ஆவடி காவல் ஆணையரகத்தில் 78வது சுதந்திர தினத்தையொட்டி ஆணையர் சங்கர் மூவர்ண தேசிய கொடியை ஏற்றினார்.
நாட்டின் 78வது சுதந்திர தினத்தையொட்டி ஆவடி காவல் ஆணையரகத்தில் சுதந்திர தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் ஆவடி காவல் ஆணையர் சங்கர் மூவர்ண தேசிய கொடியை ஏற்றி, காவலர்களின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.
இதனை தொடர்ந்து நாட்டின் சுதந்திரத்தை குறித்து நடைபெற்ற மாணவ மாணவிகளின் இசை கலை நிகழ்ச்சிகள் காண்போரை வெகுவாக கவர்ந்தது.
அறிவுசார் மாற்றுத்திறனாளிகளுக்கான தங்கும் விடுதி திறப்பு : அமைச்சர் கீதா ஜீவன்
அதன்பின் காவல் ஆணையரகத்தில் உள்ள அனைத்து துறைகளிலும் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி ஆணையர் சங்கர் கெளரவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையர் ராஜேந்திரன், போக்குவரத்து துணை ஆணையர் ஜெயலட்சுமி, துணை ஆணையர் ஐமன் ஜமால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் ஆய்வாளர்கள், காவலர்கள் பலர் கலந்து கொண்டன்ர்.