spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆவடிஆவடி காவல் ஆணையரகத்தில் அண்ணாமலை மீது அதிமுக சார்பில் புகார்

ஆவடி காவல் ஆணையரகத்தில் அண்ணாமலை மீது அதிமுக சார்பில் புகார்

-

- Advertisement -

ஆவடி காவல் ஆணையரகத்தில் அண்ணாமலை மீது அதிமுக சார்பில் புகார்முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, அவதூறாக பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆவடி காவல் ஆணையரகத்தில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் புகார் அளித்தனர்.

முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அவதூறாக பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதிலும் அதிமுகவினர் அண்ணாமலையின் உருவ பொம்மை எரித்து தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

we-r-hiring

ஆவடி காவல் ஆணையரகத்தில் அண்ணாமலை மீது அதிமுக சார்பில் புகார்

அதன் ஒரு பகுதியாக, திருவள்ளூர் தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு சார்பில், மாவட்ட செயலாளர் வி.அலெக்ஸாண்டர் தலைமையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. இதில், முன்னாள் அமைச்சரும், அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில செயலாளருமான எஸ்.அப்துல் ரஹீம், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் டி. அறிவரசன் உட்பட அதிமுக நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் ஆவடி காவல் ஆணையத்தில், காவல்துறை அதிகாரிகளை சந்தித்து புகார் மனுவினை அளித்தனர்.

ஆவடி காவல் ஆணையரகத்தில் அண்ணாமலை மீது அதிமுக சார்பில் புகார்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அறிவரசன் கூறுகையில், ”எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர்,மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்,பல ஆண்டுகளாக அமைச்சராக இருந்தவர்.அவரை, பொது மேடையில் எவ்வாறு பேச வேண்டும் என்று தெரியாமல், அவதூறான வார்த்தைகளை அண்ணாமலை பேசி வருகிறார்.

அண்ணாமலையின் இந்த பேச்சு அதிமுக தொண்டர்கள் மத்தியில் கலகத்தையும் வன்முறையும் தூண்டும் வகையில் பேசி உள்ளார், எதிர்க்கட்சித் தலைவர்களை இழிவாக பேசி அதன் மூலம் விளம்பரம் தேடும் அண்ணாமலையை வன்மையாக கண்டிக்கிறோம்.எடப்பாடி பழனிசாமியை பற்றி சட்டத்திற்கு புறம்பான, கடுமையான வார்த்தைகளால் பேசுவதற்கு அவருக்கு என்ன உரிமை உள்ளது. அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளோம்” என இவ்வாறு அவர் கூறினார்.

MUST READ