spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஸ்டாலின்தான் நம்பர் 1! அடம்பிடிக்கும் இபிஎஸ்! அமித்ஷாவின் பிரம்மாஸ்திரம்!

ஸ்டாலின்தான் நம்பர் 1! அடம்பிடிக்கும் இபிஎஸ்! அமித்ஷாவின் பிரம்மாஸ்திரம்!

-

- Advertisement -

பீகார் தேர்தல் வர உள்ளதால், அதற்குள்ளாக அதிமுக உட்கட்சி பிரச்சினையை பேசி முடித்து விடலாம் என்பதற்காக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் டெல்லிக்கு செல்வதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணத்தின் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- அதிமுக ஒருங்கிணைப்புக்கு செங்கோட்டையன் விதித்த காலக்கெடு நிறைவு பெற்ற நிலையில், எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை சந்திக்க இன்று டெல்லிக்கு செல்ல உள்ளார். செங்கோட்டையன் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என அண்ணா சொன்னதாக சூசகமாக தெரிவித்து உள்ளார். அண்ணா எந்த சூழலில் அதை சொன்னார். இவர்கள் டெல்லி பஞ்சாயத்துக்கு போய்விட்டு மாற்றான் தோட்டத்து மல்லிக்கு மணம் இருக்கும் என்று சொல்கிறார். உட்கட்சி பிரச்சினைகளை உட்கட்சிக்குள் தான் பேசி தீர்க்க வேண்டும் அதை பேச வேண்டிய இடம் அமித்ஷாவின் அரணமனை அல்ல. ஆனாலும் எடப்பாடி பழனிசாமி இன்றைக்கு டெல்லிக்கு செல்கிறார். செங்கோட்டையன் மீண்டும் ஒற்றுமை குரலை எழுப்பியுள்ளார். என்னை பொருத்தவரை செங்கோட்டையன் பற்றவைத்த நெருப்பு இன்னமும் அணையவில்லை.

அதிமுக உடைந்து கிடந்தால், 2026 தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். திமுக கூட்டணி அப்படியே பலமாகதான் இருக்கிறது. அங்கிருந்து யாரும் வெளியே வர மாட்டார்கள். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு என்று கேட்கலாம். ஆனால் அவர்கள் தனித்து போட்டியிட்டால் டெபாசிட் கூட வாங்காது. அவர்கள் எப்படி தனித்து போட்டியிடுவார்கள். தேசிய அளவில் காங்கிரஸ் – திமுக இடையே ஒரு கூட்டணி உள்ளது. ராகுல்காந்தி பேசுகிறபோது அவருக்கு பின்னால் குரல் கொடுக்க திமுக வேண்டும். அதற்கு காரணம் தமிழ்நாட்டில் நம்பர் ஒன் என்கிற இடத்தில் திமுக உள்ளனர். மற்றவர்கள் எல்லாம் அவர்களுக்கு கீழே வரிசையில் இருக்கிறார்கள். அதில் 2வது இடம் தாங்கள்தான் இருக்கிறோம் என அதிமுக, விஜய் சொல்லாம். அடிப்படையில் அணிகள் தான் முக்கியம். திமுக கூட்டணி, அதிமுக கூட்டணிதான் உள்ளது. இந்த இரு கூட்டணிகளுக்கு உள்ள வித்தியாசம் அதிமுக கூட்டணியில் யார்? யார்? இருக்கிறார்கள் என்கிற விவரம் தெரியவில்லை. அதிமுக பிளவுபட்டிருக்கிறது. ஒவ்வொரு அணிக்கும் ஒரு வாக்கு வங்கி உள்ளது.

எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறபோது வேலுமணி போன்ற மூத்த தலைவர்களையும் அழைத்துச் செல்கிறார். சிலர் முன்கூட்டியே செல்கின்றனர். டெல்லி பயணத்திற்கு காரணமாக துணை ஜனாதிபதிக்கு வாழ்த்து கூற போவதாக சொல்கிறார்கள். வழக்கமாக பதவி ஏற்பு விழாவில் தான் எல்லோரும் வாழ்த்து சொல்வார்கள். எனவே இது ஒரு சாக்கு. பஞ்சாயத்து என்பது அனைவருக்கும் தெரிகிறது. பீகார் தேர்தல் வருவதால், அந்த தேர்தல் பணிகளில் அமித்ஷா மூழ்கி விடுவார். அதற்குள்ளாக அதிமுக உட்கட்சி பிரச்சினையை பேசி முடித்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி அதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார். அதுதான் சிக்கல். தேசிய கட்சிக்கு நாடாளுமன்றத் தேர்தல் தான் முக்கியம். 2029ல் பாஜக வெற்றி பெற்றாலும் மோடி பிரதமராக முடியாது. 240 இடங்கள் தான் அவர்கள் இருக்கிறார்கள். கடைசியாக சர்வே எடுக்கிறபோது 240க்கும் குறைவாகவே வரும். பாஜக 200 தொகுதிகள் வந்தால், அப்போது பெரிய மெஜாரிட்டி தேவைப்படும். ஸ்டாலின், மைனாரிட்டி பாஜக அரசு என்று சொல்கிறார். அது மாறுகிறபோது நீட் விலக்கிற்கான தங்களின் முயற்சி வெற்றி பெறும் என்கிறார். அப்போது, எப்படி காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியே வரும்?

திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளும் தேசிய கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி வைத்திருக்கிறார்கள். ஆனால் அவர்களை ஊறுகாய் போன்று பயன்படுத்தி கொண்டார்கள். முழு சாப்பாடாக அல்ல. அதற்கு காரணம் தேசிய கட்சிகளின் பல கொள்கைகள் தமிழ்நாட்டிற்கு ஒத்து வராது. ஆனால் அதிமுகவில் புல் மீல்ஸ் சாப்பிடுவது போல கட்சி பஞ்சாயத்துகளுக்கு செல்கின்றனர். அப்போது உங்களுக்கு எவ்வளவு பாதிப்பு ஏற்படும்? இது பாஜகவுக்கும் தெரியும். அவர்கள் இதனை கையாள காரணம் அதிமுகவை கொஞ்சம் கொஞ்சமாக பலவீனப்படுத்துவது தங்களுக்கு லாபம் என்று நினைக்கிறார்கள். அண்ணாமலை பெரிய அளவில் ரீச் ஆகி வந்தார். கடந்த சில நாட்களாக அவரது நிலைமை என்ன? அவருக்கு ரூ.3,000 கோடி சொத்து உள்ளது என்று பாஜக சொல்கிறது. அண்ணாமலையை களத்தில் இருந்து பாஜகவே நகர்த்துகிறது. அண்ணாமலை குறித்து பாஜகவில் இருந்தவர்களும் சொல்கிறார்கள். இன்னும் நிறைய வரப் போகிறது. நயினார் சார்ந்த சமுதாயத்தில் பாஜக வலிமை பெற பார்க்கிறது.

ops anna

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன், ஓபிஎஸ் போன்ற யாரும் பாஜக கூட்டணியை எதிர்த்து குரல் கொடுக்கவில்லை. தினகரனும் எடப்பாடியை தான் எதிர்ப்பதாகவும், என்டிஏ கூட்டணியில் தொடர்வதாகவும் கூறுகிறார். அப்போது அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லையே. பாஜகவின் அரசியல் என்னவோ அதை அப்படியே அதிமுக எடுத்துக்கொள்கிறது. விஜயின் திருச்சி மாநாட்டிற்கு பிறகு முதல்வரை தவிர அனைத்து அமைச்சர்களும், விஜய்க்கு எதிராக பேச தொடங்கிவிட்டார்கள். அதிமுக தரப்பில் ஜெயக்குமார், விஜய்க்கு எதிரான கருத்துக்களை சொல்கிறார். இதன் மூலம் விஜய் என்கிற மூன்றாவது அணி வந்துவிட்டதை அவர்கள் மறைமுகமாக ஒப்புக்கொள்கிறார்கள்.

அந்த காலத்தில் எம்ஜிஆர் தான் 3வது அணி. தமிழ்நாட்டில் திமுக, காமராஜர் தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸ், மூன்றாவதாக திமுகவில் இருந்து பிரிந்து வந்த எம்ஜிஆர் இருந்தார். மூன்றாவது சக்தியை வளர விடாமல் தடுக்க வேண்டும் என்றால், அதிமுக முன்னாள் உள்ள வாய்ப்பு வேற்றுமைகளை களைவதுதான்.ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி தயங்குகிறார். அதற்கு காரணம் 2026 தேர்தலில் பெரிய அளவுக்கு வெற்றி பெற முடியாது. அதே நேரத்தில் 2026ல் ஓபிஎஸ், டிடிவி, சசிகலா, செங்கோட்டையன் ஆதரவாளர்கள் கணிசமான அளவு எம்எல்ஏ-க்களாக வரும்பட்சத்தில், எடப்பாடியின் தலைமைக்கு தான் ஆபத்து வரும். எனவே அவர் தயங்குகிறார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ