்கையை வெளியிட்டனர்.

பிரதமர் மோடி

பி.எம். ஸ்ரீ திட்டத்தில் இரு மொழி கொள்கையை மறைமுகமாக நீக்கி விட்டு மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் முதல் நிபந்தனையாகும். 55 ஆண்டுகளாக செயல்படுத்தி வரும் ஒரு கொள்கையையும், அதன் மூலம் வந்த திட்டங்களையும் ஒதுக்கிவிட்டு ஒரே நாளில் மும்மொழி கொள்கையை திணிக்க வேண்டும் என்பது நியாயமா? மாநில உணர்வுகளை, மாநில உரிமைகளை எதற்காக நசுக்குகிறீர்கள். இரு மொழி கொள்கையால் தமிழ்நாடு என்ன கெட்டுவிட்டது. தமிழ்நாட்டில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து நிரூபியுங்கள். மத்திய அரசு நிதிகளை வழங்காமல் இருப்பதற்கு ஒரே தீர்வு நீதிமன்றத்திற்கு தான் செல்ல வேண்டும். ஆளுநர் ஆர்.என்.ரவி, தனக்கு இல்லாத அதிகாரத்தை இருப்பதாக நினைத்துக்கொண்டு சட்ட விரோதமாக மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார். ஆளுநர் திருப்பி அனுப்பிய ஒரு மசோதா மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பினால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தாக வேண்டும். அதை ஒரு வருடம் கிடப்பில் போட்டுவிட்டு, நீதிமன்றம் கண்டித்த பின்னர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார். அதனால்தான், எந்த சட்டத்தின் அடிப்படையில் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தீர்கள், உங்களது நோக்கம் என்ன என்று ஆளுநரிடம், நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். சுய மரியாதை உள்ள எவரும் மன்னிப்பு கடிதத்தை எழுதி வைத்துவிட்டு, ராஜினாமா கடிதத்தை டெல்லியில் கொடுத்துவிட்டு அப்படியே போயிருப்பார்கள். தமிழ்நாட்டிற்கு ஆர்.என்.ரவி போன்று துரோகம் செய்த ஆளுநர்களே கிடையாது. பாரம்பரியம் மிக்க 10 பல்கலைக் கழங்களுக்கு துணை வேந்தர்கள், பதிவாளர்கள் கிடையாது. அரசுப்பள்ளி மாணவர்களுக்காக இன்று பொங்கும் அண்ணாமலை, இருக்கும் பல்கலை.களுக்கு துணைவேந்தரை நியமிக்க அனுமதித்தீர்களா?

தமிழ்நாட்டின் புதிய ஆளுநர் யார்?

தமிழ்நாட்டின் கல்வித்துறை மீதான பாஜக அரசின் தாக்குதலை சமாளிக்கும் வல்லமை இங்குள்ள திராவிட இயக்கங்களுக்கு உள்ளது. அதற்கான வளமையும் இங்குள்ளது. இதற்கெல்லாம் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அயர்ந்து விடக்கூடாது. சில இலவசங்களை ரத்து செய்துவிட்டு, அந்த நிதியை கல்விக்கு பயன்படுத்துங்கள். பாஜகவை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டின் மீது அக்கறை கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய பாஜக அரசின் நெருக்கடிகளை சமாளிக்க வேண்டும் என்றால் சில இலவச திட்டங்களை தியாகம் செய்ய தயார் ஆக வேண்டும். இதனை ஏற்றுக்கொள்ள மக்களும் தயாராக வேண்டும். தமிழ்நாட்டிற்கு சவாலான கால கட்டம் இது. தமிழ்நாட்டு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இப்படி பட்டவர்களை எந்த நேரமும் விரட்டி அடிக்க எப்போதும் விழிப்பாக இருக்க வேண்டும்.

பாஜகவை எதிர்ப்பது, அதன் துரோகங்களை அம்பலப்படுத்த வேண்டும் என்பதுதான் தற்போது முக்கியமானது. பாஜகவின் இந்த துரோகங்களால் திமுகவுக்கு தான் சாதகம் என்று அரசியலை கொண்டுவந்து திணிக்கக்கூடாது. நமது உரிமைகளை, உணர்வுகளை பேசும்போது, அரசியல் கணக்குகளுக்கு வேலையில்லை. அதை எடப்பாடியோ, சீமானோ யார் வேண்டுமென்றாலும் அறுவடை செய்துவிட்டு போகட்டும். இதை வைத்துதான் பாஜகவினர் உள்நுழைய பார்க்கிறார்கள். அதிமுக இருமொழி கொள்கைகளில் உறுதியாக உள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்து விட்டார். எடப்பாடி பழனிசாமி மீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், அடிப்படை கொள்கைகளை விட்டுக்கொடுக்காத கட்சி அதிமுக. நீட் தேர்வுக்காக தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியவர் எடப்பாடி. பாஜகவிற்கு சேவகம் செய்வதாக சொல்லப்படும் ஓபிஎஸ், தமிழ்நாட்டிற்கான நிதி வழங்கப்படாததை கண்டிக்கிறார். டிடிவி தினகரனின் நிலைப்பாடும் இதுதான்.பாஜகவை தவிர மற்ற அனைவரும் அப்படிதான் சொல்வார்கள்.

'கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்'- எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்!

பி.எம். ஸ்ரீ திட்டத்தில் சேருவதற்கு ஆர்வம் உள்ளதாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தை மத்திய பாஜக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. நவோதயா பள்ளிகளின் மற்றொரு வடிவம்தான் பி.எம்.ஸ்ரீ பள்ளிகள். இந்த புரிதல் கூட திமுக அரசுக்கு இல்லாதது ஏன்?. பாஜக விரித்த சதி வலையில் திமுக விழுந்துவிட்டது. இதை ஒப்புக்கொள்ள வேண்டும். டங்ஸ்டன் விவகாரத்திலும் இதே தவறை தான் திமுக செய்தது. கடைசியில் விழித்துக் கொண்டது. பி.எம். ஸ்ரீ விவகாரத்தில் திமுக அரசு தவறு செய்தது. மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்பில் கடிதம் எழுதி இருக்கவேக்கூடாது. அவர்களது நிபந்தனைகளை முழுமையாக படிக்காமல் எதற்காக கடிதம் எழுதப்பட்டது. சரி ஏதோ ஒரு விவகாரத்தில் தவறு நடந்துவிட்டது. இனி திமுக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் அதிமுகவின் விமர்சனம் மிகவும் சரியானது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ