spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஸ்டாலின் டெல்லி பிளானே வேற! உடையும் உயர்நீதிமன்றத் தீர்ப்பு! தராசு ஷ்யாம் நேர்காணல்!

ஸ்டாலின் டெல்லி பிளானே வேற! உடையும் உயர்நீதிமன்றத் தீர்ப்பு! தராசு ஷ்யாம் நேர்காணல்!

-

- Advertisement -

டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சோனியா, ராகுல்காந்தியை சந்தித்து பேசியதன் மூலம் காங்கிரஸ் உடனான கூட்டணி உறுதியாக உள்ளது என்பதை அரசியல் ரீதியாக உணர்த்தி விட்டார் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

tharasu shyam
tharasu shyam

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் டெல்லி பயணம் குறித்தும், அது தொடர்பான விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் விதமாகவும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். நிதி ஆயோக்கில் நிதி தொடர்பான விவகாரங்களோ, நிதி ஒதுக்கீடு என்பதோ கிடையாது. நிதி ஆயோக் அமைக்கப்பட்டு 10 ஆண்டுகளில் உருப்படியாக எதையும் செய்யவில்லை. இதில் மாநிலங்களை சிறியவை, பெரியவை மற்றும் யூனியன் பிரதேசங்கள் என்று மூன்று பிரிவுகளாக பிரித்துள்ளனர். அதில் யூனியன் பிரதேசங்களுக்கு குரலே கிடையாது. சிறிய, பெரிய மாநிலங்களை பொருத்தவரை பாஜக ஆளும் மாநிலங்களுக்கு குரல் கிடையாது. பிரதமர் எடுக்கும் முடிவுகளை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். பாஜக அல்லாத மாநில அரசுகளுக்கு தான், இந்த கூட்டத்தில் முக்கிய பங்கு இருக்கும். அதனை மத்திய அரசு அழுத்திவிடுகிறது. கடந்த முறை நிதி ஆயோக் கூட்டத்தில் 10 பேர் பங்கேற்கவில்லை. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த கூட்டத்தில் பங்கேற்றும் எந்த பலனும் இல்லை. நிதி ஆயோக் உருவாகி 10 ஆண்டு காலத்தில் மாநிலங்களுக்கு உருப்படியாக எதாவது செய்திருக்கிறதா? என்றால் எதுவும் இல்லை. ஆனால் நிதி ஆணையத்தில் எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா போன்றவர்கள் சண்டை போட்டுள்ளனர்.

we-r-hiring

இங்கே என்ன பிரச்சினை என்றால் இது டபுள் என்ஜின் சர்கார் என்று சொல்கிறார்கள். மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி இருந்தால்தான் வளர்ச்சி பெறும் என்று சொல்வது பழமைவாதமாகும். ஆனால் எப்போது மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதோ அப்போதே அனைத்தும் மாநிலங்கள் சார்ந்ததாக மாறிவிட்டது. மத்திய அரசுக்கு உண்மையிலேயே அதிகாரம் குறைவாக இருக்க வேண்டும். பழைய நிதி ஆணையத்தை தூக்கிய பின்னர் எல்லாமே நிதி அமைச்சகம்தான். தேசிய கல்விக்கொள்கையை ஏற்காவிட்டால் தமிழ்நாட்டிற்கு நிதி தர மாட்டோம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்கிறார்கள். அப்படி சொல்வதற்கு என்ன உரிமை உள்ளது? தேசிய கல்விக் கொள்கை என்பது நாடாளுமனற்த்தால் நிறைவேற்றப்பட்ட சட்டமா? இல்லை. ஆனால் பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்து போட்டால்தான் நிதி தருவோம் என்று சொல்வது பச்சையான அயோக்கியத்தனம். ஆனால் அதை தான் சொல்கிறார்கள். நீதிமன்றம் வரை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யும் அளவுக்கு மத்திய அரசு அகங்காரத்துடன் நடந்து கொள்கிறது.

இப்படியான சூழலில் முதலமைச்சரின் டெல்லி பயணத்தின் நோக்கம் என்னவாக இருக்கும்? நிதி பகிர்வு இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. சூட் மனுவாகும். ரிட் மனு போன்று வேகமாக நடக்காது. ஆனால் உச்சநீதிமன்றம் நீங்கள் இதுவரை என்ன கேட்டீர்கள் என்று கேட்கும். அப்போது கூட்டத்திற்கு போனேன் என்று ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யலாம். முதலமைச்சர் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல்காந்தியை நேற்றே சென்று சந்தித்துவிட்டார். அப்போது காங்கிரஸ் உடனான கூட்டணி உறுதியாக உள்ளது என்பதை அரசியல் ரீதியாக உணர்த்தி விட்டார். பிரதமரை சந்திக்க முதலமைச்சர் நேரம் கேட்டுள்ளார். இந்த நிமிடம் வரை நேரம் ஒதுக்கவில்லை. கொடுத்து பேசினாலும் சம்பிரதாய சந்திப்பாகத்தான் இருக்கும். இதைதாண்டி நிதி ஆயோக் எந்த பிரயோஜனமும் இல்லாத அமைப்பாகும். எந்த மாநிலத்திற்கும் அதனால் பயனே கிடையாது. ஆந்திரா, பீகாருக்கு வேண்டும் என்றால் அள்ளிக் கொடுக்கலாம். மாநிலங்களை மாற்றான் தாய் மனப்பான்மையோடு பிரிப்பதற்கு தான் மத்திய அரசு தொடர்ந்து முயற்சிக்கிறது. நிதி ஆயோக் ஏதோ ஒரு வகையில் அதற்கு துணை போகிறது.

ஆளுநர்களை வைத்து மாநில அரசுகளை செயல்பட விடாமல் முடக்குகிறார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். அது உண்மைதான். ஆனால் காங்கிரஸ் கட்சியும் அதே தவறை செய்தது. ஆளுநர் பதவி தேவையா? என்கிற விவாதம் அரசியல் நிர்ணய சபையில் வருகிறபோது அந்த பதவி தேவை, ஏனென்றால் சுதந்திர இந்தியா சமஸ்தானங்களால் ஆனது இது ஒற்றுமைப்பட வேண்டும். அதற்கு ஒரு பெரிய மனிதர் வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒருவர் இருந்தால் அவர் பெரிய மனித தன்மையுடன் மத்திய, மாநில அரசுகளுக்கு பாலமாக செயல்படுவார் என்ற உயரிய நோக்கத்தில் உருவாக்கப்பட்ட பதவி அது. தமிழக ஆளுநர் ரவிக்கு மாதம் ரூ.3 லட்சம் சம்பளம் தருகிறோம். அவருடைய செலவு, போக்குவரத்தை கணக்கிட்டு பாருங்கள். அதற்கு தமிழ்நாட்டு மக்கள் வரிப்பணம் தான் பயன்படுகிறது. விருதுகளை மாநில அரசுகள் தான் வழங்க வேண்டும். ஆனால் ரவி, தன்னிச்சையாக விருதுகளை அறிவிப்பார். விருது வாங்குவதற்கு என்றே ஒரு கூட்டம் ராஜ்பவனை சுற்றி வந்துகொண்டிருக்கிறது. அதை நாம் பார்க்கிறோம். இந்த விருதுகளுக்கு நாம் தான் செலவு செய்து கொண்டிருக்கிறோம்.

மாநாட்டை புறக்கணித்து "நானே ராஜா" என்று சூட்டிக்கொண்ட  மகுடம் கீழே இறக்கிய துணைவேந்தர்கள்!

ஜனாதிபதிக்கு காலக்கெடு விதிக்க காரணம் ரவிதான். அவர் தமிழ்நாட்டிற்கு நல்லெண்ண தூதராகவே செயல்படவில்லை. அவர் ஒரு அரசியல் கட்சியின் தலைவர் போல பேசிக் கொண்டே இருப்பார். அதுபோன்ற அரசியல் கருத்துக்களை தெரிவிக்க ஆளுநர்களுக்கு உரிமையோ, அருகதையோ கிடையாது. அவர் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட காலம் இருக்கும் ஒரு சிறப்பு விருந்தினர். அதை தாண்டி அவருக்கு  எந்த அதிகாரமும் கிடையாது. இன்னும் சொல்லப் போனால் பல்கலைக்கழங்களின் வேந்தர் என்கிற முறையில் அவருக்கு என்று ஒரு சில அதிகாரங்கள் இருந்தன. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் காரணமாக அந்த அதிகாரமும் பறிக்கப்பட்டு விட்டது. இன்றைய தேதிக்கு அவர் ராஜ்பவன் என்கிற அவ்வளவு பெரிய விஸ்தாரமான மாளிகையில் ரொம்ப ஒய்யாரமாக இருக்கிற, நமக்கு வேண்டாத நபர் ஒருவராக தான் நான் அவரை பார்க்கிறேன். மத்திய அரசு, ஆளுநரை வைத்து புறவாசல் வழியாக என்ன வேண்டும் என்றாலும் செய்தாலும் தமிழ்நாட்டு அரசியலில் என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்தும். ரவி நீடிக்க நீடிக்க பாஜகவின் சொற்ப வாக்கு வங்கியும் பாதிக்கும்.

போலீசார் தாக்கியதால் வீரப்பனின் மைத்துனர் மரணம்..? வழக்கைக தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் அரசாங்கத்திற்கு கொடுத்த உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. பொதுவாக விடுமுறை கால அமர்வுகளில் மிகவும் சிக்கலான வழக்குகளை விசாரணைக்கு எடுக்க மாட்டார்கள். பிணை கொடுப்பது போன்ற அவசரமான வழக்குகளை மட்டும்தான் விசாரணைக்கு எடுத்துக்கொள்வார்கள். ஆனால் குறிப்பிட்ட வழக்கில் ஏற்கனவே உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு உள்ளது. அந்த  தீர்ப்பில் உள்ள ஒரு அம்சத்தை சுட்டிக்காட்டிய வழக்கு. அதை விசாரிக்கலாமா? கூடாதா? என்பதே பெரிய விஷயம். யுஜிசியின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு எப்போது சட்டப்பூர்வமாக மதிப்பு என்றால்? எப்போது தாவா வருகிறதோ அப்போது உண்டு. ஆனால் இந்த வழக்கில் மாநில அரசு உச்சநீதிமன்ற உத்தரவுக்கு இணங்க, உச்ச நீதிமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை அமல்படுத்தும் விதமாக அரசாணைகளை வெளியிடுகிறது. இந்த சட்டங்கள் யுஜிசியின் விதிகளை மீறுகிறது என்றால? வேறு வழிகிடையாது. அது மாநில சட்டத்ததை விட உயர்வானது அல்ல. மத்திய அரசின் என்கிறபோது, மாநில அரசின் சட்டத்தை விட உயர்ந்தது. ஆனால் இது வழிகாட்டு நெறிமுறை. இது மாநில அரசின் சட்டத்தை விட குறைந்தது தான். அப்போது வழிகாட்டு நெறிமுறைகளை மீறினால் அது குறித்த கேள்வியே வராது.

இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனங்களுக்கு உத்தரவு! உச்ச நீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வு

யுஜிசியின் நெறிமுறைகள் குறித்து பல மாநிலங்கள் போட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. அப்போது, இந்த வழக்கை இயல்பாக உச்சநீதிமன்றத்திற்கு மாற்றி இருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்ய விடாதவாறு சென்னை உயர்நீதிமன்றம் தடை வழங்கியுள்ளது. உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பு கொடுத்துவிட்டது. அதன் படி தமிழ்நாடு அரசு சட்டங்களை நிறைவேற்றியதாக பொருள்கொண்டு விதிகளை மாற்றிவிட்டது. அதன் பிறகு இது உயர்நீதிமன்றத்தின் வரம்புக்குள் வருமா? என்பது சந்தேகம். இந்த வழக்கை இவ்வளவு அவசரமாக விசாரிக்க வேண்டுமா?  அப்படி என்றால் உள்நோக்கம் கொண்டது என்றுதான் வாதிடுவார்கள். அதை உச்சநீதிமன்றம் உணர்ந்து கொண்டால் உயர்நீதிமன்றத்திற்கு கண்டனம் வரும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ