2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக அணிகள் தவிர்த்து புதிய அணி தாமாகவே உருவாகுவதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.
2026 தேர்தல் தொடர்பாக திமுக, பாஜகவின் தேர்தல் நிலைப்பாடுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறி இருப்பதாவது:- 2011ல் ஜெயலலிதா எடுத்த நிலைப்பாட்டை அமித்ஷா எடுத்துள்ளார். அதேபோல் 2016 தேர்தலில் ஜெயலலிதா எடுத்த அரசியல் நிலைப்பாட்டை ஸ்டாலின் எடுத்துள்ளார் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்னதாக கலைஞர் 1996 தேர்தலில் எடுத்த அரசியல் நிலைப்பாடுதான் இது. 1996 சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள். அதிமுக ஆட்சி. ஆட்சியில் உள்ள அதிமுகவை அகற்ற வேண்டும். என்ன பிரச்சினைகள் வந்தன. வளர்ப்பு மகன் திருமகன் திருமணம். அதில் ஏற்பட்ட பின்னடைவுகள் இருந்தன. திடீரென அதிமுக – காங்கிரஸ் கூட்டணியாக மாறியது. அதுவரை சென்னா ரெட்டியுடன் கடும் எதிர்ப்பு இருந்தது. நரசிம்மராவின் பேரன் திருமணத்திற்கு ஜெயலலிதா சென்றார். அதேபோல், ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் திருமணத்தில் நரசிம்மராவ் கலந்துகொண்டார். அப்போதைய அதிமுக நாடாளுமன்றக்குழு தலைவர் சாமிநாதன் கூட்டணிதான் என்று சொன்னார்.
அதற்கு முன்னதாக இரு கட்சிகள் இடையே 4 வருடங்களாக கடும் எதிர்ப்பு நிலவியது. ராஜிவ் ரத்தத்தால் கிடைத்த வெற்றி அல்ல என்று மதுரை அதிமுக மாநாட்டில் ஜெயலலிதா சொன்னார். அதில் இருந்து ஏற்பட்ட பிணக்கு. பின்னர் ரஜினிகாந்த் வெடிகுண்டு கலாச்சாரம் பெருகி விட்டதாக குற்றம்சாட்டினார். அது பாட்ஷா படவிழாவில் பிரச்சினையாகி, ஆர்.எம்.வீரப்பன் பதவி விலகினார். ரஜினிகாந்த் ஆதரவோடு காங்கிரஸ் தனித்து ஆட்சி அமைக்கும் என்று அன்றைய காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர். பாலசுப்ரமணியம் சொன்னார். அதிமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் எல்லாம் ஓரணியில் ஒன்றிணைய வேண்டும். மயிலாப்பூர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் கராத்தே தியாகராஜன் நின்றார். இந்த தேர்தலில் ஜெயலலிதா வேட்பாளர் சொற்ப வாக்குகளில் வெற்றி பெற்றார்.
அதுவரை திமுக கூட்டணியில் பாமக, வாழப்பாடி ராமமூர்த்தி போன்றவர்கள் இருந்தார்கள். சுப்பிரமணிய சாமி மூன்றாவது கூட்டணி. அதிமுக காங்கிரஸ் கூட்டணி வரக்கூடாது என்று ஆளுநர் சென்னா ரெட்டி சொன்னார். அதனால் பிரதமர் நரசிம்ம ராவின் கட்அவுட்டை வைத்து போராட்டம் நடைபெறுகிறது. டெல்லியில் இருந்து வந்த ஜி.கே.முப்பனார், சத்திய மூர்த்தி பவனில் உட்கார்ந்தார். இனிமேல்
அதிமுக – காங். கூட்டணி சரியாக வராது என்பதால் தமாகா என்கிற கட்சியை தொடங்கினார். ஆனால் பிரச்சினை என்ன என்றால் 1998ல் ராஜிவ் காந்தி கொலை. திமுக தான் இதற்கு காரணம் என்று சொல்லி அதிமுக- காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. 4 வருடத்தில் நிலைமை மாறி காங்கிரசில் இருந்த வாழப்பாடி ராமமுத்தி திமுக அணிக்கு வந்தார். எனவே அரசியலில் எதுவும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்.
தமாகா பிறந்த உடன் அதனுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று கலைஞர் விரும்பினார். அண்ணாமலை படத்தில் நான் பயன்படுத்திய சைக்கிள் சின்னமாக வேண்டும் என்று ரஜினிகாந்த் சொன்னார். அதேபோல் தேர்தல் ஆணையதில் போய் சைக்கிள் சின்னத்தை சிதம்பரம் வாங்கி வந்தார். திமுக கூட்டணியில் பாமகவை சேர்த்தால் இடம் தர முடியாது. அதனால் பாமக போட்டியிடும் இடம் தொடர்பாக கேட்க வைத்து, கூட்டணியை கலைத்துவிட்டார்கள். அதேபோல், வாழப்பாடி ராம முர்த்தியும் வெளியேறினார். கடைசியில், திமுக – தமாகா கூட்டணி. 40 எம்எல்ஏ, இடங்கள், 20 எம்பி சீட்டுகளில் போட்டியிட்டு பெரும்பாலனாவற்றில் வெற்றி பெற்றனர். அதிமுக தோல்வி அடைந்தது. கிட்டத்தட்ட அதே பரபரப்பான அரசியல் சூழல் தற்போது நிலவுகிறது.
திமுக தனியாக ஒரு அணியை உருவாக்கும். மக்கள் நலக்கூட்டணியை திமுக உருவாக்குகிறது. வாக்குகள் பிரிகிறது. வெற்றி திசை மாறுகிறது. தனியான அணியை உருவாக்க வாய்ப்பு உள்ளதா என்றால்? வாய்ப்பு உள்ளது. பாமக வேறு ஒரு முடிவை மாற்றி சொல்கிறது. அண்ணாமலை, பாஜக நடத்தும் போராட்டங்களில் பங்கேற்பது இல்லை. ஆனால் தனியாக அறிக்கை வெளியிட்டு கொண்டிருக்கிறார். அப்போது, அவர் முப்பனார் போன்று மாற்று முடிவை எடுப்பார். பாமகவில் ஒரு அணி மாற்று முடிவு எடுத்தால், அந்த அணி விஜயிடம் போகும். இப்படி தான் இன்றைய கால கட்டத்தில் உள்ளது.
அமித்ஷா, 2011ல் விஜயகாந்தை எப்படி கூட்டணிக்குள் கொண்டு வந்தாரோ அதுபோல விஜயை கொண்டுவர முயற்சிப்பதாக சொல்கிறார்கள். இது சிறப்பான நகர்வு ஒன்றும் இல்லை. எல்லா மாநிலங்களிலும் உள்ள அரசியல் தான். திமுக கைவசம் 38 சதவீத வாக்குகள் உள்ளன. அப்போது 62 சதவிகிதம் பேர் எதிர்ப்பாக உள்ளனர். ஏற்கனவே ஒரு பகுதி அதிமுக – பாஜகவாக உள்ளது. மற்ற பகுதிகளாக விஜய் மற்றும் சீமான் உள்ளனர். சீமான் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் அறிவிக்க உள்ளனர். பாமக, சீமான் போன்ற கட்சிகளில் தேர்தலில் போட்டியிட்டாலே போதும், கூட்டணியில் சென்று 10 சீட்டுகள் மட்டும் வாங்கினால் கட்சி காலியாகிவிடும்.
அமித்ஷா சொன்னால் அதிமுக கேட்கும். அதற்கு காரணங்கள் உள்ளன. ஆனால் சீமானோ, விஜயோ சேர மாட்டார்கள். சேர்ந்தால் எங்களுக்கு 50 இடங்கள் வேண்டும் என்று கேட்பார்கள். அதிமுக – பாஜக கூட்டணியில் வாய்ப்பு உள்ள கட்சி தேமுதிக தான். அவர்களுக்கு பிரேமலதாவை எதிர்க்கட்சி தலைவராக்க வேண்டும். முதலமைச்சராக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். பாமக சேரும். அதற்குள்ளே அன்புமணி – ராமதாஸ் இடையே பிரச்சினை உள்ளது. அப்போது, ஸ்டாலின் முயற்சி செய்யாமலேயே புதிய அணி உருவாகிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.