spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைசேட்டையை ஆரம்பித்த விஜய்! தெரியாம வந்து சேர்ந்துட்டேன்! கதறி துடிக்கும் செங்கோட்டையன்!

சேட்டையை ஆரம்பித்த விஜய்! தெரியாம வந்து சேர்ந்துட்டேன்! கதறி துடிக்கும் செங்கோட்டையன்!

-

- Advertisement -

செங்கோட்டையன் தவெகவில் இணைந்தபோதும், அவர் பாஜக உடன் தொடர்பில் இருப்பார் என்றும், அவர்கள் விஜயுடன் கூட்டணி பேச உறுதுணையாக இருப்பார் என்றும் மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

செங்கோட்டையனுக்கு தவெகவில் முக்கியத்துவம் அளிக்கப்படுமா என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- தவெக தலைவர் விஜய் ஈரோட்டில் சுற்று பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும், அந்த பயணத்தை செங்கோட்டையன் ஒருங்கிணைப்பதற்கான திட்டத்தை கொடுத்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. செங்கோட்டையன், நெருக்கடி காரணமாகவே தவெகவில் இணைந்திருக்கிறார். அவருக்கு வேறு வழியில்லை.

தவெகவில் அவருக்கு கொங்கு மண்டலத்திற்கான அமைப்பு செயலாளர் பொறுப்பை வழங்கியுள்ளனர். எல்லோரும் செங்கோட்டையன், விஜய்க்கு நிறைய ஐடியாக்களை கொடுப்பதாக சொல்கின்றனர். அவர் சொல்லிக்கொடுக்க தான் முடியும். மாணவர்கள் தான் படித்து தேர்வு எழுத வேண்டும். விஜய் எந்த மாதிரி தேர்வு எழுதுவார் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

தேர்தல் நேரத்தில் வேட்பாளர் என்று வரும்போது விஜய்க்கு மிகப்பெரிய பின்னடைவு இருக்கிறது. தமிழகத்தில் இரண்டாவது பெரிய கட்சி என்று விஜய் பொய்யான பிம்பத்தை மூளை சலவை செய்கிறார். அப்படி சொன்னவர்களில், நிறைய பேர் தோற்று போய் இருக்கிறார்கள். திமுகவுக்கு மாற்று அதிமுக என்று சொன்னபோது வெற்றி பெற்றது. அது நிரூபிக்கப்பட்டது. திமுகவுக்கு எதிர் மதிமுக என்று சொன்னபோது அது நிரூபணம் ஆகவில்லை. அதிமுகவில் இருந்து அமமுகவும், காங்கிரசில் இருந்து தமாகாவும் பிரிந்தன. ஆனால் அவற்றில் எதுவும் பெரிதாக வரவில்லை. தனி மனிதர்களை விட ஒரு இயக்கம் என்பது எப்போதும் பெரியது. ஆனால் செங்கோட்டையன் திமுகவும், அதிமுகவும் ஒன்று என்று சொல்கிறார்.

செங்கோட்டையன்

செங்கோட்டையனுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் செம்மலை கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். செங்கோட்டையனுக்கும், தவெகவில் உள்ளவர்களுக்கும் மிகப்பெரிய தலைமுறை இடைவெளி உள்ளதாகவும், அவரால் தவெகவினருடன் ஒட்டவே முடியாது என்றும் கூறியுள்ளார். அதிமுகவில் செங்கோட்டையனின் சமகாலத்தை சேர்ந்த செம்மலை, பொன்னையன் போன்ற தலைவர்கள் உள்ளனர். அவர்கள் மூலம் செங்கோட்டையனை சமாளித்து விடுவார்கள். ஒருவேளை அதிமுகவுக்கு சில இடங்களில் தவெக வலுவான போட்டியாக வரும் என்றால் அப்போது சி.வி.சண்முகம், வளர்மதி போன்ற தலைவர்களை வைத்து எதிர்கொள்வார்கள்.

அதிமுகவில் பேச்சாளர்களுக்கோ, வியூக வகுப்பாளர்களுக்கோ பஞ்சம் கிடையாது. தவெக தரப்பில்  செங்கோட்டையனுக்கு அளிக்கப்படும் பிம்பம் என்பது மிகையானது ஆகும். கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் செங்கோட்டையன் தொடர் வெற்றிகளை பெற்றுள்ளார். அதற்கு காரணம் இரட்டை இலை சின்னம். இன்றைக்கு இரட்டை இலை சின்னம் இல்லாமல் விஜய் களம் காண போகிறார். அவர் வெற்றிபெறுவது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது முதல் கேள்வி.

விஜய், முதலமைச்சர் என்று செங்கோட்டையன் இதுவரை பேசவில்லை. அவர் அப்படி பேசினால் நிர்மலா சீதாராமன் அவரை கடிந்துகொள்ள மாட்டாரா? அப்படி சொன்னால் ஓபிஎஸ் நெஞ்சு வெடித்துவிடாதா? ஜனநாயகன் படம் வெளியாகும் வரை தவெகவில் அமைதியாக இருப்பார்கள். பொங்கல் பண்டிகையின்போது தமிழக அரசியல் ஜோராக இருக்கும். உள்துறை அமைச்சர் அமித்ஷா, பனையூருக்கு சென்று விஜயிடம் பேசவும் வாய்ப்பு உள்ளது. கரூர் கூட்டநெரிசல் வழக்கு சிபிஐக்கு போனது தவெகவுக்கு வெற்றி எல்லாம் கிடையாது. அது அவர்களின் கழுத்தை சுத்திய பாம்பு ஆகும்.

ஏன் செங்கோட்டையனுக்கு பாஜக அசைன்மெண்ட் கொடுத்து விஜயிடம் அனுப்பி இருக்கக்கூடாது என்று நான் கேள்வி எழுப்பி இருந்தேன். நாளைக்கு விஜயை பாஜக தொடர்பு கொள்ளவோ, அமித்ஷா அலுவலகத்தில் இருந்து விஜயிடம் பேசுவதற்கோ செங்கோட்டையன் உறுதுணையாக இருப்பார். அமித்ஷா தமிழ்நாடு வருகிறபோது தமிழ்நாட்டில் சில விஷயங்களை ஒர்க்அவுட் செய்வார். செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து வெளியேறியது மேற்கு மாவட்டத்தில் பெரிய பிரச்சினை கிடையாது. அதிகபட்சமாக அது கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியின் பிரச்சினையாக தான் பார்க்கப்படும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ