spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைலுங்கியில் இறங்கிய ஸ்டாலின்! அப்பல்லோ ஆபரேஷன் புரியுதா? வல்லம் பஷீர் சூசகம்!

லுங்கியில் இறங்கிய ஸ்டாலின்! அப்பல்லோ ஆபரேஷன் புரியுதா? வல்லம் பஷீர் சூசகம்!

-

- Advertisement -

மருத்துவர்கள் 3 நாட்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தியுள்ள போதிலும், அந்த ஓய்வு நேரத்தில் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து ஆய்வுக்கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தியுள்ளார் என்று திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வுக்கூட்டம் நடத்தியுள்ளது தொடர்பாக  திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது:- கலைஞர், ஸ்டாலின் குறித்து பேசுகிறபோது உழைப்பு… உழைப்பு… என்று தான் சொல்வார். மிசா கொட்டடியில் இருந்த காலம் முதல் இன்றைக்கு முதலமைச்சராக இருக்கும் காலம் வரை அவர் கடந்து வந்துள்ள பாதை என்பது சலுகை அடிப்படையில் வழங்கப்பட்டது அல்ல. அவருடைய உழைப்பின் காரணமாக தான் ஸ்டாலினுக்கு இந்த இடம் கிடைத்தது. உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைக்கின்றன. ஆனால் நீண்ட காலமாக பொதுமக்களுடைய கோரிக்கை நிறைவேறாமல் இருந்தால், உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கோரிக்கை வைத்தால் அது நிறைவேற்றப்படும்.

ஜமாபந்தி நடைபெறுவது போல, மாநிலம் முழுவதும் ஒரு நிலையை கொண்டுவந்து, அதன் மூலம் நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு ஒரு வடிவம் தந்துள்ளார். அந்த திட்டத்திற்கு பெயர்தான் உங்களுடன் ஸ்டாலின் திட்டம். பிரபல தமிழ்நாளேடு ஒன்று முதலமைச்சருக்கு பெட் ஸ்கேன் எதற்காக எடுக்கப்பட்டுள்ளது? அவருக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டு கொண்டிருக்கிறது? என்று கட்டுரை வெளியாகியுள்ளது. பெட்ஸ்கேன் என்பது புற்று நோய்க்காக எடுக்கப்படும் என்பது சரி. அவருக்கு பெட்ஸ்கேன் எடுக்கப்பட்டது என்று உங்களுக்கு யார் சொன்னது? உடனடியாக முதலமைச்சருக்கு புற்றுநோய் என்று வலதுசாரிகள் தொடங்கிவிட்டனர். 

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜம்மென்று வந்து உட்கார்ந்து இருக்கிறார். தறியில் நெய்யப்பட்ட துண்டை தோளில் போட்டுள்ளார். வீட்டில் கட்டியிருக்கும் கைலி. சாதாரண சட்டையில் அப்படியே அமர்ந்து பேசுகிறார். அவரிடம் எந்த சலனமும் இல்லை. நிதானமாக பேசுகிறார். கோவை உள்ளிட்ட  மூன்று மாவட்டங்களில் ஆய்வு. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எது தொடர்பாக அதிக மனுக்கள் வந்துள்ளது, அவற்றை நிறைவேற்றிக் கொடுத்தீர்களா? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்கிறார். மேலும், வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் பந்தல் போட்டிருக்கிறீர்களா? மனுஅளிக்க வருபவர்கள் சிரமப்பட வில்லையே? என்று கேட்கிறார்.

அத்துடன் குடிநீர் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதா? என கேட்கிறார். அதிகாரிகள் குடிநீர் மற்றும் தேநீர் போன்றவை வழங்கப்படுவதாக சொல்கிறன்றனர். அப்போது வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் தேநீர், காபி போன்றவற்றுடன், ஜீஸ் வழங்கிடுமாறு அறிவுறுத்துகிறார்.  கலைஞர் உரிமைத்தொகை தொடர்பாக அதிக மனு வருகிறதா? நீங்கள் உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பினீர்களா? அதை கரெக்டாக பார்த்துக் கொள்ளுங்கள். பட்டா மாறுதல் தொடர்பாக மனுக்கள் வருகிறதா? அவை வருவாய்த் துறைக்கு செல்கிறதா? அங்கே உங்களுக்கு ரெஸ்பான்ஸ் உள்ளதா? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் என்ன ஆய்வு செய்வாரோ, அதை செய்கிறார்.

முதலமைச்சருக்கு எப்போது ஓய்வு கிடைக்காமல் போனது என்றால்? அவர் எப்போது உங்களுடன் ஸ்டாலின் முதல்வர் திட்டத்தை தொடங்கினாரோ அப்போதுதான். முதலமைச்சரின் பயணத்தை பார்த்தோம் என்றால் தினந்தோறும் ஒரு இடத்திற்கு போய் நிற்கிறார். அதன் விளைவுதான், முதலமைச்சருக்கு மயக்கமும் தலைச் சுற்றலும் ஏற்பட்டிருக்கிறது. 3 நாள் ஓய்வு எடுக்க வேண்டும் என்பதுதான் மருத்துவர்களின் அறிவுறுத்தலாகும். அந்த ஓய்வை கூட அவர் முழுமையாக பயன்படுத்தி, அரசு இயந்திரத்தை முழுமையாக இயக்கிக் கொண்டிருக்கிற இடத்தில் நான் இருக்கிறேன் என்று பொறுப்புணர்ந்து செயல்பட்டிருப்பதை இன்றைக்கு தமிழ்நாடு பார்த்திருக்கிறது.

முதலமைச்சருக்கு காலையில் நடைபயணம் செல்கிற போது தலைச்சுற்றல் வந்தது. அதற்கு பிறகு அவர் அண்ணா அறிவாலயம் வந்தார். அதிமுக மூத்த நிர்வாகி அன்வர் ராஜாவை கட்சியில் சேர்த்துக்கொண்டுதான் அவர் மருத்துவமனைக்கே சென்றார். அன்வர் ராஜா இணைப்பை மற்றொரு நாள் கூட வைத்திருக்கலாம். ஆனால் எதிர்க் கட்சியில் இருந்து வரும் நபருக்கும் அளித்த வாக்குறுதியையும் முதலமைச்சர் நிறைவேற்றுகிறார். அவரை கட்சியில் இணைத்த பிறகே,  மருத்துவமனைக்கே புறப்பட்டு சென்றார். இதைவிட வெளிப்படைத் தன்மையோடு முதலமைச்சர் எப்படி இயங்கிட முடியும்?

admk

இதே அப்பல்லோ மருத்துவமனையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தார். யாராவது ஒருவர் அவரை பார்க்க முடிந்ததா? ஒரு புகைப்படம், காணொலி காட்சி கிடைத்ததா? அவரும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தார். ராகுல்காந்தி, மோடி என்று எல்லா தலைவர்களும் வந்தார்கள். எல்லோரும் வந்து மருத்துவர்களிடம் பேசினோம். சசிகலாவிடம் பேசினோம் என்று சொன்னார்களே தவிர, ஒரு நாளும் யாரும் ஜெயலலிதாவை பார்த்தேன் என்று சொல்லவில்லை. பார்க்கவும் இல்லை. ஆனால் ஒரு முதலமைச்சர் எவ்வளவு வெளிப்படை தன்மையோடு இருக்கிறார் என்று பாருங்கள்? முதலமைச்சர் நினைத்தால் ஆய்வு செய்துவிட்டு ஒரு புகைப்படத்தை மட்டும் போட்டிருக்கலாம். ஆனால் சர்வ சாதாரணமாக இருக்கும் நிலையிலான காணொலி காட்சியை வெளியிட்டிருக்கிறார்.

முதலமைச்சர் ஒளிவு மறைவு இல்லாத ஒரு வாழ்க்கையை நடத்திக் கொண்டு இருக்கிறார். வெளிப்படைத் தன்மையுடைய முதலமைச்சராக செயல்படுகிறார் என்பதற்கு இன்னும் என்ன சான்று எதிர் பார்க்கிறீர்கள்? இனிமேலாவது அவதூறு பரப்பும் நபர்கள், அவருடைய செயல்பாடுகளை பார்த்து அவற்றை நிறுத்திக்கொள்ள வேண்டும். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவர் காவிரி ஆணையக் கூட்டத்தில் பங்கேற்றார், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் சின்னம் ஒதுக்க கையொப்பமிட்டார் என்று சொன்னார்கள். ஆனால் சின்ன ஒதுக்கீடு விவகாரத்தில் அது ஜெயலலிதா கையொப்பம் இல்லை என்று வழக்கு தொடரப்பட்டது.

திமுகவில் கலைஞர் செயல்பட முடியாத நிலைக்கு சென்றபோது, அவரது பெயரில் அறிக்கை வெளியிடுவது நிறுத்தப்பட்டது. கலைஞர் அறிக்கை விடும் நிலையில் இல்லை என்பதால் அவரது பெயரில் அறிக்கை வெளியாகவில்லை. இதுதான் திமுக. கலைஞர் மரணிக்கும் தருவாய் வரை உண்மைக்கு புறம்பான செய்தி எதுவும் வெளியில் சொல்லப்படவே இல்லை. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது சசிகலாவிடம் சென்று விசாரித்தோம். மருத்துவரிடம் விசாரித்தோம் என்று எல்லோரும் சொன்னார்கள். ஆனால் அது தொடர்பான எந்த புகைப்படங்களும் வெளியாக வில்லை.

அதேவேளையில் காவேரி மருத்துமனையில் கலைஞர் தனது இறுதி காலத்தில் இருந்தபோது, அவரை பார்க்க வந்த திமுக தொண்டர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது உடல்நலம் குறித்து விளக்கினார். மேலும் கலைஞரை பார்க்கவும் அனுமதிக்கப்பட்டனர். எவ்வளவு வெளிப்படைத்தன்மையுடன் ஒரு இயக்கம் இயங்கியிருக்கிறது பாருங்கள். அந்த இயங்கியல் தான் இன்றுவரை இந்த இயக்கத்தை வீழ்த்தமுடியாமல் தூக்கி நிறுத்திக்கொண்டிருக்கிறது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ