மருத்துவர் ராமதாசுக்கு பாஜக கூட்டணியில் உடன்பாடு இல்லை என்றும், அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்காவிட்டால் அவர் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்திருப்பார் என்றும் அனைத்து இந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சி தலைவர் சி.என்.ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்

பாமக நிறுவன ராமதாஸ், அன்புமணி சந்திப்பு தொடர்பாக சி.என்.ராமமூர்த்தி யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- தைலாபுரம் இல்லத்தில் நடைபெற்ற ராமதாஸ் – அன்புமணி சந்திப்பின்போது ஆர்எஸ்எஸ் – பாஜக பிரமுகரான ஆடிட்டர் குருமூர்த்தியும் பங்கேற்றுள்ளார். அன்புமணி மீது உள்ள ஊழல் வழக்குகளில் அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டால் அவர் சிறை செல்ல நேரிடும். அதன் காரணமாக தான் அன்புமணி, பாஜக உடன் கூட்டணிக்கே சென்றார். காலை வரை அதிமுக உடன் கூட்டணி செல்ல பேசிவிட்டு, பின்னர் பாஜக கூட்டணிக்கு சென்றனர். அப்போதும் கூட்டணி ஒப்பந்தத்தில் ராமதாஸ் தான் கையெழுத்து போட்டார். அன்புமணிக்கு அதற்கான அதிகாரம் கிடையாது. அப்போது, தேசிய நலன் கருதி கூட்டணி என்று ராமதாஸ் சொன்னார். தற்போது பிரச்சினையே அமித்ஷா வந்தால் அன்புமணி போய் அவருடன் கூட்டணியை உறுதி செய்துவிடுவார் என்றுதான் தலைவர் பதவியில் இருந்து அவரை நீக்கியதே. ராமதாசுக்கு பாஜக உடன் கூட்டணி செல்வதில் உடன்பாடு கிடையாது.
பாமகவில் நடைபெறும் பிரச்சினைகளுக்கு எல்லாம் அன்பழகன் என்பவர்தான் காரணம் என்று அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். பாமகவின் தலைமை நிலைய செயலாளராக இருக்கும் அன்பழகன், திருவெண்ணை நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் முன்னாள் சேர்மேனாக இருந்தவர். தற்போது ராமதாஸ் உடன் இருந்துகொண்டு அவருக்கு ஊடகங்கள் தொடர்பான செய்திகளை எல்லாம் செய்து கொண்டிருக்கிறார். அன்புமணி, தனக்கு பனையூரில் அலுவலகம் உள்ளது. கட்சியினர் அங்கே வந்து சந்தியுங்கள் என்று சொன்னபோதே, 25 பேரிடம் பணம் வாங்கிக்கொண்டு புதிய மாவட்ட செயலாளர்களை நியமிக்க ராமதாஸ் முடிவு செய்தார். தற்போது புதிய மாவட்ட செயலாளர்களை ராமதாஸ் அறிவித்து வருகிறார். ஆனால் இதற்கு ஏற்பாடு செய்பவர், முன்னாள் சமூக முன்னேற்ற சங்கத் தலைவரான பரந்தாமன் ஆவார். மேல்மருத்தூர் பங்காரு அடிகளாரின் இளைய மகன் செந்தில் உடன்தான் இந்த பரந்தாமன் இருப்பார். அவர்கள் தான் இந்த வேலைகளை எல்லாம் செய்து கொடுக்கிறார்கள். அன்பழகனை பீடை என்று சொல்கிறார். எஸ்.ஐ.எஸ் முன்னாள் தலைவர் பரந்தாமன், தற்போதைய தலைவர் சிவபிரகாசம் ஆகியோரை பீடை என்று அந்த வீடியோவில் சொல்கிறார். அவர்கள்தான் என் அப்பாவை கெடுக்கிறார்கள் என்று சொல்கிறார்.
ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரன், லைகா நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பில் இருந்து வந்த நிலையில், அன்புமணியின் சகோதரி காந்திமதியின் மூத்த மகன் மருத்துவர் சுகந்தனுக்கு அந்த பொறுப்பை மாற்றிக் கொடுங்கள், உங்களுக்கு கட்சி இளைஞரணி தலைவர் பொறுப்பை தருகிறோம் என்று சொல்லி தான் கூட்டி வந்தனர். லெட்டர் கொடுத்த உடன் அதை கிழித்துபோட்டுவிட்டு அங்கிருந்து போய்விடு என்று சொல்லிவிட்டார். அவரை பொதுக்குழு கூட்டத்திற்கு பார்வையாளராக கூட அனுமதிக்கவில்லை. ராமதாஸ், சேலம், தருமபுரி போன்ற வெளியூர் செல்கிறபோது அங்கு கட்சியினரை சந்திக்கக்கூடாது என்று சௌமியா தனக்கே உத்தரவு போடுவதாக ராமதாஸ் சொல்கிறார். அன்புமணி தனது பேச்சை கேட்காததால் தலைவர் பதவியை எடுத்துகொண்டுவிட்டார். 2022 மே 28ல் பொதுக்குழுவால் நான் தலைவராக தேர்வு செய்யப்பட்டவன். தன்னை நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்று அன்புமணி சொல்கிறார். பாமக சட்டவிதிகளின்படி, கட்சியின் மாநில பொதுக்குழு, செயற்குழு, அரசியல் தலைமைக்குழுவின் கூட்டங்களுக்கு நிறுவனர் அழைக்கப்பட்டு, அவர் வழிகாட்டுதல் படிதான் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். தற்போது ராமதாசே தலைவராகி விட்டதால், அனைத்து அதிகாரங்களும் அவர் கைகளுக்கே வந்துவிட்டது.
இன்றைக்கு ராமதாசை, அன்புமணி சந்தித்து பேசிவிட்டு சென்றுவிட்டார். சந்திப்பின் போது என்ன பேசப்பட்டது என்று விரைவில் அவர் தெரிவித்துவிடுவார். இருவருக்கும் இடையில் உள்ளது பணப்பிரச்சினையோ, அதிகார பிரச்சினையோ கிடையாது. ராமதாசின் பேச்சை கேட்டுக்கொண்டு இருந்தால் இருக்கலாம். இல்லாவிட்டால் போய்விடலாம் என்று சொல்கிறார். பாமகவில் அதிகாரம் என்பது ராமதாஸ்தான். தேர்தலில் போட்டியிட யார் சீட் கொடுக்க முடியும். ராமதாஸ்தான் கொடுக்க முடியும். வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் அவரிடம் தான் உள்ளது. பாமகவை அனைத்து தரப்பு மக்களுக்குமான கட்சியாக தான் தொடங்கினோம். அம்பேத்கர் சிலையை திறந்தேன் என்கிறீர்கள். பிறகு எதற்காக அவர்களது வீட்டை கொளுத்த சொல்கிறீர்கள். நாடகக் காதல் என்கிறீர்கள்.
அன்புமணி தனி ஆவர்த்தனம் செய்ய வேண்டும் என்று நினைத்துவிட்டார். தனியாக கட்சி அலுவலகம் எல்லாம் போட்டுவிட்டார். அதேவேளையில், தவெக உடன் கூட்டணி பேசுவதாக செய்தி வெளியாகிறது. 2016 சட்டமன்றத் தேர்தலை போல சேர்ந்து செய்யலாம் என்று சொல்கிறார்கள். 11 ஆண்டு காலம் மத்திய அமைச்சரவையில் பாமகவினர் இருந்தனர். ஒரே ஒரு தமிழனுக்கு வேலை கொடுத்தீர்களா? ரயில்வேயில் வேலைக்கு எடுத்தபோது எதாவது செய்தார்களா? என்.எல்.சி பிரச்சினையை தீர்த்து வைத்தார்களா? நான் தான் வழக்குபோட்டு இன்றைக்கு நிரந்தர தீர்வை கண்டுள்ளேன். என்எல்சிக்கு இடம் கொடுத்தவர்களுக்கு எல்லாம் வேலை கொடுக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுபோன்று நாங்கள் நிறைய செய்துள்ளோம். அவை எல்லாம் மலுங்கடிக்க, மறைக்கடிக்கப்படுகின்றன, இவ்வாறு அவர் தெரிவித்தார்.